Wednesday, 10 May 2017

புங்க மரத்தின் பயன்கள்


புங்க மரங்களை சில இடங்களில் தான் 
காணமுடியும் புங்க மரத்தின் இலை பூ 
காய் வேர் பருப்பு யாவும் மருந்தாக பயண்படுகின்றது .
புங்க இலை வெட்டுக்காயத்திற்கு வெட்டு காயம் பட்டவுடனேயே வெட்டு பட்ட இடத்தை சுத்தம் செய்துவிட்டு புங்க 
இலையை மெய்யாக அரைத்து வெட்டு காயம் பட்ட இடத்தில் கட்டிவிட்டால் காயம் ஆறிவிடும் ,வீக்கம் குறைய 
புங்க இலையை சிற்றாமணக்கு எண்ணெய்விட்டு வதக்கி எடுத்து வீக்கத்தில் வைத்துக்கட்டினால் 
வீக்கம் குறைந்துவிடும் 
புங்கம் பூ 
புங்கம் பூவை கொண்டுவந்து சுத்தம் செய்து இரண்டு ஆழாக்கு அளவுக்கு பூவை எடுத்து கொள்ளவும், ஒரு இரும்பு  சட்டியை அடுப்பில் வைத்து அதில் அரை ஆழாக்கு நெய்யை விட்டு இந்தப்பூவை போட்டு வதக்கி எடுத்து இரண்டு பேரீச்சம்பழத்தை சேர்த்து பசுவின் பால் விட்டு மெய்யாக அரைத்து எடுத்து வைத்துகொண்டு காலை மாலை வேளைக்கு 10 கிராம் எடை அளவு சாப்பிட்டுவந்தால் நீரிழிவு குணமாகும் 
புங்க மரத்தின் காய்ந்த காயை எடுத்து துளையிட்டு குழந்தையின் இடுப்பில் கட்டினால் கக்குவான் இருமல் வராது தடுக்கும் . 
மேலும் புங்க மரம் உங்கள் சுற்றத்தில் வளர்த்தாலோ வளர்ந்திருந்தாலோ உங்கள்சுற்றம் முழுவதும் உள்ள வெயிலின் தாக்கத்தை இந்த மரம் ஈர்த்து  குளிர்ச்சியையும் குளிர்ந்த காற்றையும் தரும் புவி வெட்பமயமாகுதலை கட்டுப்படுத்தும் தூய்மையான காற்றையும் தரும் மேலும் பல நன்மைகள் இதனால் நமக்கும் நமது சுற்றத்திற்கும் 
கிடைகின்றது (புங்க ) மரம் வளர்த்து பயன் பெறுங்கள் நோயின் தாக்கத்திலிருந்தும் வெயிலின் தாக்கத்திலிருந்தும் விடுபட்டு ஆரோக்கியமாக வாழ்ந்திடுங்கள் 
வாழ்க இயற்கைவளங்களுடன் வாழ்க
இயற்கையின் ஆசியுடன் இயற்கையை போற்றுவோம் எந்தக்காலத்திலும் நலமாக வாழ்வோம்

No comments:

Post a Comment