Wednesday 20 December 2017

சனிப்பெயர்ச்சி விழா 19/12/2017 திருவொற்றியூர் பிரசித்தி பெற்ற அருள்மிகு  அகிலாண்டேஸ்வரி உடனுறை அகத்தீஸ்வரர் திருக்கோவில்  

19/12/2017
திருவொற்றியர்  அகத்தீஸ்வரர் கோவிலில்.சனிபகவான் விருச்சக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு இடம் பெயர்ந்ததை முன்னிட்டு சிறப்பு அபிசேகம் பூஜைகள் யாகம்  நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூரில் அமைந்துள்ள  பிரசித்தி பெற்ற அருள்மிகு  அகிலாண்டேஸவரி உடனுறை அகத்தீஸ்வரர் திருக்கோவிலில்  சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம் கணபதி பூஜை பரிகார பூஜை  லட்சார்ச்சனை  நடைபெற்றது இவ்விழாவில் எராளமான பக்தர்கள் கலந்துகொன்டு பக்தியுடன் சுவாமியை வழிபட்டனர் மலையில் 
சனிஸ்வர பகவான் காக வாகனத்தில் திருவீதி உலா வந்தார் இவ்விழா வெகுவிமரிசையாக  நடைபெற்றது.

#thiruvotriyur temples

# Chennai Tamizhnadu india Ancient temples

Sunday 17 December 2017

*கோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்..இறை என்று சொன்னால் கேட்கவில்லை என்றால் அறிவியலை கூறுங்கள் :*

*கோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்..இறை என்று சொன்னால் கேட்கவில்லை என்றால் அறிவியலை கூறுங்கள் :*

1. பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்களில்தான் கோயில்கள் இருக்கும்.

2. சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும், இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும்.

3. கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என்று அழைக்கப்படும் மூலவர் சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும்.

4. இந்த இடம்தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி அதிகம் காணப்படும் இடம் ஆகும்.

5. இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.

6. அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று சைடு மூடி வாசல் மட்டும் தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். இது அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் ஆட்களுக்கு இந்த எனர்ஜி கிடைக்க செய்யப்பட்டது ஆகும் ..

7. கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் சுற்றி வர காரணம் எனர்ஜியின் சுற்று பாதை இது தான் அதனால் தான் மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே எனர்ஜி சுற்றுபாதை கூட நாமும் சேர்ந்து சுற்ற அந்த எனர்ஜி அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும்.

8. இந்த எனர்ஜி நமது உடம்புக்கும், மனதிற்கும், மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி.

9. மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு இருக்கும்.அதை சுற்றி கண்ணாடி ஒன்று இருக்கும்.

10. அது அந்த எனர்ஜியை அப்படி பவுன்ஸ் செய்யும் ஒரு டெக்னிக்கல் செயல்தான்.

11. அது போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும் அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த எனர்ஜியை மென்மேலும் கூட்டி ஒரு கலவையாய் கொண்டு வரும் ஒரு அபரிதமான எனர்ஜி ஃபேக்டரிதான் மூலஸ்தானம் என்பது..

12. பூக்கள், கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்), குங்குமப்பூ (சேஃப்ரான்),கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம் ஒரு ஆன்டிபயாட்டிக்.

13. இதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த உடம்பை புண்ணியமாக்க, மீதி இரண்டு சொட்டு உங்கள் உடம்பை பரிசுத்தமாக்க.

14. இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும் இரத்ததை சுத்த படுத்தும் ஒரு அபரிதமான கலவை. கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம்.

15. கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என சில கோயில்களில் கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம் அந்த எனர்ஜி, அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில் சேரும் என்பது ஐதீகம்.

16. பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான்.

நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை வாங்கி உள்ளே உள்ள கொழுப்பை கூட கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல்.

17. பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும், மூலவரின் தரிசனம் கிட்டும்போது, அந்த சில நொடிகளில் அந்த உடம்பில் ஏற்படும் ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும் ஏற்படுகிறது என்றால் அதற்க்கு காரணம், கோயிலின் மூலஸ்தானம் மற்றும் அதில் உள்ள எனர்ஜி.

