Friday 8 July 2016

உடலுக்கு தீங்கு கேடு விளைவிக்கும் நச்சுத்தன்மை வாய்ந்த அசைவஉணவுகள்

உடலுக்கு தீங்கு கேடு விளைவிக்கும்
நச்சுத்தன்மை வாய்ந்த அசைவஉணவுகள் அசைவ உணவில் ( nonveg ) புரதசத்து [ protein ]அதிகஅளவில் இருப்பதால் ,அசைவ உணவு சிறுநீரகங்களை அதிக வேலையில் ஆழ்த்துகிறது இதனால் உடல் உறுப்புகளின் இயக்கத்திரன் குறைகிறது.இது ஆரோக்கியத்தை உருக்குலைக்கும் கோளாறுகளை நம் உடலில் ஏற்படுத்தும்.அசைவ உணவுகள் அதிலுள்ள கொழுப்பு சக்தியால் கலோரிகளை அதிகபடுத்துகின்றன.இது உடல் பருமன்,நீரிழிவு உயர் இரத்த அழுத்தம் போன்ற,ஆரோக்கியக்கேடுகளுக்கு வழிவகுக்கிறது,எல்லா மிருகங்களின் திசுக்களும், நச்சுதன்மையைக் கொண்டகழிவுகளைத் தன்னகத்தே கொண்டிருகின்றன.மாமிச உணவை உட்கொள்ளும்போது,உடல் அமைப்பில் உள்ள விஷத்தன்மையின் `எல்லைகள் வரம்புமீருகின்றன.அசைவ உணவில் நார்த்தன்மை[ fiber content ] குறைவாக இருப்பதால், குடல் பகுதியில் உணவின் இயக்கம் குறைந்து [ colon ] புற்றுநோய்க்குக் காரணமாகிறது.அதாவது குடல் வாயிலிருந்து மலக்குடல் வரையிலுள்ள பெருங்குடலின் பகுதியில் புற்றுநோயின் பாதிப்பு வரக்கூடும்.அசைவ உணவின் விளைவான அதிக,அளவு யூரிக் அமிலம்[ uric acid ]பல நோய்களை வாதரோகம்,ப்ளைட் நோய்[ blights disease ] சிறுநீரகற்கள் போன்ற பல உடல் நலகேடுகளை உருவாக்கும்.

No comments:

Post a Comment