இன்று உலக இயற்கை வளம்
பாதுகாப்பு தினம்
இயற்கையை போற்றுவோம்
இயற்கையை நேசிப்போம் இயற்கைவளங்களை காப்போம் பாரம்பரிய மரங்கள்
செடிகள் இயற்கை விவசாயம்
போற்றி பாதுகாப்போம்
மழைநீரை சேமிப்போம் மரகன்றுகள் நட்டு பராமரித்து மரங்களை காப்போம்,பொதுமக்கள் அதிகம் கூடும் சுற்றுலாத்தளங்கள் திரைஅரங்கங்கள் ஷாப்ப்பிங்மால்கள் பள்ளி மற்றும் கல்லூரிகள் போன்ற அணைத்து இடங்களிலும் இயற்கைவளங்கள் சுற்றுசூழல் விவசாயம் மரம்வளர்ப்பு மழைநீர்சேகரிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இத்துறைசார்த்தவர்கள் மற்றும் அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கணும் என்பதே சமூக ஆர்வலர்களின் விருப்பம் வாழ்க இயற்கையோடும் இயற்கை வளங்களோடும் வாழ்வோம் இயற்கையே போற்றி நன்றி
Thursday, 27 July 2017
உலக இயற்கை வளம் பாதுகாப்பு நாள் இன்று 28/7/2017
Wednesday, 26 July 2017
ஆடிபூரத்தை முன்னிட்டு திருவொற்றியூர் அருள்மிகு
வடிவுடை அம்மனுக்கு ஆடிப்பூர வலைக்காப்பு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது 26/7/2017
26/7/2017 திருவொற்றியூர்
அருள்மிகு தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் திருகோயிலில் ஆடிபூரத்தை முன்னிட்டு அருள்மிகு
வடிவுடை அம்மனுக்கு ஆடிப்பூர வலைக்காப்பு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றார்கள்
Monday, 17 July 2017
உடல் ஆரோக்கியத்துடனும் திகழ தன்வந்திரி போற்றி படியுங்கள் Dhanvanthri potri
ஓம் தன்வந்திரி திருவடிகள் போற்றி
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். உடல்,நலத்துடனும்
உடல் ஆரோக்கியத்துடனும் திகழ
இந்த போற்றியை தினமும் விளக்கேற்றி முழு நம்பிக்கையுடனும் பக்தியுடனும் போற்றி படியுங்கள்
அமுதத்தை ஏந்திநிற்கும் அருள்கரத்தோய் சரணம்
குமதச் செல்வி மணவாளன் மறுவடிவே சரணம்
சேய் எங்கள் நோய் நீக்கி காத்திடுவாய் சரணம்
தாய் போலே தரணிக்கும் தன்வந்த்திரியே சரணம்.
( ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி
ஓம் திருப்பாற்கடலில் தோன்றியவனே போற்றி
ஓம் தீர்க்காயுள் தருபவனே போற்றி
ஓம் துன்பத்தைத் துடைப்பவனே போற்றி
ஓம் அச்சம் போக்குபவனே போற்றி
ஓம் அஷ்டாங்க யோகியே போற்றி
ஓம் அபயம் அளிப்பவனே போற்றி
ஓம் அன்பு கொண்டவனே போற்றி
ஓம் அமரனே போற்றி
ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி
ஓம் அமரப் பிரபுவே போற்றி
ஓம் அருளை வாரி வழங்குபவனே போற்றி
ஓம் அடைக்கலம் கொடுப்பவனே போற்றி
ஓம் அழிவற்றவனே போற்றி
ஓம் அமிர்தம் அளிப்பவனே போற்றி
ஓம் அமிர்த கலசம் ஏந்தியவனே போற்றி
ஓம் அமிர்தத்தை உற்பத்தி செய்தவனே போற்றி
ஓம் அமிர்தமானவனே போற்றி
ஓம் அனைத்தையும் அறிந்தவனே போற்றி
ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி
ஓம் ஆயுர் வேதமே போற்றி
ஓம் ஆயுர் வேதத்தின் தலைவனே போற்றி
ஓம் ஆயுளை நீட்டிப்பவனே போற்றி
ஓம் ஆயுதக்கலை நிபுணனே போற்றி
ஓம் ஆத்ம பலம் தருபவனே போற்றி
ஓம் ஆசாபாசம் அற்றவனே போற்றி
ஓம் ஆனந்த ரூபனே போற்றி
ஓம் ஆகாயத் தாமரையே போற்றி
ஓம் ஆற்றல் பெற்றவனே போற்றி
ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி
ஓம் உலக ரட்சகனே போற்றி
ஓம் உலக நாதனே போற்றி
ஓம் உலக சஞ்சாரியே போற்றி
ஓம் உலகாள்பவனே போற்றி
ஓம் உலகத்தைக் காத்தருள்பவனே போற்றி
ஓம் உலக மக்களால் பூஜிக்கப்படுபவனே போற்றி
ஓம் உயிர் காப்பவனே போற்றி
ஓம் உயிர்காக்கும் உறைவிடமே போற்றி
ஓம் உண்மையான சாதுவே போற்றி
ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி
ஓம் எமனுக்கும் எமனானவனே போற்றி
ஓம் எழிலனே போற்றி
ஓம் எளியார்க்கும் எளியவனே போற்றி
ஓம் எல்லா ஐஸ்வர்யங்களையும் அணிந்தவனே போற்றி
ஓம் எல்லா நலன்களும் அருள்பவனே போற்றி
ஓம் எல்லோருக்கும் வாரி வழங்குபவனே போற்றி
ஓம் எல்லையில்லா இன்பப் பெருக்கே போற்றி
ஓம் எல்லையில்லா பேரின்பமே போற்றி
ஓம் எல்லையற்ற மகிமை கொண்டவனே போற்றி
ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி
ஓம் கருணைக் கடலே போற்றி
ஓம் கருணைக் அமிர்தக்கடலே போற்றி
ஓம் கருணா கரனே போற்றி
ஓம் காக்கும் தெய்வமே போற்றி
ஓம் காத்தருள் புரிபவனே போற்றி
ஓம் காருண்ய மூர்த்தியே போற்றி
ஓம் காவேரியில் ஸ்நானம் செய்பவனே போற்றி
ஓம் குருவே போற்றி
ஓம் கும்பிடும் தெய்வமே போற்றி
ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி
ஓம் சகல நன்மைகளையும் தருபவனே போற்றி
ஓம் சகல செல்வங்களையும் வழங்குபவனே போற்றி
ஓம் சமத்துவம் படைப்பவனே போற்றி
ஓம் சம தத்துவக் கடவுளே போற்றி
ஓம் சகிப்புத் தன்மை மிக்கவனே போற்றி
ஓம் சங்கு சக்கரம் ஏந்தியவனே போற்றி
ஓம் சர்வேஸ்வரனே போற்றி
ஓம் சர்வ லோக சஞ்சாரியே போற்றி
ஓம் சர்வலோகாதிபதியே போற்றி
ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி
ஓம் சர்வ மங்களம் அளிப்பவனே போற்றி
ஓம் சந்திரனின் சகோதரனே போற்றி
ஓம் சிறந்த ஆற்றல் கொண்டவனே போற்றி
ஓம் சித்தி அளிப்பவனே போற்றி
ஓம் சிறந்த அறநெறியோனே போற்றி
ஓம் சீரங்கத்தில் வாழ்பவனே போற்றி
ஓம் சுகம் அளிப்பவனே போற்றி
ஓம் சுகபோக பாக்யம் தருபவனே போற்றி
ஓம் சுபம் தருபவனே போற்றி
ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி
ஓம் தசாவதாரமே போற்றி
ஓம் தீரனே போற்றி
ஓம் தெய்வீக மருந்தே போற்றி
ஓம் தெய்வீக மருத்துவனே போற்றி
ஓம் தேகபலம் தருபவனே போற்றி
ஓம் தேவாதி தேவனே போற்றி
ஓம் தேவர்களால் வணங்கப்படுபவனே போற்றி
ஓம் தேவாமிர்தமே போற்றி
ஓம் தேனாமிர்தமே போற்றி
ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி
ஓம் பகலவனே போற்றி
ஓம் பக்திமயமானவனே போற்றி