18. கோயிலின் கொடி மரத்திற்க்கும் மூலஸ்தானதிர்க்கும் ஒரு நேரடி வயர்லெஸ் தொடர்பு உண்டு. கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம். கீழ் இருந்து கிளம்பும் மேக்னெட்டிக் வேவ்ஸ் மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது.

19. அது போக பெரும்பாலும் கோயில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம் கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி ஆகும் ..

20. நல்ல மானிடர் இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும் சுத்தமாகும்.

இவ்வளவு புனிதத்துவம் வாய்ந்த கோயில்களுக்கு குடும்பத்துடன் சென்று வர பழகுவோம் ..குழந்தைகளையும் பழக்குவோம் ...அது அறிவியல் ஆகட்டும் ..எதுவாகட்டும்
படித்ததில் பகிர்ந்தது

Tuesday 12 December 2017

கோவிலில் செய்ய கூடாதவைகள்

கோவிலில் செய்ய கூடாதவை

1.கோவிலில் தூங்க கூடாது ..

2.தலையில் துணி ,தொப்பி அணியகூடாது ...

3.கொடிமரம் ,நந்தி,பலிபீடம் ,இவைகளின் நிழல்களை மிதிக்க கூடாது ..

4.விளக்கு இல்லாமல் (எரியாத பொழுது )வணங்க கூடாது ..

5.அபிஷேகம் நடக்கும் பொழுது சுற்றி வரகூடாது ..

6.குளிக்காமல் கோவில் போககூடாது ...

7.கோவிலில் நந்தி மற்றும் எந்த முர்த்திகளையும் தொடகூடாது ..

8.கையில் விளக்கு ஏந்தி ஆராதனை காட்டகூடாது..

9.மனிதர்கள் காலில் விழுந்து வணங்க கூடாது ...

10.கோவிலுக்கு சென்று திரும்பிய உடன் கால்களை கழுவ கூடாது..

11.படிகளில் உட்கார கூடாது .

12.சிவபெருமான் கோவில்களில் அமர்ந்து வரவேண்டும் ,
பெருமாள் கோவில்களில் அமர கூடாது .

13.வாசனை இல்லாத மலர்களை பூஜைக்கு அல்லது தெய்வம்களுக்கு 
தர கூடாது .

14.மண் விளக்கு ஏற்றும் முன் அவைகளை கழுவி சுத்தம் செய்யாமல் ஏற்ற கூடாது .

15.கிரணம் இருக்கும் பொழுது கோவிலை வணங்க கூடாது .

16.கோவிலுக்கு சென்று விட்டு வெளியே வந்து தர்மம் செய்ய கூடாது .

17.புண்ணிய தீர்த்தங்களில் வந்தவுடன் காலை வைக்கக்கூடாது. முதலில் நீரை தலையில் தெளித்துக் கொண்டு கால் அலம்ப வேண்டும். குளத்தில் கல்லைப் போடக்கூடாது.

18.கோயிலை வேகமாக வலம் வருதல் கூடாது.

19.தாம்பூலம் தரித்துக் கொண்டு கோயிலுக்குள் செல்லக்கூடாது.

20. சுவாமிக்கு நிவேதனம் ஆகும் போது பார்த்தல் கூடாது.

21.தேவதைகள் பலிபீடத்திற்கு நடுவிலும், லிங்கத்திற்கும் நந்திக்கும் நடுவிலும் செல்லக்கூடாது

22.எவருடனும் வீண் வார்த்தைகள் கோயிலில் வைத்து பேசக்கூடாது.

23 : கோயிலுக்கு செல்லும் பொழுது 
பக்தியுடன் மனதார இறை சிந்தனையொடு வழிபடவேண்டும்

படித்ததில் பாகிர்ந்தது

Tuesday 5 December 2017

இறைவனுக்கு பூஜைகள் செய்து இறைவனை ஏன் அலங்கரிக்கிறோம்?

இறைவனுக்கு பூஜைகள் செய்து
இறைவனை ஏன் அலங்கரிக்கிறோம்?

