Wednesday, 29 November 2017

திரு அருட் பிரகாசவள்ளலார் அருளிய மனுமுறை கண்ட வாசகம் Manumurai kanda vasagam 

நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ!
வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ!
தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ!
கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேனோ!
மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ!
குடிவரி யுயர்த்திக் கொள்ளை கொண்டேனோ!
ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ!
தருமம் பாராது தண்டஞ் செய்தேனோ!
மண்ணோரம் பேசி வாழ்வழித்தேனோ!
உயிர்க்கொலை செய்வோர்க்க உபகாரஞ் செய்தேனோ!
களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ!
பொருளை இச்சித்துப் பொய் சொன்னேனோ!
ஆசைகாட்டி மோசஞ் செய்தேனோ!
வரவுபோக் கொழிய வழியடைத்தேனோ!
வேலையிட்டுக் கூலி குறைத்தேனோ!
பசித்தோர் முகத்தைப் பாராதிருந்தேனோ!
இரப்போர்க்குப் பிச்சை இல்லையென்றேனோ!
கோள் சொல்லிக் குடும்பங் குலைத்தேனோ!
நட்டாற்றிற் கையை நழுவவிட்டேனோ!
கலங்கி யொளித்தோரைக் காட்டிக்கொடுத்தேனோ!
கற்பழிந்தவளைக் கலந்திருந்தேனோ!
காவல் கொண்டிருந்த கன்னியை அழித்தேனோ!
கணவன்வழி நிற்போரைக் கற்பழித்தேனோ!
கருப்பமழித்துக் களித்திருந்தேனோ!
குருவை வணங்கக் கூசிநின்றேனோ!
குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ!
கற்றவர் தம்மைக் கடுகடுத்தேனோ!
பெரியோர் பாட்டிற் பிழைசொன்னேனோ!
பக்ஷியைக் கூண்டில் பதைக்க அடைத்தேனோ!
கன்றுக்குப் பாலு‘ட்டாது கட்டிவைத்தேனோ!
ஊன்சுவை யுண்டு உடல் வளர்த்தேனோ!
கல்லும் நெல்லும் கலந்து விற்றேனோ!
அன்புடையவர்க்குத் துன்பஞ் செய்தேனோ!
குடிக்கின்ற நீருள்ள குளந் து‘ர்த்தேனோ!
வெய்யிலுக் கொதுங்கும் விருக்ஷ மழித்தேனோ!
பகைகொண்டு அயலோர் பயிரழித்தேனோ!
பொதுமண்டபத்தைப் போயிடித்தேனோ!
ஆலயக் கதவை அடைத்து வைத்தேனோ!
சிவனடியாரைச் சீறி வைதேனோ!
தவஞ் செய்வோரைத் தாழ்வு சொன்னேனோ!
சுத்த ஞானிகளைத் தூஷணஞ் செய்தேனோ!
தந்தைதாய் மொழியைத் தள்ளி நடந்தேனோ!
தெய்வ மிகழ்ந்து செருக்கடைந்தேனோ!
என்ன பாவம் செய்தேனோ! இன்னதென்றறியேனே!

Manumurai kanda vaasagam
Vallalar(Manu Murai Kanda Vasagam) 

In the past births

Alas!
Did i ever wound the feeling of good!

Did i ever desert a friend in the mid way!

Did i drag an innocent to the court and spoil his honor!

Did i ever prevent a philanthropist from offering!

Did i ever create misery to intimate friends!

Did i ever do wicked for dearest friends!

Did i ever enhance the house tax and thereby i looted anyone!

Did i ever cause the poor people's belly burn!

Did i ever punish any person without compassion!

Did i ever spoil anybody's life by conspiracy!

Did i ever aid and abet the murderer!

Did i ever tell crooked route to the robber!

Did i ever tell lie for the sake of wealth!

Did i ever betray anyone after inducing desire!

Did i ever fence the public to and fro passage!

Did i ever reduce the wage after getting work done!

Did i ever remain without looking into the face of hungry people!

