Wednesday, 28 March 2018

தெருக்கூத்து Therukootthu

மிகவும் பழமையான தெரு,கூத்து நாடகம் திருவொற்றியூர் எல்லையம்மன் கோயில்48ஆம் ஆண்டு ஜாத்திரை விழாவினை முன்னிட்டு 28/3/2018   புதன்கிழமை அன்று திருவொற்றியூர் சன்னதிதெருவில் தெருகூத்து ஆண்மீக பக்தி நாடகம் நடைபெற்றது.
மிகவும் பழமையான தெரு,கூத்து நாடகம் ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம்.அதே,போன்று
28/3/2018 அன்றும்  திருவொற்றியூரில் தெரு,கூத்து நாடகம் சன்னதி    தெருவில்,நடைபெற்றது,இதில் ஏராளாமான,மக்களும்,சிறுவர்களும் ஆர்வத்துடன் தெரு கூத்தை கண்டு ரசித்து மகிழ்ந்தனர்,மேலும்,பழமையான தெருக்கூத்தையும்,தெரு கூத்து கலைஞர்களையும் அரசாங்கம்,ஆதரித்து,பல சலுகைகள்,வழங்கி,தெருக்கூத்து,
நாடகக்கலையை,எந்த,ஒரு ,இடையூறும்,இல்லாமல்,நடத்த,அனுமதி,வழங்கி
மேலும் நமது பாரம்பரியமான,தெருக்கூத்து,
கலையையும், கலைஞர்களையும்,  அழியவிடாமல்,அரசாங்கம்,ஆதரவு,
அளித்து,காக்க,வேண்டும்,என்பதே,
பொது,மக்கள்,
மற்றும்,தெருக்கூத்தை ரசிப்பவர்களின் கோரிக்கையாக உள்ளது.

Friday, 16 March 2018

திருமறைக்காடுபதிகம் கோளறு பதிகம்

29. திருமறைக்காடு

திருமுறை 2/85 பண் பியந்தைக்காந்தாரம் இராகம் நவரோசு.
வேய் உறு தோளி பங்கன் விடம் உண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி
மாசு அறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனி பாம்பு இரண்டும் உடனே
ஆசு அறும் நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார் அவர்க்கு மிகவே.
என்பொடு கொம்பொடு ஆமை இவை மார்பு இலங்க
எருது ஏறி ஏழைஉடனே
பொன் பொதி மத்தமாலை புனல் சூடி வந்து என்
உளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டோடு ஆறும்
உடன் ஆய நாள்கள் அவைதாம்
அன்பொடு நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார் அவர்க்கு மிகவே.
உரு வளர் பவளமேனி ஒளி நீறு அணிந்து
உமையோடும் வெள்ளை விடைமேல்
முருகு அலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்து என்உளமே புகுந்த அதனால்
திருமகள் கலைஅதுஊர்தி செயமாது பூமி
திசைதெய்வம் ஆனபலவும்
அரு நெதி நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார் அவர்க்கு மிகவே.
மதிநுதல் மங்கையோடு வடபால் இருந்து
மறை ஓதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றைமாலை முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
கொதிஉறு காலன் அங்கி நமனோடு தூதர்
கொடுநோய்கள் ஆன பலவும்
அதிகுணம் நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார் அவர்க்கு மிகவே.
நஞ்சு அணி கண்டன் எந்தை மடவாள் தனோடும்
விடை ஏறும் நங்கள் பரமன்
துஞ்சு இருள் வன்னி கொன்றை முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடும் உரும்இடியும் மின்னும்
மிகையான பூதம் அவையும்
அஞ்சிடும் நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார் அவர்க்கு மிகவே.

