Tuesday, 29 August 2017

திருவொற்றியூர் சென்னை கடற்கரையில் கரைக்கப்பட்ட அருள்மிகு சங்கடஹற சங்கு வினாயகர் 25/8/2017___ 27/8/2017

திருவொற்றியூர் சென்னை  சன்னதிதெரு சந்திப்பில் 
சங்கில் அமர்ந்தநிலையில் 
சங்கடங்கள் தீர்க்கும் அருள்மிகு சங்கடஹற சங்கு வினாயகர் 25/8/2017 விநாயகர் சதுர்த்தியன்று வடிவுடைமாணிக்கம் சங்கநாத அறக்கட்டளை சார்பாக வைக்கப்பட்டு வினாயகரை சுற்றிலும் 108 சங்குகள்  வைத்து சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெற்றது 
ஞாயிறு மாலை 27/8/2017 ஆம் தேதி அன்று அருள்மிகு சங்கடஹற சங்கு  வினாயகருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடு நடைப்பெற்று சங்கநாதம் கைலாயவாத்தியங்கள்முழங்க மாடவீதிகளில் திருவீதி வளமாக எடுத்துச்செல்லப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடு செய்யபட்டு  சென்னை திருவொற்றியூர் 

கடற்கரையில் கரைக்கப்பட்டது

Thursday, 24 August 2017

நந்தியை பற்றிய 50 தகவல்கள் , ஓம் நந்தீஸ்வரர் திருவடிகள்போற்றி  Nandhi

ஓம் நந்தீஸ்வரர் திருவடிகள்போற்றி 

நந்தியை பற்றிய 50 தகவல்கள்

1. நந்தி என்றால் ஆனந்தம், மகிழ்ச்சி தருபவர் என்று பொருள்.

2. நந்தியின் வேலை தடுப்பது ஆகும். அதாவது இவர் அனுமதி பெறாமல் ஈசன் உறையும் இடங்களுக்குள் யாராலும் செல்ல இயலாது. நந்தி அனமதி கிடைத்தால்தான் ஈசன் அருளைப்பெற முடியும். எனவேதான் முக்கிய சம்பவங்களின் போது யாராவது தடுத்தால், "என்ன இவன் நந்தி மாதிரி தடுக்கிறான்'' என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டது.

3. பிரதோஷ காலங்களில் நந்தியை தவறாமல் வழிபடுபவர்களுக்கு அருள் வரம் தரும் பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.

4. நந்தி தேவர் சிவபெருமானுக்கு பூஜை செய்யும் அற்புத காட்சி ஒன்று, நாகை மாவட்டம் ஆத்தூர் மந்தாரவனேசுவரர் கோவிலில் உள்ளது.

5. சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் உள்ள ஆதிபுரீஸ்வரர் கோவிலில் பிரமாண்ட அதிகார நந்தி வாகனம் உள்ளது. இந்த அதிகார நந்தியை தமிழ்ப் பேரறிஞர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனாரின் தந்தை பொன்னுசாமி கிராமணி என்பவர் செய்து கொடுத்தார்.

6. ஆந்திர மாநிலம் லேபாட்சியில் உள்ள கருங்கல்லில் வடிக்கப்பட்ட நந்தியே இந்தியாவில் உள்ள கல் நந்திகளில் பெரிய நந்தியாம்.

7 தமிழ்நாடு மக்களுக்கு நந்நி என்றதும் தஞ்சை பெரிய கோவில் நந்திதான் நினைவுக்கு வரும். இந்த நந்தி ஒரே கல்லால் ஆனது.

8. மதுரை ஆவணி மூல வீதியில் "மாக்காளை'' எனப்படும் சுதையால் அமைக்கப்பட்ட பிரமாண்ட நந்தி உள்ளது. இத்தகைய மாக்காளை நந்திகளை நெல்லை, சுசீந்திரம், ராமேஸ்வரம், திருவிடை மருதூர் ஆலயங்களிலும் காணலாம்.

9. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஜோதி நந்தி உள்ளது. இந்த நந்தி முன் தீபம் ஏற்றி வலம் வந்து மலையை நோக்கி வழிபடுவதை பக்தர்கள் வழக்கத்தில் கொண்டுள்ளனர்.

10. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் இருந்து பார்த்தால், மலையானது, நந்தி ஒன்று படுத்து இருப்பது போன்ற தோற்றத்தில் காட்சித்தரும். அந்த இடத்தை "நந்திமுக தரிசனம்'' என்கிறார்கள்.

11. மைசூர் சாமுண்டி மலை மீதுள்ள நந்தி கண்கவர் அழகான நந்தியாகும். இது சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

12. கேரள மாநிலம் வைக்கத்தில் மகாதேவ ஆலயம் உள்ளது. அங்கு 4 மூலைகளிலும் நந்தி வைக்கப்பட்டுள்ளது.

13. மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள நந்திக்கு கருவறை நந்தி என்று பெயர்.

14. திருவாரூர் தியாகராஜர் கோவில் சன்னதியில் ஈசனை ஆச்சரியத்துடன் பார்த்தபடி எழுந்து நிற்கும் நிலையில் நந்தி உள்ளது. இந்த நந்தியை வழிபட்டால் செய்த பாவங்கள் எல்லாம் தொலைந்து போகும் என்பது நம்பிக்கை.

15. திருமந்திரம் எனும் நூலை எழுதிய திருமூலருக்கு குருவாக நந்தி திகழ்ந்தார். திருமூலருக்கு நந்தி பெருமான்தான் 9 வேத ஆகமங்களை விளக்கி அருளியதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

16. சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமார், பதஞ்சலி, சிவயோக மாமுனி, வியாக்கிரமர், திருமூலர் ஆகிய 8 பேரும் நந்தி பெருமானின் மாணவர்களாவர்.

17. கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் நந்தி துர்கா மலையே பரவலாக நந்தி மலை என்று அழைக்கப்படுகிறது. நந்தி மலையே பென்னாறு, பாலாறு பொன்னையாறு ஆகிய ஆறுகளில் பிறப்பிடமாக கருதப்படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து 1,500 அடி உயரத்தில் இருக்கின்றது. ஆயிரம் வருடத்து பழமை வாய்ந்த நந்தி கோவிலால் நந்தி மலை என்ற பெயர் ஏற்பட்டது.

18. நந்திகேசுரரின் வரலாற்றை லிங்க புராணம் கூறுகிறது. பிறப்பில் எம்பெருமானாகிய சிவபெருமானே நந்திகேசுவரராகப் பிறந்து கணங்களின் தலைவரானார் என்பது புராண மரபு.

19. இந்திய வரலாற்றை ஆராய்ந்தால் தத்துவம், யோகம், நாட்டியம், இசை, ஆயுர்வேதம், அஸ்வவேதம், காமவேதம் முதலிய பல்வேறு சாத்திரங்களைத் தோற்றிவைத்தவராக நந்திகேசுரர் என்ற முனிவர் வாழ்ந்திருக்கிறார் என அறியலாம்.

20. சிவபெருமான் நாட்டியக் கலையைப் பிரும்மாவுக்கு கற்றுக் கொடுக்க அம்முறையை அறிந்த நந்தி பரத முனிவருக்குப் போதித்தார் என்று அபிநய தர்ப்பணம் கூறுகிறது.

21. தமிழ்நாட்டில் ஆடவல்ல பெருமான் தண்டுவுக்கு நாட்டியம் கற்றுக்கொடுப்பதாக ஒரு சிற்பம் மாமல்லபுரத்தில் தர்மராஜ ரதத்தில் உள்ளது. இங்கு சிவன் நாட்டியாசாரியராகவும் தண்டு முனிவர் மனித உருவிலும் உள்ளனர்.

