Saturday, 9 September 2017

108 அனுமன் போற்றி சிரஞ்சீவி அனுமன் வழிபாடு

ஓம் அனுமன் திருவடிகள் போற்றி

108 அனுமன் போற்றி 
சனிகிழமை உங்கள் அருகாமையில் உள்ள கோயிலுக்குச் சென்று கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் சந்நிதிக்கு முண்பு விளக்கு எற்றி 108 ( ஆஞ்சநேயர் ) அனுமன் 
போற்றியை  கூறி 
வழிபட  கிரகங்களினால் எற்படும் தீயபலன்கள் குறையும் 
கண்திருஷ்டி  எதிரிகள் பகைவர் அண்டாதிருப்பர் தொடர்நது சனிக்கிழமைதோறும் கோயிலுக்கு சென்று ஆஞ்சநேயர் சந்நிதிக்கு முண்பு விளக்கு எற்றி 108 ( ஆஞ்சநேயர் ) அனுமன் போற்றியை கூறி 
வழிபட்டும் வரலாம் 

108அநுமன் போற்றியை  படித்து பாராயணம் செய்து போற்றி பூஜை செய்பவர்களுக்கு உடல் ஆரோக்கியம் பெரும் நல்வினைகள் பெருகும் தீவினைகள் நீங்கிவிடும் மேலும் மாதம் ஒருவருக்கோ அல்லது இவருக்கோ பசித்த ஏழைகளுக்கு பசியாற்றியும் வந்தால் நலமோடு வாழலாம் அனுமன் போற்றியை  நித்திய பாராயணம் செய்தும் அன்னதானமும் செய்துவந்தால் தீராத நோய்களெல்லாம் தீர்ந்து 