வாள்வரி அதள் அது ஆடை வரி கோவணத்தர்
மடவாள் தனோடும் உடன் ஆய்
நாள்மலர் வன்னி கொன்றை நதி சூடி வந்து என்
உளமே புகுந்த அதனால்
கோள் அரி உழுவையோடு கொலை யானை கேழல்.
கொடு நாகமோடு கரடி
ஆள் அரி நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார் அவர்க்கு மிகவே.
செப்பு இளமுலை நல் மங்கை ஒருபாகம் ஆக
விடைஏறு செல்வன் அடைவு ஆர்
ஒப்பு இளமதியும் அப்பும் முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும் வாதம் மிகை ஆன பித்தும்
வினை ஆன வந்து நலியா
அப்படி நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார் அவர்க்கு மிகவே.
வேள் பட விழிசெய்து அன்று விடைமேல் இருந்து
மடவாள் தனோடும் உடனாய்
வாள்மதி வன்னிகொன்றைமலர்சூடி வந்து என்
உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன் தனோடும்
இடரான வந்து நலியா
ஆழ் கடல் நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார் அவர்க்கு மிகவே.
பலபல வேடம் ஆகும் பரன் நாரிபாகன்
பசு ஏறும் எங்கள் பரமன்
சலமகளோடு எருக்கும் முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்
மலர்மிசையோனும் மாலும் மறையோடு தேவர்
வரு காலமான பலவும்
அலைகடல் மேரு நல்ல அவை நல்லநல்ல
அடியார் அவர்க்கு மிகவே.
கொத்து அலர் குழலியோடு விசையற்கு நல்கு
குணம் ஆய வேட விகிர்தன்
மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
புத்தரொடு அமணை வாதில் அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார் அவர்க்கு மிகவே.
தேன் அமர் பொழில் கொள் ஆலை விளை செந்நெல் துன்னி
வளர் செம்பொன் எங்கும் நிகழ
நான் முகன் ஆதித்ய பிரமாபுரத்து
மறைஞான ஞான முனிவன்
தான் உறு கோளும் நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய்
ஆன சொல்மாலை ஓதும் அடியார்கள் வானில்
அரசு ஆள்வர் ஆணை நமதே.

திருச்சிற்றம்பலம்.

Tuesday, 13 March 2018

Pure veg  Vegetable biriyani காய்கறி பிரியாணி

Pure veg 
Vegetable biriyani... mushroom masala... onion raitha with potato chips 
காய்கறி பிரியாணி
தேவையான ப்பொருட்கள்.   :

பாஸ்மதி அல்லது சீரகசம்பா அரிசி.    : 2 கப்
வெங்காயம்.       : 2(நீளவாக்கில் நறுக்கவும்)
தக்காளி.       : 3(பொடியாக நறுக்கவும்)
இஞ்சி பூண்டு விழுது.  : 1 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய்.    : 3( நீளவாக்கில் நறுக்கவும்)
மிளகாய்த்தூள்.  : 1 டீஸ்பூன்
தனியாத்தூள்.   : 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள்.    : 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா தூள்.  : 1 டீஸ்பூன்
கேரட்.     : 1
பீன்ஸ்.    : 50 கி
பச்சை பட்டாணி.   : 50கி
காலிஃப்ளவர்.     : சிறிது
உருளைக்கிழங்கு.  : 1
ஏலக்காய்.    : 2
கிராம்பு.        : 2
பட்டை.       : 2
அன்னாசி பூ.  : 2
பிரிஞ்சி இலை. : 2
சோம்பு.      : 1 டீஸ்பூன்
தயிர்.        : 1/2 கப்
தேங்காய் பால்.   : 1 கப்
கொத்தமல்லித்தழை.  : 1 கப்
புதினா.     : 1 கப்
எலுமிச்சை சாறு.  : 2 டீஸ்பூன்
பிரட்.     : 2துண்டு

செய்முறை.   :

1. அடிகனமான அகலமான பாத்திரத்தில் 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் மற்றும் 1 டேபிள்ஸ்பூன் நெய் ஊற்றி காய்ந்ததும் அதில் ஏலக்காய் கிராம்பு பட்டை சோம்பு பிரிஞ்சி இலை மற்றும் அன்னாசி பூ சேர்த்து தாளிக்கவும்.

2. நறுக்கிய வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும்.பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்.

3. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

4. காய்கறிகளை விருப்பமான வடிவத்தில் நறுக்கி சேர்த்து நன்றாக வதக்கவும்.

5. நன்றாக வதங்கியதும் பாதியளவு கொத்தமல்லி புதினா இலை போட்டு சிறிது நேரம் வதக்கவும்.

6. பிறகு மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் தனியாத்தூள் கரம் மசாலா தூள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்றாக வதக்கவும்.

7. எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.

8. தயிர் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.

9. பிறகு இரண்டு கப் தண்ணீர் மற்றும் ஒரு கப் தேங்காய் பால் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

10. கொதிக்க ஆரம்பித்ததும் அரைமணி நேரம் ஊறிய அரிசியை போட்டு நன்றாக கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

11. தண்ணீர் வற்ற ஆரம்பிக்கும் போது எலுமிச்சை சாறு கலந்து மேலே மீதமுள்ள கொத்தமல்லி புதினா இலைகளை தூவி ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி தட்டை வைத்து மூடி குறைந்த தீயில் வேகவிடவும்.