Did i ever say no to the beggars!

Did i ever spoil any family by scandal!

Did i ever disclose the hiding place of an innocent!

Did i ever indulge in sex with an unchaste woman!

Did i rape a virgin under guard!

Did i ever spoil the chastity of a married woman!

Did i ever cause abortion and be happy!

Did i ever hesitate to salute preceptors!

Did i ever forget to pay the teacher's fees!

Did i ever insult any learned scholar!

Did i ever find fault with great men's hymns!

Did i ever imprison any bird in a cage!

Did i ever tie up a calf of without feeding it!

Did i ever eat meat for the growth of my body!

Did i ever sell adulterated food stuff!

Did i ever do pain to the beloved person!

Did i ever close tank of a drinking water!

Did i ever cut down the shady tree!

Did i ever ruin the field of others out of enmity!

Did i ever demolish a public inn!

Did i ever keep the temple door closed!

Did i ever scold any devotee of God!

Did i ever ridicule any saint doing penance!

Did i ever insult the genuine sages!

Did i ever violate the words of my father and mother!

Did i ever humiliate god out of conceit!

Did i commit any other sin other than these!

I don't know!.



Tuesday, 28 November 2017

அருள்மிகு தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் திருக்கோயில்  இத்திருக்கோயிலில் கந்த சஷ்டி உற்சவ விழா 20/10/2017 _ 26/10/2017 ஏழு நாட்கள் மிகச்சிறப்பாக நடைபெற்றது Chennai Thiruvottriyur Thiyagarajaswamy vadivudai amman temple kandha shasti utsavam festival

சென்னை திருவொற்றியூர்
Chennai Thiruvottriyur temple

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்றஅருணகிரிநாதர் பட்டினத்தார் இராமலிங்க சுவாமிகள் சுந்தரர் 

திருஞானசம்பந்தர் கம்பர் போன்ற இன்னும் பல அடியவர்களால் பாடல் பெற்ற ஸ்தலம்  

அருள்மிகு தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் திருக்கோயில் 

இத்திருக்கோயிலில் கந்த சஷ்டி உற்சவ விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது 

தொண்டை மண்டல சிவத்தலங்களில் 

ஒன்றாகிய திருவொற்றியூரின் கண் வீற்றிருக்கும் அருள்மிகு வடிவுடைஅம்மன் அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் வீற்றிருக்கும் 

அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமிக்கு 20/10/2017 வெள்ளிக்கிழமை முதல் 24/10/2017 செவ்வாய்க்கிழமை வரை மாலையில் அபிஷேகமும் பழனியாண்டவர் உற்சவமும் 

25/10/2017 புதன் கிழமை மாலை கந்தசஷ்டி உற்சவமும் 

26 ஆம் தேதி வியாழக்கிழமை மாலை  அருள்மிகு 

பால சுப்ரமணியர் திருக்கல்யாணம் மிகச்சிறப்பாக நடைபெற்றது 

7 நாட்கள் மிகவும் சிறப்பாக நடைபெற்ற இவ்விழாவில் சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் வழிபாடுகள் நடைபெற்றது 

இதில் எராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தியுடன் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

Friday, 24 November 2017

உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் புட்டிகளில் பாட்டில்களில் அடைத்து விற்கும் அந்நிய குளிர்பானங்கள்

உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் புட்டிகளில் பாட்டில்களில் அடைத்து விற்கும் அந்நிய (கூல்ட்ரிங்க்ஸ் ) Avoid bottled Cool drinks Drink only nature drinks like coconut water nature fruit juices  குளிர்பானத்தை அறுந்தி நீரிழிவு இருதயம் கிட்னி நுரையீரல் வயிறு சிறுநீரக கற்கள் மற்றும் பல நோய்களுக்கு ஆட்பட்டு மாண்டுபோவதை விட  நம் நாட்டில் இயற்கையாக கிடைக்கும் இளநீரை பருகி ஆயுள் முழுவதும் ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ்வோம் முடிந்தால் வீட்டின் சுற்றத்தில்  இடம் இருந்தால் நல்ல காய் கனி தென்னை மரம் பனை மரம் நட்டு போன்றவைகளை வளர்த்து அதிலிருந்து இயற்கையாக கிடைக்கும் இளநீர் நுங்கு போன்றவைகளை பயன்படுத்திகொள்ளலாம் 
சமூகவலைதளங்களில் 
படித்ததில் பகிர்ந்தது 
நன்றி

