Sunday, 19 November 2017

✍✍✍✍✍✍✍✍✍✍ நவம்பர் 19 இன்று சர்வதேச 💪ஆண்கள் தினம் *ஆண்களை பற்றி ஒரு மனைவி எழுதியது* ஆண்களுக்கான கவிதை # ஆண்கள் தினம் #ஆண்கள் பாதுகாப்பு # ஆண்கள் சங்கம் ( நவம்பர் 19/11/2017 )

✍✍✍✍✍✍✍✍✍✍
நவம்பர் 19
இன்று சர்வதேச
💪ஆண்கள் தினம்
*ஆண்களை பற்றி ஒரு மனைவி எழுதியது*

*ஆண் என்பவன்...*

*கடவுளின் உன்னதமான படைப்பு.*

*சகோதரிகளுக்காக, இனிப்புகளை தியாகம் செய்பவன்..*

*பெற்றோர்களின் ஆனந்தத்திற்காக, தன் கனவுகளை தியாகம் செய்பவன்.*

*காதலிக்கு பரிசளிக்க,*
*தன் பர்ஸை காலி செய்பவன்.*

*மனைவி குழந்தைகளுக்காக ,  தன் இளமையை அடகு வைத்து அலட்டிக் கொள்ளாமல் அயராது உழைப்பவன்.*

*எதிர்காலத்தை லோன் வாங்கி கட்டமைத்துவிட்டு, அதனை அடைக்க வாழ்க்கை முழுதும் லோ லோ என்று அலைபவன்..*

*இந்த போராட்டங்களுக்கு இடையில்,*
*மனைவி-தாய்-முதலாளிகளின் திட்டுகளை வாங்கி,*
*தாங்கிக்கொண்டே ஓடுபவன்.*

*அடுத்தவர்களின் ஆனந்தத்திற்காகவே ஆயுள் முழுக்க அர்ப்பணிப்பவன்.*

*அவன் வெளியில் சுற்றினால்,*
*'உதவாக்கரை' என்போம்.*

*வீட்டிலேயே இருந்தால்,*
*'சோம்பேறி' என்போம்.*

*குழந்தைகளை கண்டித்தால்,*
*'கோபக்காரன்' என்போம்,*

*கண்டிக்கவில்லை எனில்,*
*'பொறுப்பற்றவன்' என்போம்.*

*மனைவியை வேலைக்கு செல்ல, அனுமதிக்காவிடில்*
*'நம்பிக்கையற்றவன்' என்போம்,*

*அனுமதித்தால் 'பொண்டாட்டி சம்பாத்தியத்தில் பொழப்பை ஓட்டுபவன்' என்போம்.*

*தாய் சொல்வதை கேட்டால்,*
*'அம்மா பையன்' என்போம்.*

*மனைவி சொல்வதை கேட்டால்,*
*'பொண்டாட்டி தாசன்' என்போம்.*

*ஆக மொத்தத்தில் ஆண்களின் உலகம், தியாகங்களாலும் வியர்வையாலும் சூழப்பட்டது.*

*இதனை பகிர்ந்து, ஆண்களுக்கு புன்னகையையும்*

*பெண்களுக்கு புரிதலையும், ஏற்படுத்தலாம்...*

*ஆண்*

*அழத் தெரியாதவன் அல்ல*
கண்ணீரை
மறைத்து வைக்கத் தெரிந்தவன் ..

*அன்பில்லாதவன் அல்ல*
அன்பை மனதில் வைத்து
சொல்லில் வைக்கத் தெரியாதவன் ..

*வேலை தேடுபவன் அல்ல*
தன் திறமைக்கான
அங்கீகாரத்தை தேடுபவன் ..

*பணம் தேடுபவன் அல்ல*
தன் குடும்பத்தின்
தேவைக்காக ஓடுபவன் ..

*சிரிக்கத் தெரியாதவன் அல்ல*
நேசிப்பவர்களின் முன்
குழந்தையாய் மாறுபவன் ..

*காதலைத் தேடுபவன் அல்ல*
ஒரு பெண்ணிடம்
தன் வாழ்க்கையை தேடுபவன் .

பாசத்தின் உருவங்கள் 

உழைப்பில் எட்ட முடியாத

சிகரங்கள் 

அளவுக்கு அதிகமாய் 

அன்பு செலுத்துபவர்கள், 

அடங்கிப்போவதை 

அறவே வெறுப்பவர்கள், 

தன்னம்பிக்கை, சுதந்திரம் என, 

வளைய வருபவர்கள், 

அன்னையே தெய்வமென 

தொழுவதில் வல்லவர்கள்,

அவசியமில்லாமல் 

அழுவதில்லை இவர்கள்! 

முரட்டுத்தனம், பிடிவாதம் 

இவர்களது உடன்பிறப்பு! 

என்றாலும்....... 

பெண்களை ஈர்க்கும் இவையே 

தனிச்சிறப்பு! 

வீரம் புரிவதில் விருப்பமுண்டு, 

வாலிபத்தில் பிடிவாதமும் 

பிடிப்பதுண்டு! 

*கரடுமுரடானவன் அல்ல ..*
நடிக்கத் தெரியாமல்
கோபத்தை கொட்டிவிட்டு
வருந்துபவன் ..

அன்பாய், பாசமாய், 

உயிராய், உணர்வாய் இருக்கும் 

நட்புக்களுக்கும், சகோதரர்களுக்கும் 

* நவம்பர் 19
இன்று சர்வதேச
ஆண்கள் தின நல்வாழ்துக்கள்

No comments:

Post a Comment