Friday, 8 July 2016

உடலுக்கு தீங்கு கேடு விளைவிக்கும் நச்சுத்தன்மை வாய்ந்த அசைவஉணவுகள்

உடலுக்கு தீங்கு கேடு விளைவிக்கும்
நச்சுத்தன்மை வாய்ந்த அசைவஉணவுகள் அசைவ உணவில் ( nonveg ) புரதசத்து [ protein ]அதிகஅளவில் இருப்பதால் ,அசைவ உணவு சிறுநீரகங்களை அதிக வேலையில் ஆழ்த்துகிறது இதனால் உடல் உறுப்புகளின் இயக்கத்திரன் குறைகிறது.இது ஆரோக்கியத்தை உருக்குலைக்கும் கோளாறுகளை நம் உடலில் ஏற்படுத்தும்.அசைவ உணவுகள் அதிலுள்ள கொழுப்பு சக்தியால் கலோரிகளை அதிகபடுத்துகின்றன.இது உடல் பருமன்,நீரிழிவு உயர் இரத்த அழுத்தம் போன்ற,ஆரோக்கியக்கேடுகளுக்கு வழிவகுக்கிறது,எல்லா மிருகங்களின் திசுக்களும், நச்சுதன்மையைக் கொண்டகழிவுகளைத் தன்னகத்தே கொண்டிருகின்றன.மாமிச உணவை உட்கொள்ளும்போது,உடல் அமைப்பில் உள்ள விஷத்தன்மையின் `எல்லைகள் வரம்புமீருகின்றன.அசைவ உணவில் நார்த்தன்மை[ fiber content ] குறைவாக இருப்பதால், குடல் பகுதியில் உணவின் இயக்கம் குறைந்து [ colon ] புற்றுநோய்க்குக் காரணமாகிறது.அதாவது குடல் வாயிலிருந்து மலக்குடல் வரையிலுள்ள பெருங்குடலின் பகுதியில் புற்றுநோயின் பாதிப்பு வரக்கூடும்.அசைவ உணவின் விளைவான அதிக,அளவு யூரிக் அமிலம்[ uric acid ]பல நோய்களை வாதரோகம்,ப்ளைட் நோய்[ blights disease ] சிறுநீரகற்கள் போன்ற பல உடல் நலகேடுகளை உருவாக்கும்.

Wednesday, 6 July 2016

கேடுவிளைவிக்கும் குடிப்பழக்கம்

(குடிப்பழக்கம் கேடு விளைவிக்கும்
மது அருந்துவது உடல்நலத்திற்கு கேடு )
குடிபழக்கம் ஈரலை செயல் இழக்க வைக்கும்  இதனால் வயிற்றில் தேவையற்ற கெட்ட நீர் சேர்ந்து வயிறு வீங்க ஆரம்பிக்கின்றது இதை மகோதரம் [ascites ] என்பர் இருதயம் கொஞ்சம், கொஞ்சமாய் பலவீனமடைந்து வீங்க ஆரம்பிக்கும்.இதை,alcoholic cardiomyopathy  என்பர்.குடிபழக்கம் உள்ளவர்கள் நாளிடைவில் தங்கள் உணவு வகைகளில் கவனம் செலுத்த தவறிவிடுவார்கள்.அந்தச்சமயத்தில் வைட்டமின் பி [ thiamine ] என்ற உயிர்சத்து சரியாக உடல் தேவைகளுக்கு கிடைக்காததால் மூளை பாதிக்கபடலாம் இது ஒரு வகை மன வியாதியிலும் கொண்டு போய்விடுகிறது [korsakoffs phychosis] இம்மாதிரி மனநிலை உள்ளவர்கள் தங்கள் பார்க்காத ஒரு நிகழ்ச்சியை மிக தத்ரூபமாக விவரிப்பார்கள் குடிகரர்களுடன் பழகுவது கூட சில சமயம் விபரீதமாகிவிடலாம் .சூட்டைதரும் உணவு குளிர்சியைதரும் உணவு என்று எதுவும் இல்லை,எனவேசிலர் பீர் உடல் சூட்டைதணிக்கும் ,குளிர்சியைதரும் என்று யாராவது சொன்னால் ,அவர் நீங்கள் கெட்டுப்போவதைதான் விரும்புகிறார் என்று அர்த்தம் ,அவரைதிருத்துங்கள் அல்லது அவரைபோன்றவர்களோடு பழகுவதைத்தவிர்க்க முயலுங்கள்.ஒல்லியாக இருப்பவர்கள் பீர் குடித்தால்    குண்டாகிரார்களோ இல்லையோ ஒன்றுமட்டும் நிச்சயம்,வயிறு குண்டாகிவிட வாய்ப்பு இருக்கிறது.மது  குடியை  கூடுதலாக அருந்துவதால் வயிற்றின் நடு பகுதியில் சில மாற்றங்கள் ஏற்பட்டு [ zenkers degeneration ] தொப்பை ஏற்படும் கத்திரிக்காய்க்கு கை கால் முளைத்தது போல ஆகிவிடாதீர்கள்.போதை பொருள்களை உட்கொள்வதால் பிரச்சனைகள் மறைந்துவிடுவதுமில்லை ,குறைந்துவிடுவதுமில்லை ,மாறாக அவை அதிகமாகவே வாய்ப்பு இருகின்றன.போதை பொருள்களை உட்கொண்டால் கண்களில் சில மாயத்தோற்றம் [ visuval  hallucination ] உண்டாகலாம் அதே போல் செவிகளில் [ஓலி பிரம்மை] பல விதமான சத்தங்கள் உண்டாகலாம் உணர்சிகளில் விளையும் பிரம்மை உண்டானால் அது ஸ்பரிசத்தில் விதவிதமான மாய உணர்சிகளைதோற்றுவிக்கலாம் இந்த மாய தோற்றத்திற்கு அடிமையாகி, தங்கள் வாழ்க்கையை தொலைதுவிடுகின்றார்கள் தனக்கு,வேண்டிய,போதை,பொருள்,கிடைக்கவில்லை, என்றால்,கொலை,வெறிகூட ஏற்பட்டுவிடுகிறது .இந்த சூழலில் தான் போதைபொருள்களுக்கு அடிமையானவர்கள் சமுதாயத்திற்கு எதிராக செயல்படும் கும்பலிடம் சிக்கி விடுகின்றனர்.அவர்களும் இவர்களுக்கு நாய்க்கு எலும்புத்துண்டு போடுவதுபோல் இவர்களுக்கு வேண்டிய மதுவை வாங்கிகொடுத்து தங்கள் காரியத்தை சாதித்துகொள்கிறார்கள்.மாணவர் சமுதாயத்தின் முக்கிய தூண் அந்த தூண் விழாமல் இருக்க வேண்டுமானால் அவர்கள் கல்வி பயலுவதிலும் தங்கள் அறிவை வளர்பதிலும், விளையாட்டு துறையிலும் மற்றும் பல நல்ல விஷயங்களிலும் கவனத்தை செலுத்தவேண்டும் போதைதரும் விஷயம் எதுவும் வேண்டாம்  ,சமுதாயத்தில் பேரும் புகழும் பெற முயற்சிசெயுங்கள்.

( புகைபிடிப்பது  உடல்நலத்திற்கு தீங்குவிளைவிக்கும் புகைபிடிப்பதையும் மது அருந்துவதையும் தவிர்த்திடுங்கள் நலமாக வாழ்திடுங்கள் )