அதிகாலையில் எழுந்து ஓசோனை பெற்று ஆரோக்கியமாக வாழ்வோம்

*நள்ளிரவு தாண்டியும் WhatsApp, Facebook இல் காலம் கழிப்பவர்களே இதை கொஞ்சம் கவனிக்கவும்!*

நமது உடல் ஓர் அற்புத படைப்பு. அதில் ஆச்சரியப்படத்தக்க பல அம்சங்கள் உள்ளன!!

அதில் ஒன்றுதான் நமது உடலில் நேரத்தை தானாகவே ஒழுங்கு படுத்தும் உயிரியல் நேர முறைமை (Biological Clock System)!!!

இதனை வழி நடத்தும் ஒரு சுரப்பி நம் ஒவ்வொருவரின் தலையிலும் உள்ளது. அதுதான் பினியல் சுரப்பி!

*கடலை உருண்டை வடிவில் இருக்கும் இந்த PINEAL GLAND பார்வை நரம்புடன் இணைக்கப் பட்டுள்ளது!!*

இந்த பினியல் சுரப்பி; ஓர் அரிய பொருளை தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சுரக்கிறது!!

*அதுதான் மெலடோனின் (melatonin)!!*

இந்த அதிசய அரிய பொருளின் பலன் மகத்தானது! புற்று நோயைக் குணப்படுத்தும் இயற்கை மருந்து இந்தப் பொருளில் இருக்கிறது.

மெலடோனின் சுரக்க வேண்டும் என்றால்; ஒரே ஒரு நிபந்தனை. இரவின் இருளாக இருக்க வேண்டும்!!

*இரவின் இருளில்தான் பினியல் சுரப்பி மெலடோனினை சுரக்கும்!!*

*அதனுடன் இணைக்கப்பட்டுள்ள பார்வை நரம்பு மூலமாக; அது இரவின் இருளை அறிந்து கொள்ளும்!!*

*ஒவ்வொரு நாளும் இரவு 10க்குப் பிறகு இருளில் சுரக்கும். மெலடோனின், நமது இரத்த நாளங்களில் பாய்ந்தோடும்.!!*

*நமது கண்கள் வெளிச்சத்தில் பட்டுக் கொண்டிருந்தால் பினியல் சுரப்பி மெலடோனினை சுரக்காது!!*

*பினியல் சுரப்பி மெலடோனினை சுரக்க ஆர்மபித்து காலை 5 மணிக்கு  நிறுத்தி விடும்!!*

இரவு நீண்ட நேரம் கண் விழித்திருந்தால் நாம் புற்று நோயைக் குணப்படுத்தும் மெலடோனின் என்ற இயற்கை மருந்தை இழந்தவர்களாக இருப்போம்!!!!

எனவே இரவு முற்கூட்டியே உறங்கி அதிகாலையில் எழுவது புற்று நோயைத் தடுக்கும் என்று இன்று மருத்துவ உலகம் கூறுகிறது!!

அதே போன்று; அதிகாலையில் காற்று வெளி மண்டலத்தில் ஓஸோன் நிறைந்திருக்கும்.

ஒரு மனிதன் அதிகாலையில் எழுந்து நடமாட ஆரம்பித்தால்:; இந்த ஓஸோன் காற்றை அவன் சுவாசிப்பான்.!!

இது நமது உடலிலுள்ள நோய்களைக் குணப்படுத்தி, நம் ஆயுளை அதிகரிக்கும் என்று மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகின்றனர்!!