22. காஞ்சிபுரத்தில் இராஜ சிம்மன் கட்டிய கைலாய நாதராலயத்தில் பின்புறச் சுவரில் ஒரு சிற்பம் உள்ளது. அதில் சிவபிரான் ஊர்த்துவதாண்டவம் புரிகிறார். அவர் அருகில் நந்திகேசுவரர் ஆனந்தமாக நாட்டியம் கற்றுக் கொண்டு ஆடுகிறார்.

23. தமிழ்நாட்டில் நந்திகேசுவரரின் மதம் கி.பி. 700லேயே சிறப்பிடம் பெற்றிருந்தது.

24. தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் பிற இடங்களிலும் உள்ள சிற்பங்களில் சிவன் ஆடும்போது நந்திகேசுவரர் பஞ்சமுக வாத்யம் என்னும் குடமுழா வாத்தியத்தை வாசிப்பதாக உள்ளதைக் காணலாம். திருவாரூர், திருத்துறைபூண்டி ஆகிய தலங்களில் இன்றும் பஞ்சமுக வாத்தியம் வாசிக்கப்படுகிறது.

25. பஞ்சமுக வாத்தியலடீசணம் என்னும் சுவடியில் குடமுழா வாத்தியம் நந்திகேசுவரரால் இசைக்கப்பட்டது என்றும், ஆதலின் இதை இசைக்கும் முன்னர் நந்திகேசுவரருக்குச் சிறப்பு வழிபாடு செய்ய வேண்டும் என்றும் கூறுகிறது.

26. காமசாஸ்திரத்தை தோற்றுவித்தவரும் நந்திகேசுவரரே என்று பல நூல்கள் கூறுகின்றன. நந்தி இயற்றிய பல செய்யுட்களை ''ரதி ரகசியம்'' என்று தம் நூலில் கொக்கோகர் மேற்கோளாகக் காட்டுகிறார்.

27. ஆகம சாஸ்திரங்களையும், சைவசித்தாந்த தத்துவங்களையும் சிவபெருமானிடம் அறிந்து உலகுக்குப் போதித்தவர் நந்திகேசுவரரே. சைவமரபில் தலையாயது ''சிவஞான போதம்'' என்னும் நூல். இதை நந்திகேசுவரரே முதலில் போதித்தார்

28. சிவாலயங்களில் துவாரபாலர் இருவரில் தலையில் சூலம் தரித்து நிற்பவர் நந்திகேசுவரர் ஆவார்.

29. சிதம்பரம் நடராஜப் பெருமானின் கோயிலில் நான்கு கோபுரங்களிலும் அதிகார நந்தியின் உருவத்தைக் காணலாம்.

30. நந்திகேசுவரரின் மறு அவதாரமாக அனுமான் கருதப்படுகிறார்.

31. சில சிவாலயங்களில் நந்திக்குப் பதிலாகக் குரங்கு தூவாரபாலனாகத் திகழ்வதைக் காணலாம். எவ்வாறு சிவதத்துவத்தை நந்தி வாயிலாகப் பரமன் போதித்தாரோ அதே போல ராமதத்துவம் அனுமன் வாயிலாகப் போதிக்கப்பட்டது.

32. தானும் நந்தியும் வேறல்ல, ஒருவரே என்று சிவபெருமான் நந்தி புராணத்தில் கூறுகிறார். நந்தியைத் தொழுவது சிவபெருமானைத் தொழுவதே ஆகும்.

33. முனிவர்களுக்கும் சித்தர்களுக்கும் யோகிகளுக்கும் நந்திதேவரே ஆதி குரு.

34. `நந்தி' என்ற வார்த்தையுடன் `ஆ' சேரும்போது `ஆநந்தி' என்ற பொருள் தருகிறது. `நீயும் ஆனந்தமாக இரு, பிறரையும் ஆனந்தமாக வைத்திரு!' என்று சிவபெருமான் நந்திக்கு அளித்த வரம் அது.