நீண்ட ஆயுளும் பெறுவார்கள்,

படித்ததில் பகிர்ந்தது 

அனைவரும் பயன்பெற 

படித்துவிட்டு ஷேர் செய்யுங்கள் 

நன்றி வாழ்க வளமுடன்

1. ஓம் அனுமனே போற்றி
2. ஓம் அஞ்சனை மைந்தனே போற்றி 
3. ஓம் அறக்காவலனே போற்றி
4. ஓம் அவதார புருஷனே போற்றி
5. ஓம் அறிஞனே போற்றி
6. ஓம் அடக்கவடிவே போற்றி
7. ஓம் அதிகாலை பிறந்தவனே போற்றி
8. ஓம் அசோகவனம் எரித்தவனே போற்றி
9. ஓம் அர்ஜுனக்கொடியில் நின்றவனே போற்றி
10. ஓம் அமாவாசையில் பிறந்தாய் போற்றி
11. ஓம் ஆனந்த வடிவே போற்றி
12. ஓம் ஆரோக்கியம் தருபவனே போற்றி
13. ஓம் இன்னல் பொடிப்பவனே போற்றி
14. ஓம் இகபர சுகமளிப்பவனே போற்றி
15. ஓம் இசை ஞானியே போற்றி
16. ஓம் இறை வடிவே போற்றி
17. ஓம் ஒப்பிலானே போற்றி
18. ஓம் ஓங்கி வளர்ந்தோனே போற்றி
19. ஓம் கதாயுதனே போற்றி
20. ஓம் கலக்கம் தீர்ப்பவனே போற்றி
21. ஓம் களங்கமிலாதவனே போற்றி 
22. ஓம் கர்மயோகியே போற்றி
23. ஓம் கட்டறுப்பவனே போற்றி
24. ஓம் கம்பத்தருள்பவனே போற்றி
25. ஓம் கடல் தாவியவனே போற்றி
26. ஓம் கரை சேர்ப்பவனே போற்றி
27. ஓம் கீதாபாஷ்யனே போற்றி
28. ஓம் கீர்த்தியளிப்பவனே போற்றி
29. ஓம் கூப்பிய கரனே போற்றி
30. ஓம் குறுகி நீண்டவனே போற்றி
31. ஓம் குழப்பம் தீர்ப்பாய் போற்றி
32. ஓம் கவுண்டின்ய கோத்திரனே போற்றி
33. ஓம் சிரஞ்சீவி ஆனவனே போற்றி
34. ஓம் சலியாத மனம் படைத்தாய் போற்றி
35. ஓம் சஞ்சலம் தீர்ப்பாய் போற்றி
36. ஓம் சிரஞ்சீவி கொணர்ந்தவனே போற்றி
37. ஓம் சிந்தூரம் ஏற்பவனே போற்றி
38. ஓம் சீதாராம சேவகனே போற்றி
39. ஓம் சூராதி சூரனே போற்றி
40. ஓம் சுக்ரீவக் காவலனே போற்றி
41. ஓம் சொல்லின் செல்வனே போற்றி
42. ஓம் சூரியனின் சீடனே போற்றி
43. ஓம் சோர்வில்லாதவனே போற்றி
44. ஓம் சோக நாசகனே போற்றி
45. ஓம் தவயோகியே போற்றி 
46. ஓம் தத்துவஞானியே போற்றி 
47. ஓம் தயிரன்னப் பிரியனே போற்றி
48. ஓம் துளசியில் மகிழ்வோனே போற்றி
49. ஓம் தீதழிப்பவனே போற்றி
50. ஓம் தீயும் சுடானே போற்றி
51. ஓம் நரஹரியானவனே போற்றி
52. ஓம் நாரத கர்வ பங்கனே போற்றி
53. ஓம் நொடியில் அருள்பவனே போற்றி
54. ஓம் நொடித்தோர் வாழ்வே போற்றி
55. ஓம் பண்டிதனே போற்றி
56. ஓம் பஞ்சமுகனே போற்றி
57. ஓம் பக்தி வடிவனே போற்றி
58. ஓம் பக்த ரட்சகனே போற்றி
59. ஓம் பரதனைக் காத்தவனே போற்றி
60. ஓம் பக்த ராமதாசரானவனே போற்றி
61. ஓம் பருதியைப் பிடித்தவனே போற்றி
62. ஓம் பயம் அறியாதவனே போற்றி
63. ஓம் பகையை அழிப்பவனே போற்றி 
64. ஓம் பவழமல்லிப் பிரியனே போற்றி
65. ஓம் பிரம்மச்சாரியே போற்றி 
66. ஓம் பீம சோதரனே போற்றி
67. ஓம் புலனை வென்றவனே போற்றி
68. ஓம் புகழ் சேர்ப்பவனே போற்றி
69. ஓம் புண்ணியனே போற்றி
70. ஓம் பொட்டிட மகிழ்பவனே போற்றி
71. ஓம் மதி மந்திரியே போற்றி 
72. ஓம் மனோவேகனே போற்றி
73. ஓம் மாவீரனே போற்றி
74. ஓம் மாருதியே போற்றி 
75. ஓம் மார்கழியில் பிறந்தவனே போற்றி
76. ஓம் மணம் கூட்டுவிப்பவனே போற்றி
77. ஓம் மூலநட்சத்திரனே போற்றி
78. ஓம் மூப்பில்லாதவனே போற்றி
79. ஓம் ராமதாசனே போற்றி
80. ஓம் ராமநாமப் பிரியனே போற்றி
81. ஓம் ராமதூதனே போற்றி
82. ஓம் ராம சோதரனே போற்றி
83. ஓம் ராமபக்தரைக் காப்பவனே போற்றி
84. ஓம் ராமனுயிர் காத்தவனே போற்றி
85. ஓம் ராமனை அணைந்தவனே போற்றி
86. ஓம் ராமஜெயம் அறிவித்தவனே போற்றி
87. ஓம் ராமாயண நாயகனே போற்றி
88. ஓம் ராமாயணப் பிரியனே போற்றி
89. ஓம் ராகவன் கண்மணியே போற்றி 
90. ஓம் ருத்ர வடிவனே போற்றி
91. ஓம் லட்சியப் புருஷனே போற்றி
92. ஓம் லட்சுமணனைக் காத்தவனே போற்றி
93. ஓம் லங்கா தகனனே போற்றி
94. ஓம் லங்காவை வென்றவனே போற்றி
95. ஓம் வஜ்ர தேகனே போற்றி
96. ஓம் வாயுகுமாரனே போற்றி
97. ஓம் வடைமாலைப் பிரியனே போற்றி
98. ஓம் வணங்குவோரின் வாழ்வே போற்றி
99. ஓம் விஷ்ணுஸ்வரூபனே போற்றி
100. ஓம் விளையாடும் வானரனே போற்றி
101. ஓம் விஸ்வரூபனே போற்றி
102. ஓம் வியாசராஜருக்கு அருளியவனே போற்றி
103. ஓம் வித்தையருள்பவனே போற்றி
104. ஓம் வைராக்கிய மூர்த்தியே போற்றி 
105. ஓம் வைகுண்டம் விரும்பாதவனே போற்றி
106. ஓம் வெண்ணெய் உகந்தவனே போற்றி
107. ஓம் வெற்றிலைமாலை ஏற்பவனே போற்றி
108. ஓம் வெற்றியளிப்பவனே போற்றி