இரவு முன்கூட்டியே உறங்குவதால்; மெலடோனின் கிடைக்கிறது! அதிகாலையில் எழுந்து அலுவல்களைத் துவங்குவதால்; ஓஸோன் கிடைக்கிறது!!

நமது உடலின் ஆரோக்கியம் அனைத்தும் இவற்றில் அடங்கியிருக்கிறது.

*அதிகாலையின் சில மணி நேரங்கள் அந்த நாளின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கக் கூடியவையாக இருக்கின்றன!!*

*அதிகாலையில் எழும்போது; நமது மூளையும், இன்னபிற உறுப்புகளும் பூரண ஓய்வு பெற்று வேலை செய்ய தயாராக இருக்கும்!!*

அந்த நேரத்தில் செய்யும் பணிகள் அனைத்தும் திறமை மிக்கதாகவும், ஆற்றல் அழுத்தம் மிக்கதாகவும் திகழும்!!

*எனவே முன் எழுந்து முன் மறையும் அதிசய மெலடோனினைப் பெறவும், அதிகாலைப் பொழுதின் ஓஸோனைப் பெற்று பயனடைவோம்.
படித்ததில் பகிர்ந்தது

தீபங்களின் நன்மைகள் #Dheepam

திருக்கார்த்திகை அன்று இல்லங்களில் வரிசை யாக தீப அலங்காரம் செய்வர். அதனால் கிடைக்கும் பலன்கள் ஏராளம். இந்த விளக்குகளில் பலவிதங்கள் உண்டு  என்று ஞான நூல்கள்  கூறுகின்றன. திருக்கார்த்திகை அன்று வீட்டில் குறைந்த பட்சம் இருபத்தேழு தீபங்கள் ஏற்ற வேண்டும்’ என்று நம் முன்னோர்கள்  வகுத்திருக்கிறார்கள். ஆகாசத்திற்கு உரிய இடமான முற்றத்தில் நான்கு விளக்குகளும், சமையல் அறையில் ஒன்றும், நடையில் இரண்டும், பின்கட்டில் நான்கும்,  திண்ணையில் நான்கும் மாடக்குழியில் இரண்டும், நிலைப்படிக்கு இரண்டும், சுவாமி படத்துக்குக்கீழே இரண்டும், வெளியே யமதீபம் ஒன்றும், திருக்கோலமிட்ட வாசலில் ஐந்தும் என விளக்கு ஏற்ற வேண்டும். ஆனால், இந்தக்காலத்தில் வீட்டின் அமைப்பு தனிப்பட்ட முறையில் இருப்பதாலும், மாடி வீடு  மற்றும் அபார்ட்மென்டில் வசிப்பதாலும் மேற்சொன்ன முறைப்படி விளக்குகள் ஏற் றமுடியாததால், வசதிக்கு ஏற்ப இருபத்தேழு தீபங்களை வரிசையாக ஏற்றி  பலன் பெறலாம்.

தீபத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதால் தீபம் ஏற்றியதும் வணங்க வேண்டும். தீப ஒளியிலிருந்து வெளிப்படும் புகையால் கிருமிகள் நசியும். தீபங்கள்  ஏற்றுவதில் பல வகைகள்  உண்டு. அவற்றில் சில... தரையில் வண்ணப் பொடிகளில் சித்திரக் கோலம் இட்டு, அதன்மீது தீபங்கள் ஏற்றுவதை ‘சித்திர தீபம்’  என்பர். அடுக்கடுக்கான தீயத்தட்டுகளில் தீபங்கள் ஏற்றுவதற்கு ‘மாலா தீபம்’ என்று பெயர். வீட்டின் வெளிப்புறத்தில் உயர்ந்த பகுதியிலோ, மாடி வீடாக இருந்தால்  உயரமான இடத்திலோ ஏற்றப்படும் தீபத்தை ‘ஆகாச தீபம்’ என்பர்.