35. நந்தியைத் தொழாமல் சிவபெருமானைத் தொழ முடியாது. ஆலயத்தில் நந்தியை மட்டுமே தொழுதுவிட்டு திரும்பிவிட்டால் கூட சிவபெருமானை வணங்கியதன் முழுபலனும் கிட்டும்.

36. ஆலயங்களைக் காவல் காக்கும் அதிகாரமும் நந்திக்கே உரியது என்பது தெளிவாகிறது. இதன் அடையாளமாகத் தான் திருக்கோவில்களின் மதில் சுவர்களில் நந்தியின் திருவுருவை அமைத்துள்ளனர்.

37. நந்தி தேவருக்கு சிவ பெருமானைப் போலவே நெற்றிக்கண்ணும் நான்கு புஜங்களும், கையில் பிரம்பும், உடைவாளும், இருபுஜங்களில் மான் மழுவும் உண்டு. மானும் மழுவும் வேதத்தைக் குறிக்கிறது. மழு வீரத்தை அல்லது ஆண்மையைக் குறிக்கிறது எனவும் கூறுவர்.

38. நந்திக்கு இவ்வுலகத்தின் எதையும் கண்டிக்கவும் தண்டிக்கவும் அதிகாரம் வழங்கியுள்ளான் பரமேஸ்வரன்.

39. நந்தியின் அருள் இருந்தால்தான் மனிதர்களுக்கு மட்டுமின்றி தேவர்களுக்கும் முக்தி கிடைக்கும். அதனாலேயே தேவர்களும் நந்திதேவரைப் போற்றித் துதிக்கின்றனர்.

40. எல்லா உயிர்களையும் ஒரு காலத்தில் ஓய்வு படுத்துதல் மகாசங்காரம் எனப்படும். இந்த அதிகாரத்தை சிவபெருமான் நந்தி தேவருக்கு வழங்கியிருக்கிறார்.

41. நந்திதேவருக்கு ருத்திரன் என்ற பெயரும் உண்டு. ருத் என்பது துக்கம். ரன் என்பது ஓட்டுகிறவன். துக்கத்தை ஓட்டுகிறவன் என்பதே ருத்திரன். தூயவன், சைலாதி எனவும் நந்தியை அழைப்பர்.

42. மாலாங்கன், இந்திரன், சோமன், பிரமன், ருத்திரன், கந்துரு, காலாங்கி, கஞ்சமாலையன் போன்ற தேவர்களெல்லாம் நந்தியைக் குருவாகக் கொண்டு வேதம் கற்றவர்கள் ஆவர்.

43. பிரவிர்த்தி என்ற சேர்க்கையை விட்டு நிவிருத்தி என்ற விலகலைத் தேர்ந்தெடுப்பது ஞானத்தின் மார்க்கம். இதைக் கற்றுக் கொடுத்தவர் நந்திதேவரே. இவர் வழி வந்தவர்களே மெய் கண்ட சந்தானத்தின் குருபரம்பரை என்றழைக்கப்படுகிறார்கள்.

44. சிவபெருமானின் முக்கண்ணின் பார்வைக்கு எதிரில் நிற்க நந்திதேவரைத் தவிர வேறுயாராலும் இயலாது. இது சிவபெருமானே நந்தி தேவருக்கு அளித்த வரமாகும்.

45. சிவ பெருமான் திருநடனம் புரிகையில் நந்திதேவரே மத்தளம் வாசித்ததாக சிவபுராணம் கூறுகிறது.

46. பிரதோஷ காலம் மட்டுமின்றி எக்காலத்தும் நாம் சிவபெருமானி டம் வைக்கும் வேண்டுதல் களை நந்திதேவரிடம் வைத்தால் போதும். அவர் அதைப் பரமேஸ்வரனிடம் கொண்டு சேர்த்துவிடுவார் என்பது ஐதீகம்.