12. பத்து நிமிடத்திற்கு பிறகு தோசை கல்லை சிறிது தண்ணீர் ஊற்றி சூடாக்கி இந்த பாத்திரத்தை அதன் மேல் வைக்கவும்.

13. பதினைந்து நிமிடம் குறைந்த தீயில் வேகவிடவும்.

14. பிறகு அடுப்பை அணைத்து விடவும்.

15. சிறிது நேரத்திலே திறந்து மெதுவாக கலந்து கொள்ள வேண்டும்.

16. பிரட் துண்டுகளை நெய்யில் வறுத்து பிரியாணியில் சேர்த்து கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

17. வெங்காய பச்சடி மற்றும் சிப்ஸ் உடன் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

குறிப்பு.   : குக்கரில் இதேபோல் செய்யலாம். அனைத்தையும் வதக்கி அரிசி சேர்த்து மூடி வைத்து 1 விசில் போதும்.
படித்ததில் பகிர்ந்தது .

Friday, 9 March 2018

ஒரு தந்தையாவது மிகவும் இலகுவானது. ஆனால் , ஒரு தந்தையாக இருப்பது மிகவும் கடினமானது. தந்தையை போற்றுவோம்

 ( தந்தை )
அப்பா...
ஒரு மனிதன், பின்னாளில் தனக்கு சொந்தமாக்கி வைத்திருக்கிற துணிச்சலும், திடமும் அப்பா என்கிற அடிவேரிலிருந்து கிடைத்தது தான். ஒரு குழந்தையின் நடத்தை, பழக்க வழக்கம், பண்பு எல்லாவற்றுக்கும் முன்னுதாரணமான வழிகாட்டி தந்தையே.

கடவுள் மனித உயிர்களுக்கு அளித்த மிகப்பெரிய வெகுமதி தந்தை. ஒரு நல்ல தந்தை ஆயிரம் ஆசிரியர்களுக்கு சமமாக இருப்பார். எப்போதும் எங்களோடு கூட இருந்து வழிகாட்டுகிற இந்த அகல்விளக்கின் தியாகம் அளப்பரியது.

தன் குழந்தையை வளர்த்து ஆளாக்க பொருளாதார ரீதியாக தந்தைமார் சுமக்கிற சுமைகள் அதிகமானவை . அதற்காக அவர்கள் படுகிற பாடுகள் வலிமிகுந்தவை.ا

ஒரு நல்ல தகப்பனுக்கு தன் குழந்தைகளின் வளர்ச்சி மீது இருக்கிற அக்கறையிலும், அங்கலாய்ப்பிலும் இருக்கும்  தீவிரம் வேறெந்த உறவுகளிடமும் இருக்காது. தம் குழந்தைகளின் எதிர்காலம் பற்றியே சதா சிந்திக்கும் அப்பாக்கள் அவர்களுக்காகவே தம் வாழ்க்கை முழுவதையும் தியாகம் செய்து விடுகின்றனர்.

அம்மா என்றால் அன்பு என்கின்றோம். ஆனால் வெளிக்காட்டிக் கொள்ளாத அப்பாக்களின் அன்பும் மிகுந்த ஆழமானது தான். அவர்களின் பாசமும் ஈரமானது தான்.

தம் பிள்ளைகளை நல்வழிப்படுத்தி கூட்டிச் செல்வதற்கு அவர்களுக்கு கண்டிப்பு அவசியமாகிறது. அதனாலென்னவோ பல அப்பாக்கள் தம் பிள்ளைகள் மீது கொண்டிருக்கிற தாய்க்கு நிகரான நேசத்தை வெளிக்காட்டாமல் மிகவும் இரகசியமாகவே வைத்திருக்கிறார்கள்.ا

தந்தை என்கிற சூரியனின் வெளிச்சம் நன்றாக கிடைத்துவிட்டால்
பிள்ளைத் தாவரங்கள் இயல்பாகவே செழித்து வளர்ந்து விடும்.

வாழ்வின் அனுபவப் பாடங்கள் அனைத்திலும் மிகச் சிறந்த ஆசானாக ஒவ்வொரு இளைஞனுக்கும் யுவதிக்கும் அவரவர் அப்பாக்களே இருக்கிறார்கள்.