இந்த ஆகாச தீபத்தை கார்த்திகை மாதம் சதுர்த்தி திதியில் ஏற்றி வழிபட்டால், எமபயம் நீங்கும். நதிநீரில் தீபங்களை மிதக்க விடுவதை ‘ஜலதீபம்’ என்பர். கங்கை  கரையோரங்களில் வாழும் மக்கள் யாத்திரையாகச் செல்பவர்கள் கங்கை நதிக்கு மாலை வேளையில் தீபாராதனை  செய்து, வாழை மட்டையின் மீது தீபம்  வைத்து, கங்கையில் மிதக்க விடுவார்கள். படகு போன்ற வடிவில் உள்ள தீபங்களை நதிநீரில் மிதக்க விடுவதும் உண்டு. இதனை ‘நௌகாதீபம்’ என்பர்.வீட்டில் எல்லா பகுதிகளிலும் வரிசையாக தீபங்கள் ஏற்றுவது ‘சர்வ தீபம்’ எனப்படும்.

கோயில்களின் கோபுரங்கள் மீது தீபங்கள் ஏற்றுவதை ‘மோட்ச தீபம்’ என்று சொல்வர். கார்த்திகை மாதம் பௌர்ணமி அன்று சிவாலயங்களில் மாலை நேரத்தில்  பனை ஓலைகளால் கூடுபோல் பெரிதாக செய்து, அதற்கு பூஜை செய்து தீபாராதனை காட்டி கற்பூரத்தின் ஜோதியில் ஏற்றுவது ‘சர்வாலய தீபம்’ மலை மீது பெரிய  கொப்பரையில் ஏற்றப்படும் தீபம் அகண்ட தீபம். இந்த தீப ஜோதியை திருவண்ணாமலை பழனிமலை, திருப்பரங்குன்றம், திருத்தணி மலை ஆகிய பல  திருத்தலங்களில் தரிசிக்கலாம். ஒரு பெண் தன் இரு கைகளிலும் விளக்கு ஏந்தி நிற்பது பாவை விளக்கு.

திருமகள், யானைகள் நடுவே உள்ளது ‘லட்சுமி விளக்கு.’ திருமண நிகழ்ச்சியில் மண மேடையில் முகூர்த்தப் பானையில் ஏற்றி வைப்பது குடவிளக்கு.’ கோயில்களில் சுவாமி சந்நதியில் ஒளிர்வது நந்தா விளக்கு.’ வீட்டின் மாடத்தில் மாலை நேரத்தில் ஏற்றி வைப்பது  ‘மாட விளக்கு.’ மாரியம்மனுக்குப்  பிரார்த்தனை தீபம் ஏற்றுவது ‘மாவிளக்கு.’ விநாயகப் பெருமானுக்கு ஏற்றுவது ‘கொழுக்கட்டை விளக்கு.’ இறைவன் சந்நதி முன் தீபம் ஏற்றி வழிபடுவது  மண்ணாலான ‘அகல் விளக்கு.’ வாழைப்பழத்திலும், தேங்காய் மூடியிலும், எலுமிச்சம்பழ மூடியிலும், பூசணிக்காயிலும் விளக்குகள் ஏற்றுவது உண்டு.

இல்லத்திலோ கோயிலிலோ விளக்கு ஏற்றும்போது, கிழக்கு திசை நோக்கி தீபம் ஏற்றினால் துன்பம், நீங்கி மகிழ்ச்சி ஏற்படும். மேற்கு திசை நோக்கி விளக்கு  ஏற்றி வைத்தால் கடன் தொல்லை,  சனியின் தாக்கம் விலகும். வடக்கு திசை பார்த்து விளக்கு ஏற்றினால் திருமணத்தடை, கல்வி தடை நீங்கும். மேலும்  செல்வச் செழிப்பும், ஆரோக்கியமும் நிறைந்து காணப்படும் தெற்கு திசை நோக்கி தீபம்  ஏற்றக்கூடாது என்பது விதியாகும்.

