Tuesday, 14 November 2017

பிரண்டை pirandai

பிரண்டை இதற்கு வஜ்ஜிரவல்லி இரயில் கற்றாழை என்கின்ற பெயரும் உண்டு இதன் தண்டுகள் நாடகர வடிவங்களில் இரயில் பெட்டிகளைப்போல இணைந்தாற்போல் இருப்பதால் இது இரயில் கற்றாழை என்று முக்கிதுவதுடன் அழைக்கபடுகின்றது இதன்தண்டுகளின் கணுக்களில் பிடிபுகளுகாக பற்றும் கம்பிகளை போலவும் மடலான இலைகளை கொண்டிருக்கும். இதன் சாறு உடலில் பட்டாலே நமைச்சல் ஏற்படும்,அரிப்பு உண்டாகும்.இதனை பக்குவபடுத்தி துவையல் செய்து உண்ணும் பொழுது மாபெரும் மூலிகையின் குணங்கள் கிடைகின்றது.இப்பிரண்டை வகைகளில் முககோண மற்றும் உருளை வடிவங்களிலுமுள்ளது.எனினும் நட்கரவடிவில்  பிரண்டைகளே அதிகம் காணப்படுவதுடன் மூலிகை குணமும்  அதிகம் நிறைந்துள்ளது.இப்பிரண்டை கொடிகளில் நுனியிலுள்ள கொழுந்தான தண்டுகளை மட்டும் இலைகள் இல்லாமல் பறித்து வந்து இணைகின்ற கனுகளை அகற்றி,மெல்லியதாக வரும் நார்களைஎல்லாம் அகற்றி எஞ்சிய பிரண்டை தண்டுகளை   சிறு சிறு துண்டுகளாக்கி 400 கிராம்   எடுத்துக்கொள்ளுங்கள். பிரண்டையை   எப்போதும்,உரலிலோ அரவைஇயந்திரத்திலோ மிக்சியிலோ ஆட்டும் போதும் அரைக்கும் போதும் நமைச்சல் ஏற்படலாம்,பயப்படவேண்டாம் கிராமங்களில் தோட்டந்தொரவுகளில் காய்கறி செடி கொடி பயிர்களை வேளாண்மை செய்யும் பொழுது  இடையிடையே இப்பிரண்டை கொடிகளையும் நற்று வைத்து வளர்ப்பார்கள்,அதாவது தாவரங்களைதாக்கும் நோய் கிருமிகள்,பூச்சி,புழுக்கள் உண்ணவரும் கால்நடைகள் இந்த பிரண்டையை  உண்டுவிட்டால் அதன் வாய்பகுதி பிரண்டையின் வடிவமான   அரிப்பால்    தாங்க முடியாமல் விட்டால் போதும் என்று ஒதுங்கி  விடும்,இதன் மூலம் மற்ற தாவரங்களும் பாதுகாக்கப்படும்.

No comments:

Post a Comment