Sunday, 28 May 2017

ஒவ்வொருவரும் வீட்டில் வளர்க்க வேண்டிய கற்பூரவல்லி செடி karpooravalli plant

ஒவ்வொருவரும் வீட்டில் வளர்க்க வேண்டிய மிக சிறந்த மருத்துவ குணங்களை கொண்ட
கற்பூரவல்லி செடி

கற்பூரவல்லி   செடியை வெளியிடங்களில் காண்பது மிகவும அரிதாகும் .சில வீடுகளில் தரையிலும்,தொட்டியிலும் வளர்த்து வருவார்கள் சிறிய செடியாக இருக்கும் இதன் தண்டு எளிதில் உடையும் தன்மையுடையது இச்செடி சில கிளைகளுடன் மண்ணிற்கு ஏற்ப ஓரு அடிமுதல் இரண்டடிகள் வரை வளரும்
அரையடி முதல் ஒருஅடி வரையில் படரக்கூடும் இச்செடியின் இலை வெளிர் பச்சை நிறத்துடன் வெற்றிலை போன்ற வடிவத்துடன் மூண்று சென்டிமீட்டர் அகலமும் ஆறு முதல் எட்டு சென்டிமீட்டர் நீளமுமாக இருக்கும் .
சற்று கனமாக உள்ள இதனை இலையின் மேலும் கீழுமாக நுண்ணிய துளைகள் இருக்கும் இந்த கற்பூரவல்லி
இலையை கைகளால் கசக்கி முகர்ந்தால் கற்ப்பூர வாசனை வீசும்
இதனுடைய மருத்துவ குணங்கள்
கற்பூரவல்லியினால் காசம் என்னும் பொடி இருமல் ,அம்மை கொப்புளம்
ஐயக்குற்றம் புறநீர்கோவை மார்பில் ஐயக்கட்டு வாதக்கடுப்பு போன்றவை நீங்கும்
கர்பூரவல்லி இதன் இலைச்சாறுடன் கற்கண்டு சேர்த்து குழந்தைகளுக்கு கொடுத்தால் இருமல் நிற்கும் இதன் சாற்றை எடுத்து நல்லெண்ணையுடன் சேர்த்து தலைக்கு தடவிவர மூக்கு
நீர்பாய்ச்சுதல் தீரும்
கற்பூர வல்லி இலையை கொண்டுவந்து
கசக்கி சாறு பிழிந்து கொள்ளவும் இச்சாற்றில் இரண்டு டீஸ்பூன் அளவுக்கு
எடுத்து ஓரு டீஸ்பூன் தேன் சேர்த்து குழைத்து கொடுக்கவும் நாள்தோறும்
காலை மதியம் இரவு என மூன்று வேளைக்கு தொடர்ந்து மூன்றுநாட்களுக்கு கொடுத்துவர நெஞ்சு தடுமன் நீங்கி குணமுண்டாகும்.
மேலும் இதை பயன்படுத்துவதற்கு முன்பு இதைப்பற்றி நங்கு அறிந்த தெரிந்த மருத்துவ பெரியோர்களிடம் கேட்டறிந்து பயன்படுத்தவும்
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் நன்றி
டி சூரியபிரசாத்
T.suriyaprasad

Saturday, 27 May 2017

தெய்வீக தன்மை கொண்ட சகல நன்மைகள் தரும் ராசி மற்றும் நட்சத்திர மரங்கள்


நட்சத்திர மரங்கள்

(அஸ்வனி) அசுவினி – ஈட்டி
பரணி – நெல்லி
கார்த்திகை – அத்தி
ரோகினி – நாவல் மரம்
மிருகசீரிடம் (மிருகசீரிசம் ) – கருங்காலி
திருவாதிரை - திப்பிலி
புனர்பூசம் – மூங்கில்
பூசம்- அரசம்
ஆயில்யம் – புன்னை
மேஷம் ( மேடம் ) - ஆலம்
பூரம்- பலா
உதிரம்- ஆத்தி
அஸ்தம் - - அத்தி
சித்திரை – வில்வம்
சுவாதி – நீர்மருது
விசாகம் – விளா
அனுஷம் – மகிழம்
கேட்டை- பிராய்
மூலம்- மராமரம்
பூராடம் – வஞ்சி
உத்திராடம் – பலா
திருவோணம் – எருக்கு
அவிட்டம் – வன்னி
சதயம் – கடம்பு
பூரட்டாதி – தேமா
உத்திரட்டாதி – வேம்பு
ரேவதி- இலுப்பை .