குத்துவிளக்கில் தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்: ஒரு முகம் ஏற்றினால் மத்தியப் பலன், இருமுகம் ஏற்றினால் குடும்பத்தில் மகிழ்ச்சி, மூன்று முகம்  ஏற்றினால் கல்வி கேள்வி களில் குழந்தைகள் விருத்தி காண்பர். நான்கு முகம் ஏற்றினால் இல்லத்தில் சகல பொருட்களும் நிறைந்து காணப்படும்; ஐந்து முகம்  ஏற்றினால் பீடைகள் விலகி செல்வ வளமும், உடல்நலமும், நினைத்த காரியங்களில் வெற்றியும் கிட்டும்,
படித்ததில் பகிர்ந்தது.

🌿 #சர்க்கரை_நோயாளிகளுக்கான_ கருப்பட்டி_காபி 🌿

🌿 #சர்க்கரை_நோயாளிகளுக்கான_
கருப்பட்டி_காபி 🌿
.
சர்க்கரை நோயாளிகள் காபி குடிக்க ஆசைப்பட்டால் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டியை பயன்படுத்தலாம். இன்று கருப்பட்டி காபி போடுவது எப்படி என்று பார்க்கலாம்.
.
#தேவையான_பொருட்கள்:
கருப்பட்டி – 1/4 கப்
காபித்தூள் – 2 டீஸ்பூன்
.
#செய்முறை:
முதலில் கருப்பட்டியைக் கரைத்து, அதை வடிகட்டி கொள்ளவும்.
.
ஒரு பாத்திரத்தில் 2 கப் கொதிக்கும் நீரில் காபித்தூளைப் போட்டு, டிகாக்‌ஷன் இறக்கவும்.
.
டிகாக்‌ஷன் இறங்கியதும் அதை வடிகட்டி, கரைத்த கருப்பட்டியைச் சேர்த்து அருந்தவும்.
.
விருப்பப்பட்டால் பால் சேர்த்தும் அருந்தலாம்.

#பலன்கள்: 
சோடியம், பொட்டாசியம், துத்தநாகம், கால்சியம், இரும்புச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன. இவை, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். உடலுக்கு சக்தியளிக்கும். எலும்புகள், பற்களுக்கு உறுதியைத் தரும்.
படித்ததில் பகிர்ந்தது

Wednesday, 22 November 2017

வாஸ்து குறைபாடுகளை தீர்கும் மாவிலை லட்சுமி கடாட்சம் நிறைந்த மாவிலை

* விசேஷ நாட்களில் மட்டுமல்லாது அடிக்கடி தலைவாயிலில் மாவிலை தோரணம் கட்டுவது வாஸ்து குறைபாடுகள் விரைவில் தீர வழிபிறக்கும்.
* லக்ஷ்மி கடாக்ஷம்
* எதிர்மறை அதிர்வுகளை நீக்கும்
* நச்சுக் காற்றை சுத்தப்படுத்தும்.
காற்றில் பரவும் நோய் கிருமிகளை
தடுக்கும்
* தலைவாயிலில் இருக்கும் வாக்தேவதையின் காதில் எதிர்மறை வார்த்தைகள் விழாது தடுக்கும்.
* மாவிலை காய்ந்தாலும் அதன் சக்தி குறையாது.
* பிளாஸ்டிக் மாவிலைகளை தொங்கவிடுதல் கூடாது..

Monday, 20 November 2017

இல்லத்தரசிகளுக்கு சூப்பர் யோசனைகள்! டிப்ஸ்


இல்லத்தரசிகளுக்கு சூப்பர் யோசனைகள்! டிப்ஸ்

♥பெண்கள் பொதுவாக சமையலில் வெளுத்து வாங்குவார்கள். அவங்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டியதில்லை. இருந்தாலும் அவர்களின் சமையலுக்கு உதவதற்காக குட்டிக் குட்டி டிப்ஸ். பல பேருக்குத் தெரிஞ்சதும் இருக்கலாம், தெரியாததும் இருக்கலாம். உங்களுக்குத் தேவையான டிப்ஸை எடுத்துக்கோங்க.. குடும்பத்தாரின் பாராட்டை அள்ளிக்கோங்க!