ஓம் பண்டிதர்களின் தலைவனே போற்றி
ஓம் பாற்கடலில் தோன்றியவனே போற்றி
ஓம் பாதபூஜைக்குரியவனே போற்றி
ஓம் பிராணிகளின் ஜீவாதாரமே போற்றி
ஓம் புருஷோத்தமனே போற்றி
ஓம் புராண புருஷனே போற்றி
ஓம் பூஜிக்கப்படுபவனே போற்றி
ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி
ஓம் மரணத்தை வெல்பவனே போற்றி
ஓம் மஹா பண்டிதனே போற்றி
ஓம் மஹா மேதாவியே போற்றி
ஓம் மஹா விஷ்ணுவே போற்றி
ஓம் முக்தி தரும் குருவே போற்றி
ஓம் முழு முதல் மருத்துவனே போற்றி
ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி
ஓம் ஸ்ரீ சக்தியே! தன்வந்திரி பகவானே போற்றி போற்றி )
மேற்கண்ட இந்த தன்வந்திரி போற்றியை தினமும் விளக்கேற்றி பக்தியுடனும் நம்பிக்கையுடனும் போற்றி படியுங்கள்
உங்களால் முடிந்தால் மாதம் ஒருவருக்கோ இருவருக்கோ
அல்லது உங்களால் எவ்வளவுபேருக்கு
அண்ணதானம் அளிக்கமுடியுமோ அவ்வளவுபேருக்கு அண்ணதானமும். முடிந்ததால் தினமும் ( காக்கைக்கு ) காக்காவுக்கு உணவு அளித்துவந்தால் நோயற்றவாழ்வும் குறைவற்ற செல்வமும் முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும் ஓவ்வொருவரும் வீட்டில் துளசி செடி வளர்ப்பது மிகவும் நன்மைதரும் தன்வந்திரி மூலிகைபிரியர் என்பதால் தன்வந்தரி போற்றி தொகுப்பு படித்துவிட்டு வீட்டில் துளசிசெடி இருந்ததால் அதற்க்கு தண்ணீர் ஊற்றி நோய்யற்ற வாழ்வும்
குறைவற்ற செல்வமும் வேண்டும் என்று வேண்டிக்கொள்ளுங்கள் வீட்டில் துளசி செடி இல்லைஎன்றால் வீட்டில் துளசி செடி வளர்க்க இடம் இருந்ததால் வாங்கிவந்து வளர்த்திடலாம்
தன்வந்திரி போற்றியை நம்பிகையுடன்
படித்து நோய்நொடியின்றி
ஆரோக்கியமாக வாழ்ந்திடுங்கள் மற்றவர்களும் நோயற்றவாழ்வும்
குறைவற்ற செல்வமும் பெற்று ஆரோக்கியமாகவாழ ஷேர்
( செய்யுங்கள் ) பண்ணுங்க
நன்றி
பப்பாளியின் மருத்துவ பண்புகள் papaya pappali
பப்பாளியின் மருத்துவ பண்புகள் மருத்துவ பண்புகள் நிறைந்த பப்பாளி
* நல்ல மலமிளக்கி. மலச்சிக்கல் வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை போன்ற பிரச்சனைகளுக்குஅருமருந்து......!
* பித்தத்தைப் போக்கும்......!
* உடலுக்குத் தென்பூட்டும்......!
* இதயத்திற்கு நல்லது......!
* மனநோய்களைக் குணமாக்குவதில் உதவும்......!
* கல்லீரலுக்கும் ஏற்றது......!
* கணைய வீக்கத்தைக் கட்டுப்படுத்தும்......!
* சிறுநீர்க் கோளாறுகளைத் தீர்க்கும்.....!
* கல்லீரல் கோளாறுகளைத் தீர்க்கும்.....!
* முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு உதவும்......!
*இரத்தச்சோகைக்குநிவாரணமளிக்கும்......!
* மண்ணீரல் வீக்க சிகிச்சையில் பப்பாளி பயன்படுகிறது......!
* பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால், குடலிலுள்ள வட்டப்புழுக்கள்வெளியேறும்.....!