நாம் வாழும் சமூகத்திற்கு ஒரு நல்ல மனிதன் கிடைத்திருக்கிறான் என்றால் அவனுக்கு பின்னால் ஒரு பொறுப்பு மிக்க தந்தையின் கடும் உழைப்பும் தியாகமும் இருந்திருக்கிறதென்றே அர்த்தம்.

யானையின் பலம் தும்பிக்கையிலே என்பது எவ்வளவு தூரம் உண்மையானதோ.. அதைவிட உண்மையானது ஒரு மனிதனின் பலம் நம்பிக்கையிலே என்பது. ஒவ்வொரு மனித மனசுக்குள்ளும் ஓடிக்கொண்டிருக்கும் அந்த நம்பிக்கை நதியின் நதிமூலம் அவரவர் அப்பாக்களே!

ஒரு குழந்தை அப்பாவின் கைப்பிடித்துக் கொண்டு எடுத்து வைக்கிற முதல் அடியே நம்பிக்கை விதையின் பதியமிடல் நிகழ்வு.

விழவும், எழவும் வலிகளையும் வடுக்களையும் தாங்கிக் கொண்டு நடக்கவும் ஒரு அப்பாவிடமிருந்து குழந்தை பெறுகிற பயிற்சி அவசியமானது.

இருகைகள் தட்டி எழும் ஓசை போல அம்மா அப்பா என்கிற இரு உறவுகளின் ஆரோக்கியமான இணைப்பும் பிணைப்பும் இல்லாமல் ஒரு நல்ல மனிதனை இந்த சமூகம் பெற முடியாது.

ஒரு தாய் தன் குழந்தை தன்னுடனேயே இருக்க வேண்டுமென்கிற அன்பின் உச்சத்தில் அதனை இடுப்பில் கெட்டியாக சுமக்கிறாள்.

தந்தையோ தன் குழந்தை தன்னைவிட உயர்ந்த நிலைக்கு சென்றுவிட வேண்டுமென்ற துடிப்போடு தன் தோள்களில் தூக்கி சுமக்கிறார்.

ஒவ்வொரு அப்பாக்களும் பிள்ளைகளுக்காக, அவர்களுக்கு கடைசிவரை தெரியாமலேயே இருந்துவிடுகிற எத்தனை துயரங்களை , அவமானங்களைச் சந்தித்திருப்பார்கள்?

பிள்ளைகளின் நல்வாழ்வுக்காக எத்தனை பேரிடம் உதவி கேட்டு நடந்திருப்பார்கள்?

எத்தனை பேரிடம் கடன் வாங்கியிருப்பார்கள்?

அதை கட்டிமுடிக்க எவ்வளவு போராடியிருப்பார்கள்?

எத்தனை இரவுகள் தூங்காது இருந்திருப்பார்கள்?

எத்தனை பாரங்களை மனசில் சுமந்திருப்பார்கள்?

முடியுதிர்ந்த மண்டையின் வெளிகளில்..

வெடிப்பு விழுந்திருக்கும் பாதங்களில்...

நரம்பு தெரியும் கைகளில் ...

நரை விழுந்த மீசைகளில் ...

அப்பாக்களின் உழைப்பின் வரலாறு அமைதியாய் குடிகொண்டிருக்கிறது.

தன் பிள்ளைகள் தான் படும் துயரம் கண்டு வருந்திவிடக் கூடாதென்று அவர்களுக்கு முன்னால் தம் வலிகளை எப்படி மறைத்திருப்பார்கள்?

ஆசைப்பட்டு பிள்ளைகள் கேட்கிற பொருட்களுக்காக எத்தனை மணி நேரங்கள் கூடுதலாக தம் வியர்வை சிந்தியிருப்பார்கள்?

மனைவி, பிள்ளைகளை ஏற்றிய குடும்ப வண்டியை இழுத்துச் செல்வதற்காக அப்பா என்கிற தியாகப் படைப்பு தன்னுடலை எவ்வளவு தூரம் வருத்தியிருக்கக் கூடும்?

பிள்ளைகள் தூக்கத்திலிருக்கும் போது அவர்களின் தூக்கம் கலையாமல் முத்தமிட்டுக்கொண்டு போர்த்தி விட்டு வேலைக்குப் போகிற அப்பாக்கள் பின்னர், பிள்ளைகள் தூங்கிவிட்ட பிறகு வீடு வந்து சேருகிற போது எப்படி தாங்கிக் கொள்கிறார்கள்? எத்தனை முறை மௌனமாக அழுதிருக்கும் அவர்கள் இதயங்கள்?