♥ டீத்தூள் வைத்திருக்கும் பாட்டிலில்உபயோகித்த ஏலக்காய் தோல்களைப் போட்டு வைத்திருந்தால் டீ ஏலக்காய் மணத்தோடு சுவையாக இருக்கும்.

♥ மழை, குளிர் காலங்களில் வடகம் நமத்துப் போய் நன்றாகப் பொரியாது. வெறும் வாணலியை அடுப்பில் வைத்துச் சூடேற்றி, அதில் வடகத்தைப் போட்டு, சற்றுப் புரட்டி எடுத்து விட்டு, எண்ணெயில் பொரித்தால் நன்றாகப் பொரியும்.

♥ தேங்காய் சட்னி மிகவும் சுவையாக இருக்க நாம் அரைக்கும் சட்னியில் பாதி தேங்காயும், பாதி கொத்தமல்லியும் சேர்த்து அரைத்தால் மிகவும் ருசியாக இருக்கும்.

♥ வெங்காய ஊத்தப்பம் செய்யும்போது தோசை இரு புறமும் வெந்து இருந்தால்தான் சுவையாக இருக்கும். தோசையின் நடுப் பகுதியில் சிறு ஓட்டை போட்டு எண்ணெய் ஊற்றினால் விரைவில் வெந்து, சுவையாகவும் இருக்கும்.

♥தோசைக்கு ஊற வைக்கும்போது 1 கிலோவிற்கு 50 கிராம் வேர்க்கடலை, 50 கிராம் பட்டாணி சேர்த்து ஊற வைத்து அரைத்து மாவுடன் கலந்து தோசை வார்த்தால் நிறமான, சுவை அதிகமான, சத்து நிறைந்த தோசை ரெடி.

♥ சமைத்த சாதம் மிஞ்சிப் போய் விட்டால், அதைப் போல் இரண்டு பங்கு தண்ணீ­ரைக் கொதிக்க வைத்து, அதில் பழைய சாதத்தைக் கொட்டி, ஒரு கொதி வந்ததும் இறக்கி வடித்து விடவும். பின்னர் மறுபடியும் 5 நிமிடம் வடித்த சாதத்தை அடுப்பில் வைத்து இறக்கினால் நீர்ப்பசை அகன்று புதிதாகச் சமைத்ததைப் போல் இருக்கும்.

♥ வீட்டில் ஜாம் தயாரிக்க விரும்பினால் சரியாகப் பழுக்காத பழங்களையே பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் ஜாம் நீண்ட நாட்களுக்குக் கெடாமல் இருக்கும்.

♥ காலிஃபிளவரை சமைக்கும் முன் அவற்றைக் கொஞ்சம் கொதிக்க வைத்த உப்பு நீரில் சிறிது நேரத்திற்கு முக்கி எடுக்கவும். அதனால் அந்த பூக்களுக்குள் உள்ள கண்ணுக்குத் தெரியாத சிறு பூச்சிகள் விலகிவிடும்.

♥குக்கரில் பருப்பை சமைக்கும் போது, ஒரு டீ ஸ்பூன் மஞ்சள் தூளையும், ஒரு டீ ஸ்பூன் நெய்யையும் அதற்குள் சேர்த்து விடுங்கள். அதிலிருந்து வரும் மணத்திற்கே, அனைவரும் ஒரு பிடி பிடித்துவிடுவார்கள்.

♥ நன்றாகக் காய்ந்து போன பிரட், பன் போன்றவைகளை எடுத்துத் தண்­ணீர் கலந்து பிசைந்து விடுங்கள். நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம், பூண்டு போன்றவற்றுடன் கொஞ்சம் உப்பை சேர்த்து மாவாக ஆக்கி விடுங்கள். கொஞ்சம் எண்ணெயை சுட வைத்து இந்த கலவையை வடை சுடுவது போல் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து விடுங்கள். பஜ்ஜிகளுக்கு போட்டியாக சூப்பர் சுவையாக இருக்கும்.