47. நந்தியை வழிபடும்போது, `சிவனடியில் சரணம் புகுந்து சிவத்தியானத்தில் ஆழ்ந்திருக்கும் மகா புண்ணியம் பெற்ற நந்திகேசுவரரே! சன்னிதிக்குச் சென்று உமையோடு கூடிய ஈஸ்வரனைத் தரிசிக்க எனக்கு உத்தரவு தருக' என்று பிரார்த்திக்க வேண்டும்.

48. நந்திதேவருக்கு அருகம்புல் மாலையும், சிவப்பு அரிசி நிவேதனமும் நெய்விளக்கும் வைத்து வழிபட வேண்டும்.

49. பிரபஞ்சத்தில் உள்ள தீர்த்தங்கள் எல்லாம் பிரதோஷ காலத்தில் பீஜத்தை வந்தடைகின்றன. அதனால் நந்தியின் பீஜத்தைத் தொட்டு வணங்கிய பிறகே சிவதரிசனம் காணவேண்டும். பிறகு வாலைத் தொட்டு வணங்க வேண்டும்.

50. நாட்டியம் பயில்வோரும் இசை பயில்வோரும் நந்தியை வழிபட்டால் அவர்களின் கலைகள் தடையின்றி சிறந்து வளரும்,
ஓம் நமசிவாய 
படித்ததில் பகிர்ந்தது 

மலேசியாவில் நடைபெற்ற தனித் தமிழியக்க மாநாட்டில் வெளியிடப்பட்ட நுட்பவியல் கலைச் சொற்கள் :

மலேசியாவில் நடைபெற்ற தனித் தமிழியக்க மாநாட்டில் வெளியிடப்பட்ட நுட்பவியல் கலைச் சொற்கள் :

1. WhatsApp      -       புலனம் 
2. youtube          -       வலையொளி 
3. Instagram       -       படவரி 
4. WeChat          -        அளாவி 
5.Messanger     -        பற்றியம் 
6.Twtter              -         கீச்சகம் 
7.Telegram        -         தொலைவரி 
8. skype             -          காயலை 
9.Bluetooth       -          ஊடலை 
10.WiFi             -          அருகலை  
11.Hotspot        -          பகிரலை 
12.Broadband  -         ஆலலை 
13.Online           -         இயங்கலை 
14.Offline            -        முடக்கலை 
15.Thumbdrive   -        விரலி 
16.Hard disk       -        வன்தட்டு 
17.GPS                -        தடங்காட்டி 
18.cctv                 -        மறைகாணி 
19.OCR              -         எழுத்துணரி 
20 LED              -         ஒளிர்விமுனை  
21.3D                  -        முத்திரட்சி 
22.2D                 -         இருதிரட்சி 
23.Projector       -        ஒளிவீச்சி 
24.printer          -        அச்சுப்பொறி 
25.scanner         -        வருடி 
26.smart phone  -       திறன்பேசி 
27.Simcard          -       செறிவட்டை 
28.Charger          -        மின்னூக்கி 
29.Digital             -         எண்மின் 
30.Cyber            -          மின்வெளி 
31.Router           -         திசைவி 
32.Selfie             -         தம் படம் - சுயஉரு - சுயப்பு
33 Thumbnail              சிறுபடம் 
34.Meme           -         போன்மி 
35.Print Screen -          திரைப் பிடிப்பு 
36.Inkjet             -           மைவீச்சு 
37.Laser            -          சீரொளி 
நல்ல முயற்சி நாமும்  மனனம் செய்வோம் .