ராசி மரங்கள் :

மேஷம் – செஞ்சந்தனம்
ரிஷபம் – அத்தி
மிதுனம்- பலா
கடகம்-புரசு
சிம்மம் – குங்குமப்பூ
கன்னி – மா
துலாம் – மகிழம்
விருச்சிகம் – கருங்காலி
தனுசு- அரசம்
மகரம் – ஈட்டி
கும்பம்- வன்னி
மீனம்- புன்னை.

நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு உரிய  மரத்தை நட்டு வைத்தால் நிச்சயம் நன்மை எற்படும்.நமக்கு உகந்த நட்சத்திர மரத்தை வைக்கும்போது, நம் நட்சத்திர மரம் எந்த அளவுக்கு பசுமையாக வளர்கிறதோ அந்த அளவுக்கு நம் வாழ்வில் நல்ல பல திருப்பங்கள் முன்னேற்றம் ஏற்படும் மரம் வளர்க்க இடம் இல்லாதவர்கள்
மரம் வளர்க்க இடம் இருப்பவர்களுக்கு
வாங்கிக்கொடுக்கலாம் மேலும் கோயில்கள் பள்ளிகள் அலுவலகங்கள்
பூங்காக்கள் போன்ற இடங்களிலும் இடத்தின் உரிமையாளர்களின் அனுமதி பெற்று மரங்களை நட்டுவைத்தும் பராமரித்தும் வரலாம்
மரம் வளர்ப்போம் பூமியை காப்போம்
வாழ்க இயற்கைவளங்களுடன் நன்றி
( டி.சூரியபிரசாத் )
( T.suriyaprasad )

Thursday, 11 May 2017

உடலினை உறுதி செய

(உடலினை உறுதி செய் )
(நமது உடல் உறுப்புகள் இயங்கும் நேரம் )
1)அதிகாலை  3 மணிமுதல் 5 மணிவரை
நுரைஈரல் நேரம்
2 )அதிகாலை 5  மணிமுதல் 7 மணிவரை பெருங்குடல் இயங்கும் நேரம் ,காலைக்கடன் இந்தநேரத்தில் கழிக்கவேண்டும் உயிர் அணுக்கள் அதிகரிக்கும் நேரம்
3) காலை 7 மணிமுதல் 9 மணி இந்தநேரத்தில் தரமான நல்ல உணவுகளை உண்ணவேண்டும் அரசனைபோல
4) காலை 9 மணிமுதல் 11 மணிவரை காலையில் உண்ட உணவை மண்ணீரல் செரித்து ஊட்டசத்தாகவும்
இரத்தமாகவும் மாற்றுகின்றது இந்த நேரத்தில் தண்ணீர்கூட குடிக்கக்கூடாது மண்ணீரல் செரிமான சக்தி பாதிக்கக்கூடும் நீரிழிவுநோய் உண்டாகும்
5 ) முற்பகல்11 மணிமுதல் முதல் பிற்பகல் 1 மணிவரை இந்தநேரத்தில் அதிகமாக பேசுதல் அதிகமாக கோவப்படுத்தல் கூடாது இதயம் பாதிக்கும் இதய நோயாளிகள்  கவனமாக இருக்கவேண்டும்
6 ) பிற்பகல் 1 மணிமுதல் 3  மணிவரை இந்தநேரத்தில் மிதமாக சத்தான மதிய உணவு உண்டு சற்றே ஓய்வெடுக்க வேண்டும் உறங்கக்கூடாது .
7)  பிற்பகல் 3  மணிமுதல் 5 மணிவரை
நீர்கழிவுகளை வெளியேற்ற சிறந்த நேரம்
8) மாலை 5 மணிமுதல் 7 மணிவரை
சற்று தூயகாற்றில் உலாவுதல் அமைதியாக தியானம் செய்தல் வழிபாடு செய்தலுக்கு சிறந்தநேரம்
9) இரவு 7 மணிமுதல்  9 மணிவரை
இதயத்தை சுற்றி பாதுகாக்கும்
பெரிகார்டியம் எனும் ஜவ்வு பகுதி இயங்கும் நேரம் .இரவு உண்ணும் நேரம்
10) இரவு 9 மணிமுதல் 11  மணிவரை டிரி்பில் கீட்டர் எனும் உச்சந்தலை முதல் அடிவயிறுவரை உள்ள மூன்று பகுதிகளையும் இணைக்கும் பாதை. இந்த நேரத்தில் மெல்லென உறங்குதல் நல்லது .
11 )இரவு 11  மணிமுதல்1மணிவரை
தூங்காமல் விழித்துஇருந்தால் பித்தப்பை இயக்க குறைபாடு எற்படும்
12) இரவு 1 மணிமுதல் 3 மணிவரை
இந்தநேரத்தில் நீங்கள் உட்கார்ந்திருக்கவோ விழித்திருக்கவோ
கூடாது கட்டாயம் படுத்திருக்கவேண்டும்
உடல்முழுவதும் ஓடும் இரத்தத்தை கல்லீரல் தனித்தனி இடத்தே வரவழைத்து சுத்திகரிக்கும் நேரம் இது.
இந்தப்பணியை நீங்கள் தாமதப்படுத்தினால் மறுநாள் முழுவதும் சுறுசுறுப்பில்லாமல் அவதிப்படுவீர்கள் இவைகளை உணர்ந்து வகைப்படுத்தி செயல்பட்டால்
நோய்நீங்கி ஆரோக்கியமாக வாழலாம் .
படித்ததில் பகிர்ந்தது அனைவரும் பயன்பெற
படித்துவிட்டு ஷேர் செய்யுங்கள்
நன்றி 