கோவிலிலும் சரி, வீட்டிலும் சரி 
இறைவனின் சிலையை, படத்தை  
துடைத்து, அபிஷேகம்  பண்ணி, பூவாலும், சந்தனத்தாலும், தங்க நகைகளாலும்  அலங்காரம் செய்து.. இறைவன்  பவனி வரும் பல்லக்கு தேர் போன்றவற்றையும் நாம் ஏன் அலங்காரம் செய்கிறோம்?

இறைவன் நம்மை கேட்டானா? 
என்னை அலங்காரம் செய் என்று... இறைவன் நம்மிடம் கோரிக்கை வைத்தானா இல்லையே...! பின் எதற்கு இந்த அலங்காரம்?

மனித மனம் அலைபாயக்  கூடியது.
ஒரு  இடத்தில் நிலைத்து நில்லாதது. 
அதை ஒரு இடத்தில் நிலைக்க வைக்க வேண்டும் என்றால் மனக் கட்டுப்பாடு என்பது அவ்வளவு எளிதில் வருவது  இல்லை. முதலில் மனது  ஒன்றின் மேல் படிய பதிய வைக்க வேண்டும். மனம் அதில் லயிக்க வேண்டும். அதிலேயே மனம் கலக்க வேண்டும். அதற்கு நம் முன்னவர்கள் கண்ட வழி அலங்காரம். அதனால் தான் கோவிலை நமது அனைத்து புலன்களுக்கும் இன்பம் தரும்படி  அமைத்தார்கள்.

காதுக்கு இனிமையாக  பாடல்கள், நாதஸ்வரம், சொற்பொழிவுகள் என்றும், மூக்குக்கு இனிமையாக  கற்பூரம், ஊதுபத்தி, மலர்கள் என்றும், நாவுக்கு இனிமையாக பிரசாதம் என்றும், உடலுக்கு இனிமையாக நந்தவனக் காற்றும், கண்ணுக்கு இனிமை தர கோவில்  சிற்பங்கள், பெரிய  கோபுரங்கள், அழாகன மூர்த்தி  வடிவங்கள் என்று அந்த சிலைகளுக்கு அலங்காரம் என்று  வைத்தார்கள்.

இறைவனை எவ்வளவுக்கெவ்வளவு அலங்காரம் பண்ணுகிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு நம் கண்ணுக்கு  இனிமை. உதாரணமாக நம் குழந்தைகளுக்கு நாம் புதிது புதியதாய் ஆடை அணிகலன்கள் அணிவித்து  பார்த்து மகிழ்கிறோம் அல்லவா.? அது போல... அலங்காரம் பண்ணுவது நாம் கண்டு மகிழ. மனைவிக்கு பட்டுச் சேலை வாங்கித் தந்து அழகு  பார்ப்பது போல அவளுக்கு நகை அணிவித்து அழகு பார்க்கிறோம்.

இப்படி அழகை இரசிக்கும் போது 
மனம் லயிக்கிறது. மனம் ஒன்று  படுகிறது. மனதில் ஆவல்  எழுகிறது. ஒன்றை ரசிக்கும் போது ரசிப்பின் உச்சத்தில் கண்ணை மூடி அமர்ந்து கொள்கிறோம். கண்ணை மூடி ரசிக்கிறோம்... அது சிறந்த உணவாக  இருக்கட்டும், சிறந்த இசையாக இருக்கட்டும், நல்ல நறுமணமாக இருக்கட்டும், ரசனையின் உச்சம் கண் மூடி உள்ளுக்குள் அதை அனுபவிக்கிறோம்..

அதைப்போல இறைவனை, அவன் உருவத்தை சிங்காரம் பண்ணி பார்க்கும் போது  அதில் லயித்து அதை அப்படியே மனதில்  காண்போம். அது தான் தியானம். உருவத்தில் இருந்து உருவம் இல்லா அந்த சக்தியை அறிவதுதான் தியானம்.

இதை தான் தாயுமானவர்

உன்னைச் சிங்காரித்து 
உன்னழகைப் பாராமல்....
என்னைச் சிங்காரித்து 
இருந்தேன் பராபரமே.....! என்கிறார்.

