Saturday, 4 June 2016

(கடற்கரையில்  கொட்டபடும் குப்பைகள் மற்றும் கழிவுகள் )

(கடற்கரையில்  கொட்டபடும் குப்பைகள்
மற்றும் கழிவுகள் )

சென்னை மற்றும் தமிழக  கடற்கரை பகுதிகளில் ( சில ) இடங்களில் கொட்டப்படும் குப்பைகளால் சுற்றுசூழல் மற்றும் கடல்மாசடைகின்றது மேலும் கடல் வாழ் உயிரினங்களுக்கு கேடுவிளைவிப்பதாக அமைகின்றது கடற்கரை பகுதிகளில குப்பைகள் கொட்டப்படும் இடங்களை கண்டறிந்து தடுக்க  சென்னை பெருநகர மாநகராட்சி & அரசாங்கமும் உடனடியாக நடவடிக்கை எடுத்து கடற்கரையில் குப்பைகள் கழிவுபொருட்கள் கொட்டப்படுவதை தடுக்க மக்களிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும் மேலும் சிலர் இரவு நேரங்களில் தொழில் சாலைகளின் கழிவு மற்றும் குப்பைகளை கடற்கரைகளில் கொட்டிவிட்டு சென்றுவிடுகின்றனர் இப்படி கொட்டப்படும் குப்பைக்கழிவுகள் கடல் அலைகளால் அடித்து இழுத்து செல்லப்பட்டு கடலில் கலந்து மிதப்பதனால் கடல்மாசு அடைகின்றது இதனால் கடல்வாழ் உயிரினங்களுக்கும் சுட்றுச்சூழலுக்கும் கேடுவிளைவிக்கும் என்று சுற்றுச்சூழல் மற்றும் சமுக ஆவலர்களின் கருத்தாக உள்ளது . இதுபோன்று கடற்கறையில் குப்பைகள் மற்றும் கழிவுப்பொருட்கள் கொட்டபடும் இடங்களை
கண்டறிந்து உடனடியாக   சென்னை பெரு நகர மாநகராட்சி
மற்றும் அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் மேலும் கடற்கரைகளில் குப்பைகள் கழிவுப்பொருட்கள் கொட்டப்படாமல் இருக்க கடற்கரையோரங்களில் விழிப்புணர்வு (போர்டுகள்)
பதாகைகள் வைத்து  மக்களிடையே
கடல் மற்றும் கடற்கரையை தூய்மையாக வைத்துகொள்ள விழிபுணர்வை ஏற்படுத்திடனும் என்பதே சுற்றுச்சூழல் ஆவலர்களது கோரிக்கையாக உள்ளது  நாமும் நமது வீட்டையும் சுற்றத்தையும் கடல் மற்றும் கடற்கரையையும் தூய்மையாக வைத்துக்கொள்வோம் மரம் வளர்ப்போம்  இயற்கைவளங்களை காப்போம்.நன்றி
( சென்னை செய்திகள்+      Chennaiseidhigal+ )

No comments:

Post a Comment