Wednesday, 10 May 2017

( சகலநன்மைகள் தரும்  சித்தர்கள் போற்றித் தொகுப்பு) Siddhargal potri thogupu

பதிவு தேதி 10/5/2017
( சகலநன்மைகள் தரும் 
சித்தர்கள் போற்றித் தொகுப்பு)

ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி
ஓம் அகப்பைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் அசுவினித்தேவர் திருவடிகள் போற்றி
ஓம் அத்திரிமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் அநுமான் திருவடிகள் போற்றி
ஓம் அம்பிகானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் அருணகிரிநாதர் திருவடிகள் போற்றி
ஓம் அருள்நந்தி சிவாச்சாரியார் திருவடிகள் போற்றி
ஓம் அல்லமாபிரபு திருவடிகள் போற்றி
ஓம் அழுகண்ணிச்சித்தர் திருவடிகள் போற்றி 
ஓம் இடைக்காடர் திருவடிகள் போற்றி
ஓம் இராமலிங்க சுவாமிகள் திருவடிகள் போற்றி
ஓம் இராமதேவர் திருவடிகள் போற்றி
ஓம் இராமானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் உமாபதி சிவாச்சாரியார் திருவடிகள் போற்றி
ஓம் ஒளவையார் திருவடிகள் போற்றி
ஓம் கஞ்சமலைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கடைப்பிள்ளைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கடுவெளிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கண்ணானந்தர் திருவடிகள் போற்றி 
ஓம் கண்ணிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கனநாதர் திருவடிகள் போற்றி
ஓம் கணபதிதாசர் திருவடிகள் போற்றி
ஓம் கதம்பமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் கபிலர் திருவடிகள் போற்றி
ஓம் கமலமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் கருவூர்தேவர் திருவடிகள் போற்றி
ஓம் கல்லுளிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கலைக்கோட்டு முனிவர் திருவடிகள் போற்றி
ஓம் கவுபாலச்சித்தர் திருவடிகள் போற்றி 
ஓம் கனராமர் திருவடிகள் போற்றி
ஓம் காகபுஜண்டர் திருவடிகள் போற்றி
ஓம் காசிபர் திருவடிகள் போற்றி
ஓம் காலாங்கிநாதர் திருவடிகள் போற்றி
ஓம் குகை நமச்சிவாயர் திருவடிகள் போற்றி
ஓம் குதம்பைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் குமரகுருபரர் திருவடிகள் போற்றி
ஓம் குருதட்சணாமூர்த்தி திருவடிகள் போற்றி
ஓம் குருராஜர் திருவடிகள் போற்றி
ஓம் குறும்பைச்சித்தர் திருவடிகள் போற்றி 
ஓம் கூர்மானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் கொங்கணேஸ்வரர் திருவடிகள் போற்றி
ஓம் கோரக்கர் திருவடிகள் போற்றி
ஓம் கௌசிகர் திருவடிகள் போற்றி
ஓம் கௌதமர் திருவடிகள் போற்றி
ஓம் சங்கமுனிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் சங்கர மகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் சங்கிலிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் சச்சிதானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் சட்டநாதர் திருவடிகள் போற்றி 
ஓம் சண்டிகேசர் திருவடிகள் போற்றி
ஓம் சத்யானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் சிவயோகமாமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சிவவாக்கியர் திருவடிகள் போற்றி
ஓம் சிவானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் சுகபிரம்மர் திருவடிகள் போற்றி
ஓம் சுந்தரானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் சுந்தரமூர்த்தி திருவடிகள் போற்றி
ஓம் சூதமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சூரியானந்தர் திருவடிகள் போற்றி 
ஓம் சூலமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சேதுமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சொரூபானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் ஜம்புமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் ஜமதக்னி திருவடிகள் போற்றி
ஓம் ஜனகர் திருவடிகள் போற்றி
ஓம் ஜனந்தனர் திருவடிகள் போற்றி
ஓம் ஜனாதனர் திருவடிகள் போற்றி
ஓம் ஜனக்குமாரர் திருவடிகள் போற்றி
ஓம் ஜெகநாதர் திருவடிகள் போற்றி 
ஓம் ஜெயமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் ஞானச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் டமாரானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் தன்வந்திரி திருவடிகள் போற்றி
ஓம் தாயுமான சுவாமிகள் திருவடிகள் போற்றி
ஓம் தானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் திருகோணச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் திருஞானசம்பந்தர் திருவடிகள் போற்றி
ஓம் திருநாவுக்கரசர் திருவடிகள் போற்றி
ஓம் திருமாளிகைதேவர் திருவடிகள் போற்றி 
ஓம் திருமூலதேவர் திருவடிகள் போற்றி
ஓம் திருவள்ளுவர் திருவடிகள் போற்றி
ஓம் தூர்வாசமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் தேரையர் திருவடிகள் போற்றி
ஓம் நந்தனார் திருவடிகள் போற்றி
ஓம் நந்தீஸ்வரர் திருவடிகள் போற்றி
ஓம் நாதாந்தசித்தர் திருவடிகள் போற்றி
ஓம் நாரதர் திருவடிகள் போற்றி
ஓம் நொண்டிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் பட்டினத்தார் திருவடிகள் போற்றி 
ஓம் பத்ரகிரியார் திருவடிகள் போற்றி
ஓம் பதஞ்சலியார் திருவடிகள் போற்றி
ஓம் பரத்துவாசர் திருவடிகள் போற்றி
ஓம் பரமானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் பராசரிஷி திருவடிகள் போற்றி
ஓம் பாம்பாட்டிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் பிங்களமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் பிடிநாகீசர் திருவடிகள் போற்றி
ஓம் பிருகுமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் பிரும்மமுனிவர் திருவடிகள் போற்றி 
ஓம் பீர்முகமது திருவடிகள் போற்றி
ஓம் புண்ணாக்கீசர் திருவடிகள் போற்றி
ஓம் புலத்தீசர் திருவடிகள் போற்றி
ஓம் புலிப்பாணிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் பூனைக்கண்ணார் திருவடிகள் போற்றி
ஓம் போகமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் மச்சமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் மஸ்தான் திருவடிகள் போற்றி
ஓம் மயூரேசர் திருவடிகள் போற்றி
ஓம் மாணிக்கவாசகர் திருவடிகள் போற்றி 
ஓம் மார்க்கண்டேயர் திருவடிகள் போற்றி
ஓம் மாலாங்கன் திருவடிகள் போற்றி
ஓம் மிருகண்டரிஷி திருவடிகள் போற்றி
ஓம் முத்தானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் மெய்கண்டதேவர் திருவடிகள் போற்றி
ஓம் மௌனசித்தர் திருவடிகள் போற்றி
ஓம் யாகோபு திருவடிகள் போற்றி
ஓம் யூகிமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் யோகச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் யோகானந்தர் திருவடிகள் போற்றி 
ஓம் ரோமரிஷி திருவடிகள் போற்றி
ஓம் வசிஷ்டமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் வரதரிஷி திருவடிகள் போற்றி
ஓம் வரரிஷி திருவடிகள் போற்றி
ஓம் வராகிமிகி திருவடிகள் போற்றி
ஓம் வால்மீகி திருவடிகள் போற்றி
ஓம் விசுவாமித்திரர் திருவடிகள் போற்றி
ஓம் வியாக்ரமர் திருவடிகள் போற்றி
ஓம் வியாசமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் விளையாட்டுச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் வேதாந்தச்சித்தர் திருவடிகள் போற்றி 
ஓம் எண்ணிலா கோடி சித்தரிஷி கணங்கள் திருவடிகள் போற்றிபோற்றி