தாயுமானவர் மிக  பெரியவர். 
உண்மை உணர்ந்த  ஞானி. அவர் மேற்கண்ட பாடலில் இறைவா உன்னை சிங்காரித்து அழகு பார்க்காமல் என்னை சிங்காரித்து கொண்டு இருந்து விட்டேனே என வருந்தி வேண்டுகிறார். நாமும் வேண்டுவோம்,
அன்பே சிவம்
ஓம் நமசிவாய.
ஓம் தாயுமான சுவாமிகள் திருவடிகள் போற்றி

ஓம் எண்ணிலா கோடி சித்தரிஷி கணங்கள் திருவடிகள் போற்றி போற்றி 


( படித்ததில் பகிர்ந்தது )

Saturday 2 December 2017

மாவளி .... கார்த்திகை திருநாள் அன்று சொக்கப்பனை கொளுத்துவது போல் கிராமங்களில் எல்லா வீட்டிலும் செய்வார்கள் Maavali

மாவளி ....
கார்த்திகை திருநாள் அன்று சொக்கப்பனை கொளுத்துவது போல் கிராமங்களில் எல்லா வீட்டிலும் செய்வார்கள். இது பெரிய கம்பி மத்தாப்பூவுக்கு சமம்.
பனை மரத்தின் பூக்களை இதற்க்கு பயன்படுத்துவர்.பொதுகவாக கார்த்திகை மாதம் மழை அதிகமா பெய்யும் ,அதனால ஒரு வாரத்துக்கு முன்னாடியே இத சேகரிச்சு வச்சிக்குவாங்க .
ஒரு ஒன்பது பத்து மணியளவில் அரையடி விட்டம் ,ஒன்னரையடி ஆழத்திற்கு ஒரு குழி தோண்டி அதில் இந்த பனம்பூக்களை செங்குத்தாக நிறுத்தி தீயை வைக்கணும் ...அதை எரியவிடாமல் ..பூபோல பொசுங்கனும் அந்த மாதிரி பதம் வேணும் ...கொஞ்ச நேரம் முறத்தால் வீசி அதை புகைய விட்டு ,பூசணி இலைகளை மேல போட்டு மண்ணை அள்ளி மூடிடனும் . மாலை நாலைந்து மணிக்கு மண்ணை தோண்டி குழியில் உள்ள கரியை பக்குவமா எடுத்து (இல்லனா அது அங்கேயே தூளாகிடும்) ,அம்மியில் வைத்து அரைச்சி மாவாக்கிக்கனும் (கொரகொரனு இல்லாம ,நல்லா தூளாகவும் இல்லாம பதமா அரைச்சதான் பூ நல்லா கொட்டும்)
அரசே தூளை ஒரு நூல் துணியில் வச்சி உருளை வடிவுல உருட்டி கட்டி வச்சிடனும் .
பனை மரத்தோட மட்டையை வெட்டி (காம்பு நீளமா உள்ள விளைந்த ஓலை மட்டையை வெட்டணும் ) ஓலை மற்றும் காம்பின் மறுபகுதி இரண்டையும் வெட்டி எடுத்துவிட்டு நடுப்பகுதியை மட்டும் எடுத்து இருபுறமும் உள்ள முள்ளை சீவி ,மட்டையை மூன்றாக முக்கால் அளவு பிளந்து ,துணி உருளைய மட்டையின் பிளந்த பாகத்தில் வச்சி மட்டையை கட்டிடனும் , மறுமுனையில் கயிறு கட்ட ஏதுவாக மட்டையை சீவி ,தேவையான நீளமுள்ள கயிறை கட்டினால் மாவளி தயார் . மேல்புறம் நெருப்பு வைத்து உருளையை நெருப்பூட்டி கயிறை எடுத்து சுத்த வேண்டும் .பூ கொட்டும் போது நமது செய்திறன் அதில் வெளிப்படும்.
உருளையின் அளவை அரைக்கும் மாவு நிர்ணயிக்கும் ,மட்டையின் அளவை உருளையின் அளவு நிர்ணயிக்கும் , கயிறின் அளவு சுத்துகிற ஆளை பொறுத்து அமையும் .
மாவட்டத்திற்கு மாவட்டம் செய்யும் முறையிலும் ,உபயோகிக்கும் பொருளிலும் சிறிய மாற்றம் உண்டு
படித்ததில் பகிர்ந்தது.