படித்ததில் பகிர்ந்தது 
ஷேர் பன்னுங்க

அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி  நல்வாழ்த்துகள்  Happy vinayagar chathurthy Happy ganesha chathurthy 25/8/2017

ஓம் விக்னேஸ்வரர் திருவடிகள் போற்றி
ஓம் முருகன்  திருவடிகள் போற்றி
அனைவருக்கும் இனிய 
விநாயகர் சதுர்த்தி 
நல்வாழ்த்துகள் 
இந்த நன்நாளில் அன்பும் அறமும் அனைவரிடத்திலும் பெருகட்டும் பக்தி நிலைக்கட்டும் நாட்டில் 
நல்லதே  நடக்கட்டும் உலகத்தில் அமைதி நிலவட்டும் 
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்

Friday, 11 August 2017

காலம் முழுக்க சாணத்தையே உண்டு வாழும் சாணி வண்டு

சுமார் மூன்று கோடி ஆண்டுகளாக இந்த பூமியில் சாணி வண்டு வாழ்ந்து வருகிறது. இது பெரிய விலங்குகளின் சாணத்தையே உண்டு வாழ்வதாலே அதையே பெயராக கொண்டுள்ளது. பெரும்பாலும் இவை இலைதழைகளை உண்ணும் விலங்குகளின் சாணத்தையே விரும்பி உண்கின்றன. இவை 3 மிமி அளவிலிருந்து 3 செமி அளவு வரை காணப்படுகிறது. கோடி ஆண்டுகளுக்கு முன் வாழந்தவை இதைவிட பெரியதாக இருந்திருக்கலாம். இதுவரை சுமார் 5,000 வகைகள் கண்டறியப்பட்டுள்ளன.

இவை கடும் குளிரையோ, கடும் வெயிலையோ விரும்பாது. எனவே இவ்வுலகில் அண்டார்டிகா வை தவிர ஏனைய அனைத்து கண்டங்களிலும் காண முடியும். இவற்றின் தலையில் மண்வெட்டி அல்லது தட்டு போன்ற உறுதியான அமைப்பு இருக்கும். முன் கால்களை விட பின் கால்கள் நீளம் அதிகம்.

மாடு மற்றும் யானையின் சாணம் இவற்றுக்கு மிகவும் பிடித்தமானது. ஆனால் அது கிடைக்காத போது வேறு எந்த சாணத்தையும் விட்டுவைப்பதில்லை. லட்சக்கணக்காக விலங்குகள் வாழும் காட்டில் அவை இடும் டன் கணக்கான சாணத்தை சாணி வண்டுகள்தான் தின்று காட்டை தூய்மைப் படுத்துகிறது என சொன்னால் அது மிகையில்லை.

சாணி வண்டுகள் கூட்டமாக வாழும். நல்ல மோப்ப சக்தி கொண்டவை. தூரத்தில் சாணம் இருப்பதையும் கண்டறிந்து வேகமாக இடத்தை சென்றடையும். எவ்வளவு உயரமாக, பெரிதாக சாணம் கொட்டிக்கிடந்தாலும் அவற்றை தன் தலையில் உள்ள மண்வெட்டி போன்ற அமைப்பால் வெட்டி சரித்து கூட்டமாக தின்று தீர்க்கும்.

மழை பொழிந்து மண் ஈரமாக உள்ள காலத்தில் சாணி வண்டுகள் தனது துணையை தேடும். தனக்கான பெண் துணையை ஈர்க்க ஆண் வண்டு சாணியை உருட்டி நகர்த்தி செல்லும். எவ்வளவு பெரியதாக உருட்டுகிறதோ அந்த அளவு பெண் வண்டு கவரப்படும். பழங்காலத்தில் வாழந்த வண்டுகள் ஒரு டென்னிஸ் பந்து அளவு கூட உருட்டியுள்ளதாக கண்டறிந்துள்ளனர். ஈர்க்கப்பட்ட பெண் வண்டு உல்லாசமாக சாணி உருண்டை மீது ஏறி அமர்ந்து கொள்ளும். பாதுகாப்பான இடம் ஒன்றை தேர்ந்தெடுத்து அங்கே இரு வண்டுகளும் சேர்ந்து ஆழமான பொந்து ஒன்றை தோண்டும். தான் உருட்டி வந்த சாணி உருண்டையை எளிதாக உள்ளே எடுத்துச்செல்லும் அளவிற்கு பொந்தின் விட்டம் இருக்கும்.

