Sunday, 11 February 2018

#Mahashivarathiri மகாசிவராத்திரி  மகிமை 13,2,2018

*மகாசிவராத்திரி  மகிமைகள்..!
**************************************
நற்றுணையாவது நமசிவாயவே!

#சிவராத்திரி: 
ஒவ்வொரு மாதமும் தேய்பிறை நாளில் வரும் சதுர்த்தசி திதி சிவராத்திரி..

#மகாசிவராத்திரி 
மாசி மாத சதுர்த்தசி திதியினை நாம் மகா சிவராத்திரியாக கொண்டாடுகிறோம். 
இது வருடத்திற்கு ஒரே ஒரு முறை மட்டும் வரும் சிவராத்திரி. 
இந்த ஆண்டு 13-02-2018 செவ்வாய் கிழமை  வருகின்றது.

எண்ணிய எல்லாம் நிறைவேற ஈஸ்வரா நீயே கதி என்று ஈசனது திருவடி பற்றி பணியும் நேரமும் அதுவே..! 
அப்படி பணிந்து பேரு பெற்றவர்களில் சிலர்.

*அன்னை உமையாளுக்காக சரீரத்திலும் பாதி தந்து 
பற்றற்ற நிலையில் இருக்கும் எம் பெருமான் அர்த்தனாதீஸ்வரராக ஆனது,..!

*அர்ஜூனன் அவர்கள் தவத்தால் பாசுபதம் என்னும் அஸ்திரத்தை பெற்றது,.!

*கண்ணப்ப நாயனார் என்னும் அன்புக்குரிய வேடன் சிவகதி என்னும் முக்தி அடைந்தது.!

*பகீரதன் தவப்பலன் கங்கையை பாரிக்கு தந்தது..!

*என்றும் பதினாறு வயதுடையோன்  மார்க்கண்டேயனுக்காக பாச கயிற்றை பஷ்பமாகியது..!

இப்படி கூறிக்கொண்டே செல்லலாம்.

மகா சிவராத்திரி அன்று அப்பன்  ஈசனுக்கு  நான்கு ஜாம பூஜைகள் செய்யப்படும். 
ஒவ்வொரு ஜாமத்தின் போதும் வெவ்வேறு விதமான அபிஷேகம்கள் ,அர்ச்சனைகள் , ஆராதனைகள் செய்யப்படும்.!

*ஒவ்வொரு ஜாமத்திலும் செய்யப்படும் அபிஷேகம்கள், அர்ச்சனைகள்..ஆராதனைகள் ..!

#முதல்_கால பூஜை : 6pm -9pm

இது ஜோதி சொரூபமான ஈசனின் முடி ( தலை பகுதி ) தேடி அன்னப்பறவையாய் மாறிய அய்யன்  பிரம்மன் எம்பெருமான் ஈசனுக்கு  செய்யும் பூஜையாகும்..!

அன்னைக்களுக்கெல்லாம் அரசி என்று போற்றப்படும் பசு என்னும் கோமாதா ..
மும்மூர்த்திகள் முதல் முப்பது முக்கோடி தேவர்களும் ரிஷிகள் யாவரும் உறையும் கோமாதா எனும் பசுவின் மூலம் பெறப்படும் அமுதுகளால் செய்யப்படும் பூஜை இதுவே .

இந்த கால பூஜையில் 
*"பஞ்ச கவ்வியத்தால்" (பசும்பால், பசுந்தயிர், பசுநெய், கோமயம், கோசாணம்) அபிஷேகம் செய்து, 
*சந்தனம் பூச்சு, 
*மஞ்சள் நிற பொன்னாடை அணிவித்தும், 
*வில்வம்,தாமரைப் பூவால் அர்ச்சனையும், அலங்காரமும் செய்து, 
*பாசிப் பருப்பு பொங்கல் நிவேதனமாக படைத்து, 
*ரிக்வேதம் ,சிவபுராணம்  பாராயணம் செய்து 
*நெய் தீபத்துடன் முதல் கால பூஜை நடத்தப்படும்..!

*பிறவி பிணி நீங்க இக்காலம் பெரிதும் உதவும் .!*

#இரண்டாவது_கால பூஜை : 9pm -12pm

திருவடி தேடி சென்ற பரம்பொருள்  "விஷ்ணு" அவர்களால்  எம்பெருமான் ஈசனுக்கு செய்யும் பூஜையாகும்..!

இந்த காலத்தில் 
*பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தும், 
*பச்சைக்கற்பூரம், பன்னீர் சேர்த்து அரைத்துச் சாத்துதல், 
*வெண்பட்டு ஆடை அணிவித்து அலங்காரம் செய்தும், 
*வில்வம்,துளசி அலங்காரம்,  அர்ச்சனைகள் செய்தும், 
*இனிப்பு பாயசம் நிவேதனமாக படைத்து, 
*யஜூர் வேதம் ,8ம் திருமுறையில் கீர்த்தி திருவகவல்  பாராயணம் செய்து
*நல்லெண்ணை தீபத்துடன் பூஜை நடைபெறும்..!

*இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் நோய்கள் தீரும் ; செல்வம் செழித்தோங்கும், திருமாலின் அருள் கிட்டும்...*

#மூன்றாவது_கால பூஜை : 12am-3am

அம்பாள் அவர்கள் அப்பன்  ஈசனுக்கு  செய்யும் பூசையினை மூன்றாம் கால பூஜை என்போம் .

இந்த காலத்தில் 
*தேன் அபிஷேகம் செய்தும் 
*பச்சை கற்பூரம் மற்றும் வில்வ இலையைக் கொண்டு அலங்காரம் செய்தும், 
*சிவப்பு வஸ்திரம் அணிவித்தும், 
*ஜாதி மல்லி பூவைக் கொண்டு அர்ச்சனைகள் செய்து 
*கற்கண்டு அன்னம்" நிவேதனமாக படைத்து, 
*சாமவேதம்  ,8ம் திருமுறையில் திருவண்டகப்பகுதி பாராயணம் செய்து
*நெய் தீபத்துடன் பூஜை நடைபெறும் .!

இந்த காலத்திற்குரிய சிறப்பு என்றால் இதை லிங்கோத்பவ காலம்என்றும் இந்த காலத்தில் சிவபெருமானின் அடி முடியைக் காண வேண்டி பிரம்மா அன்ன ரூபமாக மேலேயும், மகாவிஷ்ணு வராக ரூபமாக பாதாள லோகத்தையும் தேடிய சிறப்புடையது இந்த காலம்.
இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் எந்தவித தீய சக்தியும் நம்மை அண்டாமல் இருக்க சக்தியின் அருள் கிடைக்கும்..!

#நான்காவது_கால பூஜை : 3am-6am

முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூதகணங்களும், மனிதர்களும் அனைத்து ஜீவராசிகளும் சிவபெருமானை பூஜிப்பதாக கருதப்படுகிறது.

இந்த காலத்தில் ,
*குங்குமப்பூ சாற்றி ,கரும்பு சாறு & பால் அபிஷேகம் செய்தும், 
*பச்சை அல்லது நீல வண்ண வஸ்திரம் அணிவித்தும், 
*நந்தியாவட்டை பூவால் அலங்காரமும், அர்ச்சனையும் செய்து  
*சுத்தான்னம் நிவேதனம் படைத்து,
*அதர்வண வேதம்,8ம் திருமுறையில் போற்றித் திருவகவல்  பாராயணம் செய்து
தூப தீப ஆராதனைகளுடன் பூஜை நடைபெறும் .!
18 வகை சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் செய்யப்படுகிறது...!

*ஏக வில்வம் சிவார்ப்பணம் !!!
*****************************
மனிதர்களுக்கு மிக முக்கியானது இரண்டு விஷயம். உணவு, நல்ல தூக்கம். 
இந்த இரண்டையும் விலக்கி, சிவபெருமானுக்காக நாம் விரதமிருப்பது தான் இந்த நாளின் நோக்கமாகும்...!

உணவையும், உறக்கத்தையும் விலக்கினால் புலன்கள் தானாகவே அடங்கும். 
அப்போது இறையுணர்வு பெறமுடியும். நினைத்த காரியம் சித்தி ஆகும்...!

சிவபெருமான் ஆரவாரத்தை விரும்பாதவர்,
ஏகாந்தம்; ஏகாந்தம்; ஏகாந்தம். முற்றிலும் அமைதி..!
இவர் விரும்புவது அமைதி..!

மகா சிவராத்திரி அன்று திருமறைகளையும் ஓதலாம்...!!
சிவபுராணம், கோளறு பதிகம், லிங்காஷ்டகம், பஞ்சாட்சர ஸ்தோத்திரம், நடராஜப் பத்து, சிவ  ஸ்தோத்திரங்களைப் படிக்கலாம்.

சிவராத்திரியன்று பஞ்சாட்ச மந்திரம் உச்சரிப்பதால் மற்ற நாட்களில் நூறு முறை பஞ்சாட்சரம் ஜெபித்த பலன் கிட்டும் என்கிறது சாஸ்திரம்.

சிவராத்திரியன்று
மாலை 6 மணிக்குள் குளித்து விட்டு, உணவு முடித்து விட்டு கோவிலுக்கு செல்லுங்கள், பணியில் உள்ளவர்கள் பணி முடித்து விட்டு குளித்து விட்டு கோவிலுக்கு சென்று அமைதியாக ஒரு இடத்தில அமர்ந்து சிவ சிந்தனைகள் செய்தாலே போதுமானது.

*மனதில் சொல்லவேண்டிய மந்திரம்*

ஓம் நம சிவாய !
சிவாய நம ஓம் !

எண்ணிய எல்லாம் நிறைவேற 
அப்பனே  ஈஸ்வரா நீயே கதி என்று ஈசனது திருவடி பற்றி   போற்றுவோம் .!

தென்னாடுடைய சிவனே போற்றி !
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !

ஏகம்பத்துறை எந்தாய் போற்றி !
பாகம் பெண்ணுருவாய் ஆனாய் போற்றி !!

காவாய் கனகத் திரளே போற்றி !
கயிலை மலையானே போற்றி போற்றி !! 

*ஏக வில்வம் சிவார்ப்பணம் !!!*

 நற்றுணையாவது நமசிவாயவே ! *

படித்ததில் பகிர்ந்தது

No comments:

Post a Comment