Friday 13 October 2017

அன்பே சிவம்  நம்மை காக்கும் திருநீலகண்டத் திருப்பதிகம்  முதலாம் திருமுறை அனைவரும் படித்து பயன்பெற ஷேர் பண்ணுங்க

அன்பே சிவம் 
நம்மை காக்கும்
திருநீலகண்டத் திருப்பதிகம் 
முதலாம் திருமுறை

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வரும் இச்சூழலில் நம்மை காக்கும் இப்பதிகத்தை பகிர்வது அடியேனின் கடன் திருமுறை நம்மை காக்கவல்லது பக்தியுடன் ஓதுகையில் அதன் அற்புதத்தை உணரலாம்

ஞானசம்பந்தப்பெருமான் தன் அடியாருடன்
திருச்செங்கோட்டுக்கு வருகை தந்த போது 
கொங்குநாட்டில் விசக்காய்ச்சல் பரவியிருந்தது..

மக்கள் சொல்லொணாத துயருக்கு ஆளாகியிருந்தனர்...

தொற்று நோயாகிய அந்த விசக் காய்ச்சல்
அடியார்களையும் பற்றிக் கொண்டது.

விசகாய்சலினால் பாதிக்கப்பட்ட மக்களையும் அடியார்களையும் 
காத்தருள வேண்டி திருவுளங்கொண்டார் ஞானசம்பந்தப் பெருமான்.

மக்கள் நலம் பெற வேண்டி இறையருளைச் சிந்தித்தார்
அவ்வேளையில்  
பாடியருளிய திருப்பதிகம் தான்  திருநீலகண்டத் திருப்பதிகம்

செய்வினை வந்து எமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்! - என்று, ஒவ்வொரு திருப்பாடலின் இறுதியிலும் ஆணையிட்டருளிய திருப்பதிகம்.

இறையருளால் நாடு முழுதும் விஷக் காய்ச்சல் ஒழிந்தது.. 
மக்களும் பிணி நீங்கி நலம் பெற்றனர்

திருநீலகண்டத் திருப்பதிகம் 
முதலாம் திருமுறை.

( அவ்வினைக்கு இவ்வினையாம் என்று சொல்லும் அஃதறிவீர்
உய்வினை நாடாதி ருப்பதும் உந்தமக்கு ஊனம் அன்றே
கைவினை செய்தெம் பிரான் கழல் போற்றுதும் நாம் அடியோம்
செய்வினை வந்தெமைத் தீண்டப் பெறாதிரு நீலகண்டம்.

காவினை இட்டும் குளம் பலதொட்டும் கனிமனத்தால்
ஏவினையால் எயில் மூன்றெரித்தீர் என்று இருபொழுதும்
பூவினைக் கொய்து மலரடி போற்றுதும் நாம்அடியோம்
தீவினை வந்தெமைத் தீண்டப் பெறாதிரு நீலகண்டம்.

முலைத்தடம் மூழ்கிய போகங்களும் மற்றெவையும் எல்லாம்
விலைத்தலை ஆவணங் கொண்டுஎமை ஆண்ட விரிசடையீர்
இலைத்தலைச் சூலமுந் தண்டும் மழுவும் இவையுடையீர்
சிலைத்தெமைத் தீவினை தீண்டப் பெறாதிரு நீலகண்டம்.

விண்ணுலகு ஆள்கின்ற விச்சாதரரும் வேதியரும்
புண்ணியரென்று இருபோதுந் தொழப்படும் புண்ணியரே
கண்ணிமை யாதன மூன்றுடையீர் உம்கழல் அடைந்தோம்
திண்ணிய தீவினை தீண்டப் பெறாதிரு நீலகண்டம்.

மற்றிணை யில்லா மலைதிரண் டன்னதிண் தோளுடையீர்
கிற்றெமை ஆட்கொண்டு கேளாது ஒழிவதுந் தன்மைகொல்லோ
சொற்றுமை வாழ்க்கை துறந்துன் திருவடியே அடைந்தோம்
செற்றெமைத் தீவினை தீண்டப் பெறாதிரு நீலகண்டம்.

மறக்கு மனத்தினை மாற்றியெம் ஆவியை வற்புறுத்திப்
பிறப்பில் பெருமான் திருந்தடிக் கீழ்ப்பிழையாத வண்ணம்
பறித்த மலர்க்கொடு வந்துமை ஏத்தும் பணியுடையோம்
சிறப்பிலித் தீவினை தீண்டப் பெறாதிரு நீலகண்டம்.

கருவைக் கழித்திட்டு வாழ்க்கை கடிந்துங் கழலடிக்கே
உருகி மலர்கொடு வந்துமை ஏத்துதும் நாம் அடியோம்
செருவில் அரக்கனைச் சீரில் அடர்த்தருள் செய்தவரே
திருவினைத் தீவினை தீண்டப் பெறாதிரு நீலகண்டம்.

நாற்ற மலர்மிசை நான்முகன் நாரணன் வாதுசெய்து
தோற்றமுடைய அடியும் முடியுந் தொடர்வரியீர்
தோற்றினுந் தோற்றுந் தொழுது வணங்குதும் நாம்அடியோம்
சீற்ற மதாம்வினை தீண்டப் பெறாதிரு நீலகண்டம்.

சாக்கியப் பட்டுஞ் சமணுருவாகி உடை ஒழிந்தும்
பாக்கியம் இன்றி இருதலைப் போகமும் பற்றும் விட்டார்
பூக்கமழ் கொன்றைப் புரிசடையீர் அடி போற்றுகின்றோம்
தீக்குழித் தீவினை தீண்டப் பெறாதிரு நீலகண்டம்.

பிறந்த பிறவியிற் பேணியெஞ் செல்வன் கழலடைவான்
இறந்த பிறவியுண் டாகில் இமையவர்கோன் அடிக்கண்
திறம்பயின் ஞானசம் பந்தன செந்தமிழ் பத்தும்வல்லார்
நிறைந்த உலகினில் வானவர் கோனொடுங் கூடுவரே! )

திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment