Wednesday, 31 January 2018

பயம் தான் எதிரி

குத்துச் சண்டை வீரர் ஒருவர் இருந்தார். அந்தப் பகுதியில் அவரை வெல்ல யாருமே இல்லை. சில குத்துக்களிலேயே எதிரியை வீழ்த்திவிடும் வலிமை அவருக்கு இருந்தது. தோல்வி என்பதையே அறியாமல் வாழ்ந்து வந்தார். இப்போதெல்லாம் அவருடன் போட்டியிட யாருமே முன்வருவதில்லை.

🕴🏻அவருடைய எதிரிகள் எவ்வளவோ விதங்களில் முயற்சி செய்தும் கூட அவரை வீழ்த்த முடியவில்லை. நல்ல உடற்பயிற்சி , சத்தான உணவு , தேவையான அளவு உறக்கம் என்று தன்னுடைய உடலை நன்றாகப் பேணி வந்ததால், எதிரிகள் அவரை வீழ்த்த வேறு ஏதாவது வகையில் திட்டம் வகுக்க ஒன்று கூடினார்கள்.

🤔பல விதமான ஆலோசனைகளை அவர்கள் கூடிப் பேசினார்கள். ஏதாவது செய்து அவரைக் கொன்றுவிட்டாலும் அவர் வீரர்களுக்கெல்லாம் முன்மாதிரி என்று பேசப்பட்டு அழியாத புகழைப் பெற்று விடுவார். எனவே அந்த யோசனை கைவிடப்பட்டது. குடிப்பழக்கம் போன்ற கெட்ட பழக்கங்களை அவருக்கு அறிமுகப்படுத்தலாம் என்று முயற்சி செய்து அயல் நாட்டு போதை வஸ்துக்களை அவருக்குப் பரிசளிக்க முயன்ற போது அவர்களுக்கு முன்பாகவே அவர் அதை உடைத்து நொறுக்கி அவர்களை அவமானப்படுத்தி அனுப்பினார். உருப்படியாக எந்த ஒரு யோசனையும் கிடைக்காத நிலையில் அவர்களுக்குள் ஒரு முடிவெடுத்தார்கள். எதையாவது செய்து அவரைப் போட்டியில் வீழ்த்த வேண்டும்.

🎣எனவே அவரை வீழ்த்துபவருக்க 10லட்சம் பரிசு கொடுப்பதாக வாக்களித்தார்கள். பெரிய தொகைதான், இருந்தாலும் அவரை வீழ்த்த இதைவிட அதிகமாக செலவு செய்யவும் அவர்கள் தயாராக இருந்தார்கள். இந்தச் செய்தி காட்டுத்தீ போலப் பரவியது.

🥊இது புதிதாய் சண்டைப் பயிற்சி செய்து வரும் ஒரு இளைஞனின் காதிலும் விழுந்தது. 10 லட்சம் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டாலும் அந்த வீரரின் வலிமை தெரிந்திருந்ததால் போட்டிக்கு வர யாருமே முன்வரவில்லை. இந்த நிலையில் அந்தப் புதிய இளைஞன் , தான் போட்டிக்கு வருவதாக முன்வந்தான். பலரும் அவனை பயமுறுத்தி அவரிடம் மோத வேண்டாம் என்று அறிவுரை கூறினார்கள். அவனோ தன் முடிவில் உறுதியாக இருந்தான். வீரரும் அவனுடன் சண்டையிட சம்மதித்து விட்டார். போட்டியின் நாள் அறிவிக்கப் பட்டது.

🤺புதிய இளைஞன் தன்னுடைய நெருக்கமான நண்பர்களை வரவழைத்தான் . அவர்களிடம் தனக்காக உதவிச் செய்யும்படி சில விஷயங்களைக் கூறினான். அவன் எதற்காக அப்படிச் சொன்னான் என்று அவர்களுக்குப் புரியவில்லையென்றாலும் நண்பனின் வெற்றிக்காக எதையும் செய்யத் தயாராக இருந்ததால் அவன் சொன்னதை அப்படியே செய்தார்கள்.

🕺🏻அதில் ஒருவன் , வீரரின் வீட்டுக்குப் பழங்களுடன் போய் அவர் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் சொன்னான். அவரும் சந்தோஷமாக அவற்றைப் பெற்றுக் கொண்டு நன்றி சொன்னார். வந்தவன் திடீரென்று , " என்னய்யா ஆச்சு உங்களுக்கு? பேசும் போதே இப்படி மூச்சு வாங்குதே. கல்லு மாதிரி இருந்தீங்களே ! உடம்பைப் பாத்துக்குங்க " என்று சொல்லிக் கிளம்பினான்.

"எனக்கு மூச்சு வாங்குதா? நான் நல்லா தானே பேசுறேன்? ". அவருக்குக் குழப்பம் வந்துவிட்டது.

மறுநாள் அதிகாலை, அவர் வீதியில் ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திட்டப்படி இன்னொரு இளைஞன் அவருக்கு எதிர்ப்பட்டு வணங்கினான்.

"ஐயா, போட்டியில கலந்துக்கப் போறதா கேள்விப்பட்டேன். நான் உங்க தீவிர ரசிகன். இப்பவும் நீங்கதான் ஜெயிக்கப் போறிங்க. அதுல சந்தேகமே இல்லை. ஆனாலும் முன்னால உங்க ஓட்டத்துல இருந்த வேகமும், வலிமையும் இப்ப இல்லையே? உடம்பு சரியில்லையா? " என்று கேட்டுவிட்டு நகர்ந்தான்.

"என்ன எல்லாரும் இப்படி கேக்குறாங்க?" இப்போது சிறிதாய் பயம் துளிர்விட்டது.

போட்டி துவங்கும் நேரம் வந்தது. பலரும் வந்து அவருக்கு வாழ்த்து சொல்லி உற்சாகப் படுத்தினர். அவர் மேடையேறப் போகும் போது எதிராளியான இளைஞனின் நண்பனான மற்றொரு இளைஞன் கையில் பூங்கொத்துடன் வந்து அவரை வாழ்த்திக் கைகுலுக்கினான்.
"என்னய்யா, எப்பவும் உங்க பிடி இரும்பு மாதிரி இருக்கும் இப்ப ரொம்பவும் தளர்ந்து போச்சே. என்னாச்சு உங்களுக்கு? " என்று கேட்டுவிட்டு விடைபெற்றான் . அவ்வளவுதான் . வீரர் முற்றிலுமாக சோர்ந்து போனார்.

🤼‍♀போட்டி துவங்கியது . அவர் வேகமாய்த் தாக்குதலை ஆரம்பித்தாலும் இனம் புரியாத சோர்வு அவரை மேற்கொண்டது. இளைஞனின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பலவீனமாய் சரிந்தார். எல்லாரும் ஓடி வந்து இளைஞனின் சாதனையையும் , வீரத்தையும் பாராட்டினார்கள் . அவனோ நன்றிப் புன்னகையோடு தன் நண்பர்களின் முகத்தை ஏறிட்டான்.

"பலருடைய வாழ்வில், வந்துவிட்ட வியாதியைவிட, வந்துவிடுமோ என்று எண்ணி பயப்படுகிற வியாதியே பலரை விழத்தள்ளிவிடுகிறது. பலவீனங்களை நோக்கிப் பார்க்கும்போது நாம் பலவீனப்பட்டுத்தான் போவோம்.
படித்ததில் பகிர்ந்தது

Saturday, 13 January 2018

நம் நாட்டின் பாரம்பரியமான  போகிப்பண்டிகை 13/1/2018 இன்று கொண்டாடப்பட்டது  இதில் சிறுவர்கள் உற்சாகத்துடன் மேளம் அடித்து கொண்டாடினர். 

https://youtu.be/ofSFg8w2hR0

போகித் திருநாள் ..13/1/2018
கொண்டாட்டம்
உற்சாகமாக பொங்களை வரவேற்கும் விதமாக சிறுவர்கள் வீடுகளின் முன்பு மேளம் தாளத்த்துடன் பழைய பொருட்களை தீ வைத்து கொளுத்தினர் .

நம் நாட்டின்
பாரம்பரியமான 
போகிப்பண்டிகை 13/1/2018
இன்று கொண்டாடப்பட்டது 
இதில் சிறுவர்கள் உற்சாகத்துடன் மேளம் அடித்து கொண்டாடினர். இன்றளவும்  மாநகரங்களிலும் கூட சிறுவர்கள் மற்றும் பெரியோர்கள்  நம் நாட்டின் பாரம்பரியமான போகிப்பண்டிகையை  உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்கின்றனர்  (பழையன கழிதலும் புதியன புகுதலும் ) போகி பண்டிகையின்  சிறப்பு  அனைவருக்கும் இனிய போக்கிப்பண்டிகை நல்வாழ்த்துக்கள் 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் இறை அருளால் எந்த காலத்திலும் எந்த யுகத்திலும் நல்லதே நடகட்டும் நல்லதே நிலைக்கட்டும் .

திருவள்ளூர் ஜன 13-

திருவள்ளூர் மாவட்டத்தில்  போகித் திருநாளை வரவேற்கும் விதமாக சிறுவர்கள்  வெகு.விமரிசையாக மேள தாளங்கள் முழங்க   வீட்டில் இருந்த பாய் படுக்கை உள்ளிட்ட பழைய பொருட்களை பெற்றோர்களுடன்  தங்களது வீடுகளின் முன்பு  தீயிட்டு கொளுத்தி பொங்கள் திருநாளை வரவேற்கும் விதமாக உற்சாகமாக ஆடிப்பாடி மகிழ்ந்தனர் .கும்முடிப்பூண்டி திருவள்ளூர் பொன்னேரி திருவள்ளூர்  ஆவடி அம்பத்தூர் மாதவரம் திருவொற்றியூர் என மாவட்டத்தின் பல்வேறு இடங்கள் மற்றும்  சென்னை புறநகரில்   போகியை முன்னிட்டுஅதிகாலையில் பனி மூட்டத்திற்கு இடையே தீயிட்டுபழைய பொருட்களை கொளுத்தி போகிப்பண்டிகையை கொண்டாடினார்கள் இதனால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டத்துடன் காணப்பட்டன

Saturday, 6 January 2018

திருவாலங்காடு வடரண்யேஸ்வரர் திருவொற்றியூர்  தியாகராஜ சுவாமிகோயில் உள்ளிட்ட.தமிழகத்தின் பல்வேறுபகுதிகளில் உள்ள சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம்வெகுவிமரிசையாக  நடைபெற்றது__1/1/2018 ___2/1/2018

1/1/2018 ___2/1/2018
திருவாலங்காடு வடரண்யேஸ்வரர் திருவொற்றியூர்  தியாகராஜ சுவாமிகோயில் உள்ளிட்ட.தமிழகத்தின் பல்வேறுபகுதிகளில் உள்ள சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம்வெகுவிமரிசையாக  நடைபெற்றது.
ஏராளமான பக்தர்கள்  புத்தாண்டு தினத்தில் கோயில்களில் குழுமியிருந்து சங்கநாதம் மேளதாளம்  வாத்தியங்களுடன் சிவபெருமானுக்கு விடிய விடிய சிறப்பு அபிஷேக ஆராதணை செய்து பக்தி பெருக்குடன் வழிபட்டனர் .

திருவள்ளூர் மாவட்டத்தில்.உள்ளஆடல் சபைகளில் முதன்மை சபையாக விளங்கும் காரைக்கால் அம்மையார்முக்தி பெற்ற.தளமான இரத்தினசபையான  திருவாலங்காடு வடரண்யேஸ்வரர்  கோயிலில் ஆருத்ரா விழா வெகுசிறப்பாக நடைபெற்றது.அதில் கூத்தபெருமான்  சிவன் ஒற்றை காலை தூக்கியவாறு மறுகாலில் திருநடனம்புரியும் நடராஜர் உற்சவர் திருமேனிக்கு பால் பன்னீர் புஷ்பம் மஞ்சள் விபூதி தேன் தயிர் என பல்வேறு நறுமண பொருட்களை கொண்டு அபிஷேக ஆராதனை வெகுவிமரிசையாக நடந்தது..இதில் காஞ்சிபுரம் சித்தூர் வேலூர் அரக்கோணம் திருத்தணி பள்ளிப்பட்டு  திருவள்ளூர் சென்னை உள்ளிட்ட.பல்வேறு பகுதிகளில் இருந்து இருபதாயிரம் பேர் வடாரேன்யேஸ்வரர் கோயிலின் ஆருத்ரா நிகழ்வில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர் .அதே போன்று 
திருவொற்றியுர் அருள்மிகு வடிவுடையம்மன் உடனுறை தியாகராஜசாமி கோயில் ஆருத்ரா தரிசனம்  பிரம்மாண்டமாகநடைபெற்றது.
அதில் ஆயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள் விடிய விடிய கண்விழித்து அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொண்டனர் .பின்னர்  சிவனடியார்கள் ஓதுவார்கள்  பஜனைகளில் பங்கேற்று சிவபெருமானை தோளில் சுமந்து நான்கு மாட வீதிகளில் வலம் வந்து வடிவுடையம்மன்  உடனறை தியாகராஜரை வழிபட்டனர் .இதில் திருவள்ளூர் காஞ்சிபுரம் கும்முடிப்பூண்டி சென்னை பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளாக பக்தர்கள் உடன் திருவள்ளூர் மாவட்ட.ஆட்சியர் சுந்தரவல்லியும் திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோயில் தக்கார் ஜெய்சங்கர் உள்ளிட்டோரும்  பங்கேற்று ஆடல் பெருமானின்  ஆசியை பெற்றனர் .