ஒவ்வொருவரும் வீட்டில் வளர்க்க வேண்டிய மிக சிறந்த மருத்துவ குணங்களை கொண்ட
கற்பூரவல்லி செடி
கற்பூரவல்லி செடியை வெளியிடங்களில் காண்பது மிகவும அரிதாகும் .சில வீடுகளில் தரையிலும்,தொட்டியிலும் வளர்த்து வருவார்கள் சிறிய செடியாக இருக்கும் இதன் தண்டு எளிதில் உடையும் தன்மையுடையது இச்செடி சில கிளைகளுடன் மண்ணிற்கு ஏற்ப ஓரு அடிமுதல் இரண்டடிகள் வரை வளரும்
அரையடி முதல் ஒருஅடி வரையில் படரக்கூடும் இச்செடியின் இலை வெளிர் பச்சை நிறத்துடன் வெற்றிலை போன்ற வடிவத்துடன் மூண்று சென்டிமீட்டர் அகலமும் ஆறு முதல் எட்டு சென்டிமீட்டர் நீளமுமாக இருக்கும் .
சற்று கனமாக உள்ள இதனை இலையின் மேலும் கீழுமாக நுண்ணிய துளைகள் இருக்கும் இந்த கற்பூரவல்லி
இலையை கைகளால் கசக்கி முகர்ந்தால் கற்ப்பூர வாசனை வீசும்
இதனுடைய மருத்துவ குணங்கள்
கற்பூரவல்லியினால் காசம் என்னும் பொடி இருமல் ,அம்மை கொப்புளம்
ஐயக்குற்றம் புறநீர்கோவை மார்பில் ஐயக்கட்டு வாதக்கடுப்பு போன்றவை நீங்கும்
கர்பூரவல்லி இதன் இலைச்சாறுடன் கற்கண்டு சேர்த்து குழந்தைகளுக்கு கொடுத்தால் இருமல் நிற்கும் இதன் சாற்றை எடுத்து நல்லெண்ணையுடன் சேர்த்து தலைக்கு தடவிவர மூக்கு
நீர்பாய்ச்சுதல் தீரும்
கற்பூர வல்லி இலையை கொண்டுவந்து
கசக்கி சாறு பிழிந்து கொள்ளவும் இச்சாற்றில் இரண்டு டீஸ்பூன் அளவுக்கு
எடுத்து ஓரு டீஸ்பூன் தேன் சேர்த்து குழைத்து கொடுக்கவும் நாள்தோறும்
காலை மதியம் இரவு என மூன்று வேளைக்கு தொடர்ந்து மூன்றுநாட்களுக்கு கொடுத்துவர நெஞ்சு தடுமன் நீங்கி குணமுண்டாகும்.
மேலும் இதை பயன்படுத்துவதற்கு முன்பு இதைப்பற்றி நங்கு அறிந்த தெரிந்த மருத்துவ பெரியோர்களிடம் கேட்டறிந்து பயன்படுத்தவும்
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் நன்றி
டி சூரியபிரசாத்
T.suriyaprasad
No comments:
Post a Comment