♥ சப்பாத்திக்கு மாவு உருட்டும் போது அந்த உருட்டு பலகையின் கீழ் ஒரு சமையலறைத் துணியை போட்டுக் கொள்ளுங்கள். இதனால் அந்த பலகை ஆடாமலும் விலகாமலும் இருக்கும், நீங்களும் வேகமாக மாவைத் தேய்க்கலாம்

♥வாழைத்தண்டுகள், கீரைத்தண்டுகள் மற்றும் கொத்துமல்லி இலைகள் வாடாமல் இருக்க அவற்றை அலுமினியம் காகிதத்தில் சுற்றி வைக்கலாம்.

♥பழம், ஃப்ரூட் சாலட், ஜூஸ் ஆகியவற்றின் சுவையை அதிகரிக்க சிறிதளவு தேன் சேர்க்கலாம்.

♥வீட்டிலேயே கேக் செய்யும் பேது, பேகிங் ஓவன் தட்டில் சரியாக எண்ணெய் அல்லது நெய் தடவியிருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்பே பேக் செய்யத் தொடங்குங்கள்.

♥தேங்காயை சரிபாதியாக உடைக்க தணணி்­ரில் நனைத்து பின்னர் உடைக்க வேண்டும்.

♥ இனிப்புகள் தயாரிக்கும்போது சர்க்கரைக்குப் பதில் வெல்லம் அல்லது தேன் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தினால் சுவை கூடுதலாக இருக்கும்.

♥வெங்காயம் வதக்கும்போது சிறிதளவு சர்க்கரை சேர்த்தால் எளிதில் வதங்கி விடும்.

♥ ஊறுகாய் தயாரிக்கும்போது கைகளைப் பயன்படுத்தக் கூடாது மரத்தினால் ஆன கரண்டிகளையே பயன்படுத்துங்கள்.

♥ கோதுமை மாவு அரைக்கும்போது அதனுடன் சோயா பீன்ஸையும் சேர்த்து அரைத்தால் சப்பாத்திகள் ஊட்டம் கூடுவதுடன் ருசியும் அபாரமாக இருக்கும்.

♥ வெங்காயத்தைத் தோலோடு குளிர்ந்த நீரில் போட்டு பின்னர் நறுக்கினால் கண்களில் கண்ணீ­ர் வராது.

♥பச்சை மிளகாய் ஒரு மாத காலத்திற்கு மேலாக கெடாமல் இருக்க ஒரு காகிதக் கவரில் சிறிய துளையிட்டு கவரில் பச்சை மிளகாய்களை அதில் போட்டு ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

♥ இஞ்சி, பூண்டு, சட்னி தயாரிக்க இரண்டையும் 2க்கு மூன்று என்ற விகிதத்தில் சேர்க்க வேண்டும். இஞ்சியை குறைவாக பயன்படுத்தினால் பண்டம் ருசியாக இருக்கும்.

♥காய்ந்த பழங்களைப் பராமரிக்க அதை வைத்திருக்கும் பாத்திரத்தில் 23 கிராம்புகளை போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு ருசி கெடாமல் இருக்கும்.

♥கேக் பேக் செய்யும்போது தேவையான நேரத்திற்கு முன்பாகவே பேக்கிங் ஓவனைத் திறக்காதீர்கள்.

♥முட்டைக்கோசை சமைக்கும்போது ஒரு துண்டு இஞ்சியையும் சேர்த்து சமைத்தால் அதன் மணம் மாறாமல் இருக்கும்.

♥ உருளைக் கிழங்குகளை பிளாஸ்டிக் கவர்களில் போட்டு வைக்கக்கூடாது. ஏனெனில் அதிலுள்ள ஈரத்தன்மையால் கிழங்கு அழுகி விடும் வாய்ப்பு இருக்கிறது
படித்ததில் பகிர்ந்தது
வாழ்க வளமுடன்.