மேற்கண்ட சித்தர்கள் போற்றி தொகுப்பை சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை குடும்பத்தில்  உள்ள அனைவரும் தினசரி காலையும் மாலையும் படித்து  பாராயணம்  செய்து போற்றி பூஜை செய்பவர்களுக்கு குடும்ப ஒற்றுமை புத்திரபாக்கியம்  உடல்  ஆரோக்கியம் போன்ற நல்வினைகள் பெருகி மதுஅருந்துதல் புலால் உண்ணுதல் சூதாடுதல் போன்ற தீவினைகள் நீங்கிவிடும் மேலும் மாதம் ஒருவருக்கோ அல்லது இவருக்கோ பசித்த ஏழைகளுக்கு பசியாற்றியும் வந்தால் பாவம் புண்ணியம் பற்றி உணர்ந்து வாழலாம் . மேலும்   மாணவர்களுக்கு  கல்வியில் தேர்ச்சியும் வேலைவாய்ப்பும் அமையும் தீராத நோய்வாய்ப்பட்டவர்கள் இந்த தெய்வீகமானான நூலைத் தொட்டு வணங்கி நித்திய  பாராயணம் செய்தும் அன்னதானமும் செய்துவந்தால் தீராத நோய்களெல்லாம் தீர்ந்து 
நீண்ட ஆயுளும் பெறுவார்கள்,
படித்ததில் பகிர்ந்தது 
அனைவரும் பயன்பெற 
படித்துவிட்டு ஷேர் செய்யுங்கள் 
நன்றி வாழ்க வளமுடன்

புங்க மரத்தின் பயன்கள்


புங்க மரங்களை சில இடங்களில் தான் 
காணமுடியும் புங்க மரத்தின் இலை பூ 
காய் வேர் பருப்பு யாவும் மருந்தாக பயண்படுகின்றது .
புங்க இலை வெட்டுக்காயத்திற்கு வெட்டு காயம் பட்டவுடனேயே வெட்டு பட்ட இடத்தை சுத்தம் செய்துவிட்டு புங்க 
இலையை மெய்யாக அரைத்து வெட்டு காயம் பட்ட இடத்தில் கட்டிவிட்டால் காயம் ஆறிவிடும் ,வீக்கம் குறைய 
புங்க இலையை சிற்றாமணக்கு எண்ணெய்விட்டு வதக்கி எடுத்து வீக்கத்தில் வைத்துக்கட்டினால் 
வீக்கம் குறைந்துவிடும் 
புங்கம் பூ 
புங்கம் பூவை கொண்டுவந்து சுத்தம் செய்து இரண்டு ஆழாக்கு அளவுக்கு பூவை எடுத்து கொள்ளவும், ஒரு இரும்பு  சட்டியை அடுப்பில் வைத்து அதில் அரை ஆழாக்கு நெய்யை விட்டு இந்தப்பூவை போட்டு வதக்கி எடுத்து இரண்டு பேரீச்சம்பழத்தை சேர்த்து பசுவின் பால் விட்டு மெய்யாக அரைத்து எடுத்து வைத்துகொண்டு காலை மாலை வேளைக்கு 10 கிராம் எடை அளவு சாப்பிட்டுவந்தால் நீரிழிவு குணமாகும் 
புங்க மரத்தின் காய்ந்த காயை எடுத்து துளையிட்டு குழந்தையின் இடுப்பில் கட்டினால் கக்குவான் இருமல் வராது தடுக்கும் . 
மேலும் புங்க மரம் உங்கள் சுற்றத்தில் வளர்த்தாலோ வளர்ந்திருந்தாலோ உங்கள்சுற்றம் முழுவதும் உள்ள வெயிலின் தாக்கத்தை இந்த மரம் ஈர்த்து  குளிர்ச்சியையும் குளிர்ந்த காற்றையும் தரும் புவி வெட்பமயமாகுதலை கட்டுப்படுத்தும் தூய்மையான காற்றையும் தரும் மேலும் பல நன்மைகள் இதனால் நமக்கும் நமது சுற்றத்திற்கும் 
கிடைகின்றது (புங்க ) மரம் வளர்த்து பயன் பெறுங்கள் நோயின் தாக்கத்திலிருந்தும் வெயிலின் தாக்கத்திலிருந்தும் விடுபட்டு ஆரோக்கியமாக வாழ்ந்திடுங்கள் 
வாழ்க இயற்கைவளங்களுடன் வாழ்க
இயற்கையின் ஆசியுடன் இயற்கையை போற்றுவோம் எந்தக்காலத்திலும் நலமாக வாழ்வோம்