* பப்பாளியிலுள்ள ‘பப்பாயின்’ என்சைம்களில் ‘ஆர்ஜினைன்’ என்பது ஆண்களுக்கான உயிர் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும்,‘கார்பின்’ இருதயத்திற்கும், ஃபைப்ரின் இரத்தம் உறைதலுக்கும் உதவுகின்றது......!
* பப்பாளியிலுள்ள விதவிதமான என்சைம்களின் சேர்க்கை, புற்றுநோயைக் குணப்படுத்த வல்லது......!
* இளமைப் பொலிவைக் கூட்டி வயோதிகத்தைக் கட்டுப்படுத்துவதாக பப்பாளிகளை சிறப்பித்துக் கூறுவர்......!
* உடலிலுள்ள நச்சு முழுக்க பப்பாளியால் சுத்திகரிக்கப்படுகிறது......!
* இயற்கை மருத்துவச் சிகிச்சையின் கீழ் ‘பட்டினிச் சிகிச்சை’ மேற்கொள்கையில் பப்பாளிச் சாறும், வெள்ளரிச் சாறும் மாற்றி மாற்றிக் குடித்தால் உடல் கழிவுகள் நீக்கத்தில் பெரும்பயன் விளையும்......!
* ‘ஆண்டிபயாடிக்’ மருந்துகளில் சிகிச்சை பெற்றபின் ஒருவர், பப்பாளி நிறையச் சாப்பிட வேண்டும். ஏனெனில் குடல் தசைகளில் அழிக்கப்பட்டிருக்கும் நல்ல பாக்டீரியாக்களைமீண்டும் உற்பத்தி செய்வதற்கு பப்பாளி உதவும்......!
* நன்றாகப் பழுத்த பப்பாளிப் பழத்தின் விதைகள், குடல் புழுக்களை வெளியேற்ற உதவும். கூடவே தாகம் போக்குவதில் நல்ல பயன் தரும்.
பப்பாளி இலைகளின் பொடி யானைக்கால் வியாதிக்கும், நரம்பு வலிகளுக்கும் மருந்தாக விளங்குகிறது......!
வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்ட மின் ஏ உயிர் சத்து நிறைய இருக்கிறது. பல் சம்மந்தமான குறை பாட்டிற்கும், சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப்பாளி சாப்பிட்டால் போதும். மேலும்- நரம்புகள் பலப் படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள்......!
மாதவிடாய் சரியான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டி ருக்கும் பெண்மணிகள் தினமும் பப்பாளிப்பழம் உண்டு வந்தால் மாதவிடாய் குறைபாடு சீராகும்......!
அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது. பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை,,விதை,இல்லா பப்பாளியை உன்ன கூடாது ஏன் என்றால் அது மரபணு மாற்றம் செய்ய பட்டு விளைவித்த பப்பாளியாக இருக்கலாம்,விதை,உள்ள,பப்பாளியில் சத்துக்கள்,அதிக,அளவில்,நிறைந்து,உள்ளது, அதனால்,விதை உள்ள பப்பாளியில்,விதைகளை எடுத்துவிட்டு பப்பாளியை சாப்பிடலாம்.பப்பாளி மரத்தில் உள்ள இலைகளும் மலேரியா போன்ற காய்ச்சல் நோய்களை கட்டு படுத்தக்கூடியது,ஒவ்வொரு வீட்டிலும் வளர்க்கவேண்டிய மருத்துவ பண்புகள் நிறைத்த பப்பாளி பப்பாளி மரங்களை வீட்டிலும் வளர்த்து பயன்பெருங்கள் பப்பாளி கர்பினிகள் சாப்பிடக்கூடாது-
படித்ததில் பகிர்ந்தது
நன்றி.
Saturday, 15 July 2017
உடல் ஆரோக்கியத்தை தரும் மண்பாண்டதில் சாப்பிடும் உணவு
உடல் ஆரோக்கியத்தை தரும் மண்பாண்டதில் சாப்பிடும் உணவு
[ சுற்று சூழலுக்கு கேடு விளைவிக்காத மண் பாண்டம் ]
நம்ம முன்னோர்கள் எல்லாம் பாரம்பரியமா மண் பானையில் அரிசி பொங்கி சாப்பிட்டதால் நோய் எதிர்ப்பு சக்தி அவர்களிடத்தில் அதிகமாக இருந்தது.அவர்கள் ஆரோக்கியமாகவும் நீண்ட ஆயுளுடனும் வாழ்தார்கள்.
மண் பானையில் மண் சட்டியில் குழம்பு உணவுகளை செய்து சாபிட்டால் நல்ல ருசியாகவும் மனமாகவும் இருக்கும் என்பதை நம் முன்னோர்கள் அறிந்துவைத்து அவர்களுக்கு தேவையான உணவுகளை மண் பாண்டங்களில் சமைத்து உண்டு ஆரோக்கியத்துடனும் நோய்நொடிகள் ஏதும் அண்டாமல் நிம்மதியாக வாழ்தார்கள் அவர்களுக்கு தேவையான அரிசி பருப்பு போன்ற தானியங்களை பானையில் உரியாக கட்டி வீட்டில் தொங்கவிட்டு இருப்பார்களாம் இந்த தானியங்கள் வெகு நாட்களானாலும் கெட்டுப்போகாதாம் மண்பாண்டங்களில் சமைத்து உண்ணுவதால் உணவில் ஏதாவது கிருமி ரசாயனம் இருந்தால் அதை அந்த மண்பாண்டம் ஈர்த்துவிடுமாம் பிறகு நாம் அந்த உணவை உண்ணும் போது நமக்கு ரசாயனமற்ற உணவாக இருகின்றதாம் அவர்கள் பானையில் தண்ணீரை நிரப்பி ஊற்றிவைத்து அந்த பானையின் அடியில் ஆற்று மணலை பரப்பி அதன் மேல் தண்ணீர் நிரப்பி வைத்த பானையை வைத்து அந்த நீரை குடித்தார்கள் இந்த மண்பானையில் ஊற்றிவைத்து குடிக்கும் நீர் குளிர்சாதனபெட்டியில் நாம் வைக்கும் நீரை போன்று இந்த மண்பானை குடிநீர் குளுமையாக இருக்குமாம் சுற்று சூழலுக்கும் கேடு விளைவிக்காதாம் ஆனால் நாம் பயன் படுத்தும் குளிர் சாதனபெட்டியில் நாம் வைத்து குடிக்கும் குடிநீர் மற்றும் பழங்கள்; காய்கனிகள் உணவுகள் நம் உடலுக்கு கேடுவிளைவிக்கும்.
இப்போதாவது நம்மமுனோர்கள் பயன்படுத்திய மண்பாண்டங்களை நாமும் உபயோகிப்போம், நலமாகவாழ்வோம் இன்றளவும் கிராமங்களில் மண்பாண்டத்தில் தான் உணவுகளை சமைத்து உண்பதை கடைபிடிகின்றார்கலாம் உங்கள் ஊரில் அருகாமையில் உள்ள மண்பாண்ட விற்பணை நிலையங்களுக்கு சென்று மண்பாண்டங்களை வாங்கிப்பயன்படுத்துங்கள் ஆரோக்கியமாக வாழுங்கள் வாழ்கவளமுடன்,
படியுங்கள் பிடித்திருந்தால் ஷேர் செய்யுங்கள் நன்றி
கட்டாயமாக வீட்டில் இருக்கவேண்டிய வளர்க்கவேண்டிய தெய்வீகதன்மைவாய்ந்த துளசிசெடி Thulasi Chedi Thulasi plant
கட்டாயமாக அனைவரின் வீட்டில் இருக்கவேண்டிய வளர்க்கவேண்டிய தெய்வீகதன்மைவாய்ந்த துளசிசெடி Thulasi Chedi Thulasi plant
ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயமாக இருக்கவேண்டிய வளர்க்கவேண்டிய தெய்வீகதன்மைவாய்ந்த துளசிசெடி
துளசி செடி வளர்போம் சகல நன்மைகளையும் பெருவோம்.