பொந்துக்குள் சாணி உருண்டையை கொண்டு சேர்ந்தபின் ஆணும் பெண்ணும் இணையும். அந்த மகிழ்ச்சியை கொண்டு வந்த சாணி உருண்டை தீரும் வரை அங்கேயே தங்கி கொண்டாடும். பின்னர் அந்த பொந்து இருக்கும் இடத்தை நன்கு மனதில் பதிய வைத்துக்கொண்டு மீண்டும் சாணம் தேடி போகும். முட்டை இடும் காலம் வந்தவுடன் மீண்டும் ஆணும் பெண்ணும் சேர்ந்து சாண உருண்டைகளை உருட்டி வரும். இம்முறை பெண் வண்டும் சேர்ந்து உருட்டும். பொதுவாக இவை தன் எடையை விட 50 மடங்கு அதிக எடையை தூக்க வல்லவை. தன் எடையை விட 250 மடங்கு அதிகமுள்ள எடையை உருட்டி செல்ல வல்லவை. ஆப்பிரிக்காவில் காணப்படும் சில வகையில் ஆண் வண்டுகள் தன் எடையை விட 1,141 மடங்கு அதிக எடையை உருட்டி செல்கிறதாம். இது 70 கிலோ எடையுள்ள மனிதன் 80 டன் எடையுள்ள பொருளை உருட்டுவதற்கு சமம்.

இவ்வளவு கனமான சாணி உருண்டையை எளிதாக உருட்டி தன் வளைக்கு கொண்டு செல்ல சில நுட்பங்களை கையாளுகிறது. தனது சிறிய முன் கால்களை மண்ணில் வைத்து, நீளமான பின் கால்களால் சாண உருண்டையை தள்ளுகிறது. நம் நான்கு சக்கர வாகனங்களில் முன்னோக்கு கியர்களை விட பின்னோக்கு கியருக்கு அதிக இழுத்திறன் உண்டு. அதை போலத்தான் இதுவும். ஒரு வண்டு பின்னிருந்து தள்ளவும், இன்னொரு வண்டு முன்னிருந்து இழுக்கவும் செய்யும். இந்த செயலும் நகர்த்துவதை பல மடங்கு எளிதாக்கும். வழியே வேறு வண்டுகள் இதனை திருட வரலாம். அவ்வாறு வந்தால் ஒரு மணி நேரம் கூட சளைக்காமல் சண்டை போடும்.  எனினும் யாரும் வரும் முன்னர் கொண்டு போய் சேர்க்க பதட்டமாகவே இடைவிடாமல் உருட்டி செல்லும்.

அட.. சாணிக்கு போய் ஒரு மணி நேரம் சண்டையா.. சீ.. என முகம் சுளிக்கிறீர்களா..?
அது அதனுடைய உணவு. அதுவே அதனுடைய சொத்து. அதனால் அது சளைக்காமல் சண்டை போடுகிறது. 
அது மட்டுமல்ல, சாணியை தின்னும் வண்டுதானே என அலட்சியமாக எண்ணி விட வேண்டாம். இந்த வண்டுகளுக்கு GPS தொழில்நுட்பம் தெரியும். பெரிய சாண உருண்டையை காட்டின் பல மேடு பள்ளங்களில் தனது இருப்பிடம் நோக்கி எடுத்துச்செல்லும்போது வழி மாறி வேறு எங்கும் சாண உருண்டை உருண்டு விழலாம். அப்போது சூரியன், சந்திரன், நட்சத்திரங்களை கொண்டு தன் இருப்பிடத்தை கணித்து சரியான திசையில் சாணி உருண்டையை எடுத்துச் செல்கின்றன. இவ்வுலகில் மனிதன் தோன்றுவதற்கு சில கோடி ஆண்டுகள் முன்னரிலிருந்தே GPS  தொழில்நுட்பத்தை இந்த வண்டுகள் மட்டுமே பயன்படுத்தி வருகின்றன. இன்னமும் கூட மனிதனிடம் உள்ள GPS இவ்வண்டுகள் அளவிற்கு துல்லியமானது கிடையாது.