இதற்கும் மேலாய் உழைப்புக்காகவே கடல் கடந்து சென்று கரைந்து போகும் அப்பாக்களின் அவல வாழ்க்கையை அவர்களால் எப்படி ஏற்றுக் கொள்ள முடிகிறது? வேலை இடைவெளிகளில் பிள்ளைகளின் குரல் கேட்டு உற்சாகம் ஏற்றிக் கொள்கிற அவர்களின் உழைப்பின் பின்னாலிருக்கிற உழைச்சலை எப்படி புரியவைப்பது?

படுக்கையறை கட்டிலின் தலைப்பகுதியில் தன் மனைவி பிள்ளைகளின் புகைப்படத்தை ஒட்டி வைத்துக் கொண்டு சதா வலி சுமந்து வலி சுமந்து வாழ்க்கையை சுமந்து செல்கிற இந்த அப்பாமாரின் வாழ்க்கை எத்தனை கொடுமையானது?

வீரம், துணிச்சல்,
விடாமுயற்சி,
நம்பிக்கை, உழைப்பு..
இவைகள் ஒரு நல்ல அப்பாவிடமிருந்து இளைஞன் , யுவதிகளுக்கு இயல்பாகவே கிடைத்து விடுகிற பெரிய வெகுமதிகள்.

ஒரு இளைஞனோ ,  யுவதியோ வளர்ந்து பெரியவனான பிறகும்,
குழந்தைகளுக்கு பெற்றோரான பிறகும் அவர்களின் தந்தை தன் பிள்ளைகளை சிறு பிள்ளைகளாகவே பார்க்கிறார். பிள்ளைகளுக்கும் அப்பாவின் ஆலோசனைகள், வழிகாட்டல்கள், அனுபவப்பாடங்கள் என எல்லாம் எப்போதும் தேவைப்படுகின்றன.

“எதுக்கும் பயப்படாதே”

“ஒன்றுக்கும் யோசிக்காதே”

“எல்லாம் வெல்லலாம்”

“மனசை தளரவிடாதே”

“நான் இருக்கிறேன்”

இவையெல்லாம் அப்பாக்கள் தம் பிள்ளைகளின் செவிகளுக்குள் கடைசிவரைக்கும் திரும்பதிரும்ப சொல்லிக் கொள்கிற நம்பிக்கை தரும் ஒற்றைக் கட்டளைகள்.

அவர்கள் வாய்களிலிருந்து பிள்ளைகளின் மனங்களுக்கு கடத்தப்படுகிற இந்த வார்த்தைகளின் வீரியம் வலிமையானது.

தன் இயலாமையை தான் உணர்கிற ஒரு காலத்திலும் தந்தைமார் இந்த உற்சாகம் நிறைக்கிற வார்த்தைகளை சொல்ல மறப்பதேயில்லை. அவர்களுக்கு நன்றாகவே தெரியும் தம் பிள்ளைக்கு தமது குரலொன்றே போதுமென்பது.

அப்பாக்கள் :

➡பிள்ளைகளின் சுமைதாங்கிகள்

➡பிள்ளைகளின் நெம்புகோல்கள்

➡பிள்ளைகளின் அச்சாணிகள்

➡பிள்ளைகளின் சூரியன்கள்

➡பிள்ளைகளின் திசைகாட்டிகள்

➡பிள்ளைகளின் ஆசிரியர்கள்

➡பிள்ளைகளின்
நம்பிக்கைகள்

அப்பா:
தூய்மையான
அன்பு,

போலியற்ற
அக்கறை,

நேர்மையான வழிகாட்டல்,

நியாயமான
சிந்தனை,

நேசிக்கத்தக்க உபசரிப்பு,

மாறுதலில்லா நம்பிக்கை,

காயங்களற்ற
வார்த்தை, 

கம்பீரமான
அறிவுரை,

கலங்கமில்லா
சிரிப்பு,

உண்மையான
அழுகை,

என அத்தனையும் உளமகிழ்ந்து

செய்து வளர்த்தவர்.

தோழனுக்கு தோழனாய் 
தோள் கொடுப்பவர் அப்பா.

அப்படியொரு அப்பாவாக இருப்பதில் ஒவ்வொரு தகுதியுள்ள  அப்பாக்களும் மகிழ்ச்சியுருவர். 
இதுவரை இல்லாவிடிலும் இனியாவது இப்படிப்பட்ட அப்பாவாக இருக்க இப்போதிருந்தே  தன்னை மாற்றிக்கொள்ள ஆரம்பிப்பர், 
தந்தையை போற்றுவோம்   
படித்ததில் பிடித்தது_____