வீட்டில் ஒவ்வொருவரும்
துளசி செடி நட்டு வளர்போம்
துளசி செடியை வீட்டில்
வளர்ப்பதன் மூலம் சகலநன்மைகளும்
வளர்ப்பவர்கள் பெறுகின்றனர் துளசிச்செடியில் மூலிகையின்
பயன்கள் நிறைந்துள்ளது வீட்டைச்சுற்றி துளசி செடி்கள் வளர்பதால் வீட்டை சுற்றி மூலிகை வாசமும் தெய்வீக தன்மையும் நிரைந்திருக்கும் வீட்டில் எந்த விதமான தீய சக்திகள் கண் திருஷ்டிகள்
நோய் நொடிகள் அண்டவிடாமல் தடுக்கும் வல்லமை துளசி செடிக்கும்
அதன்வாசனைக்கும் உண்டு .
துளசி செடியை உங்கள் வீட்டில் வளர்க்கும் பொழுது அதில் பூக்கள் அதிக அளவில் வரும் அப்பொழுது ஒரிரு பூக்களை மட்டும் விட்டுவிட்டு மற்றபூக்களை கிள்ளிவிடனும் இப்படி செய்வதால் துளசிசெடி வாடாமல் நீண்டநாள் பசுமையாக இருக்கும் துளசி செடியில் வரும் பூவானது காய்ந்தால் அதில் துளசி விதைகள் இருக்கும் அதை மண்ணில் தூவிவிட்டால் துளசி செடிகள் முளைக்க ஆரம்பிக்கும்
அதை எடுத்து வேறு தொட்டிகளில் நட்டு நண்பர்களுக்கும் சுற்றத்தார்களுக்கும் உறவினர்களுக்கும் கோயில்களுக்கும் பள்ளிகளுக்கும் அலுவலகங்களுக்கும் செடிவளர்க்க இடமிருப்பவர்களுக்கும் கொடுக்கலாம் கட்டாயமாக வியாபாரம் மற்றும் தொழில் செய்யுமிடதிலும் துளசிசெடியை வளர்க்கணும் வியாபாரம்
செழிக்கும் தொழிலில் முன்னேற்றம் எற்படும் கண்திருஷ்டியை போக்கிவிடும் தன்மைகொண்டது மாணவர்கள் அவர்களது கையால் துளசிசெடியை நட்டு வளர்த்துவர அவர்கள் நட்டு வளர்த்த துளசி செடி எந்த அளவிற்கு பசுமையாக வளர்கின்றதோ அந்த அளவிற்கு கல்வியில் முனேற்றம் எற்படுமாம் கல்வியில் சிறந்துவிளங்குவார்களாம் துளசிச் செடி 20 மணி நேரம் ஆக்சிஜனையும் 4 மணிநேரம் ஓசோனையும் வெளியிடுகிறது. ஒரு துளசிச் செடி அதிகாலை 2 மணி முதல் 6 மணிவரை ஓசோனை வெளியிடுகிறது.
துளசி செடி வளர்போம்
சகல நன்மைகளையும் பெருவோம்,
இதை படித்தவர்கள் ஷேர் பண்ணுங்க
நீங்களும் துளசி செடியை வாங்கிவந்து வளர்த்திடுங்கள் வாழ்க இயற்கைவளமுடன்
இயற்கையின் ஆசியுடன் இயற்கையை போற்றுவோம் மரம் வளர்போம் மழைபெருவோம் மழைநீரை சேமிப்போம்
நல்லதே செய்யுங்கள்
அதை இன்றே செய்யுங்கள்
நன்றி-
Tuesday, 11 July 2017
நம்பிக்கை நிச்சயம் வெல்லும் நம்பிக்கையே வாழ்கை நம்புங்கள் நிச்சயம் நடக்கும் Nambikkai
ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி
எந்த காலத்திலும்
நல்லதே நினைப்போம்
நல்லதே நடக்கும் நாம்
இந்த பூமியில்
நலமாய் வாழ்வோம்
என்கின்ற முழுமையான
நம்பிகை இருந்ததால்
நிச்சயம் நம்பிக்கை
வெற்றிபெறும்
வாழ்க நலமுடன்
வாழ்க நம்பிக்கையுடன்