வளைக்குள் சாண உருண்டையை கொண்டு வந்து சேர்த்த பின்னர் அதற்குள் பெண் வண்டு முட்டையை ஒளித்து வைக்கிறது. அதனை தன் எச்சில் கொண்டு மெழுகி மூடுகிறது. சில வகை வண்டுகள் வளையை மண்ணை தள்ளி மூடிவிட்டு சென்றுவிடும். சில வகை வண்டுகள் அங்கேயே தனது பிள்ளைகளுக்காக காத்திருக்கும். குட்டி வண்டு லார்வா பருவத்திலிருந்து தன்னை சுற்றியுள்ள சாணத்தை தின்று வளர்ந்து இரண்டிலிருந்து மூன்று வாரத்திற்குள் முழு வண்டாக மாறி வளையை விட்டு வெளியேறும்.  பெற்றோர் வண்டுகள் மேலும் சாணத்தை உருட்டி வந்து லார்வா வுக்கு உணவாக தரும். பெரும்பாலும் அதே மனைவியுடனே இறுதி காலம் வரை வாழும். இவற்றிற்கான ஆயுட்காலம் இரண்டு ஆண்டுகள்.

சாணி வண்டுகள் விவசாயத்திற்கு மிகப்பெரிய உதவி செய்கிறது. இது சாணத்தை எளிய பொருளாக்கி மண்ணுக்கு அடியில் கொண்டுபோய் சேர்ப்பதால் மண்ணுக்கு சிறந்த உரமாக மாறுகிறது. இதனால் மற்ற தாவரங்களின் வேர் தனக்கு தேவையான சத்தினை எளிதாக பெற்று திடமாக வளருகிறது.
சாணத்தை உடனே சிதைக்க தொடங்குவதால் அதன் மீது ஈ, கொசு போன்றவை அமர்ந்து அதன் மூலம் விலங்குகளுக்கு நோய் எதுவும் பரவிவிடாமல் தடுக்கிறது. காடுகளில் வாழும் வண்டுகளுக்கும் மனிதர்கள் வாழும் பகுதியில் உள்ள வண்டுகளுக்கும் வேறுபாடு உண்டு. மனிதர்கள் வாழும் பகுதியில் உள்ள வண்டுகள் சாணம், மலம் எவற்றையும் உண்ணும். ஆனால் காடுகளில் வாழும் வண்டுகள் குறிப்பிட்ட விலங்குகளின் சாணத்தை மட்டுமே உண்ணும். அவற்றிற்கு விருப்பமான சாணம் கிடைக்காமல் தடுத்து பட்டினி போட்டு பின்னர் அதற்கு விருப்பமில்லாத வேறு விலங்கின் சாணத்தை கொடுத்தால்கூட தின்னாது.

இது மட்டுமல்லாமல் இந்த வண்டுகள் அதிகம் வாழும் பகுதியில் வளரும் வளர்ப்பு பிராணிகளுக்கு தடுப்பூசி ஏதுமின்றி வலிமையான நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதை கண்டு பிடித்துள்ளார்கள். ஆனால் இது எப்படி சாத்தியமாயிற்று என இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால் தானோ என்னவோ 5000 வருடங்கள் முன்பே பண்டைய எகிப்தியர் இதனை வணங்கியுள்ளனர்.

நாம் தான் இதன் மேல் உரத்தையும், பூச்சி மருந்தையும், ஷாம்புவையும், பாத்திரம், தரை கழுவும் திரவங்களையும், தொழிற்சாலை கழிவுகளையும் தெளித்து, மழையும் இல்லாமல் ஆக்கி கொன்று வருகிறோம்
படித்ததில் பகிர்ந்தது