Tuesday, 27 June 2017

(எல்லாஉயிர்களையும் தன்னுயிர் போல் என்னுபவர்களுக்கு துன்பங்கள் ஒருபோதும் அண்டுவதில்லை)

(எல்லாஉயிர்களையும் தன்னுயிர் போல்
என்னுபவர்களுக்கு துன்பங்கள்
ஒருபோதும் அண்டுவதில்லை)

நாய் பூனை போன்ற பிராணிகளிடமும்
இரக்கம் காட்டுங்கள் ,
படித்ததும் கண் கலங்கிய கதை_
இன்னிக்கு காலையில கடைத்தெருவிற்கு சென்றேன்,
அங்கு கடைக்கு எதிரில் ஒரு குப்பைத்தொட்டியில் ஒரு நாய் ஒன்று உணவு தேடிகிட்டு இருந்தது. அங்கு பக்கத்தில் விளையாடிகிட்டு இருந்த சிறுவர்கள் அதை பார்த்ததும் கல்லை எடுத்து எடுத்து எறிந்தனர்,அந்த கல் அந்த நாயின் காலில் பலமாக அடிபட்டது,காலில் இரத்தம் சொட்ட ஒட முயன்ற அந்த நாய் வலியிலும் குப்பையில் கிடந்த எதோ ஒரு உணவு பொட்டலத்தை வாயில் கவ்விக்கொண்டு நொன்டிகொண்டே ஓடியது,
அந்த சிறுவர்களிடம் இப்படில்லாம் செய்யாதீர்கள் அது பாவம் என்று கூறிவிட்டு ஒரு பிஸ்கட் பாக்கெட்டை வாங்கிக்கொண்டு எனது வண்டியை எடுத்தேன்,நாய் சென்ற வழியில் சென்றேன் சிறிது தூரம் சென்றதும் அந்த நாய் ஒரு புதரின் அருகில் நிற்பதை பார்த்தேன். அதை பார்த்ததும் என் மனம் கலங்கியது,
அங்கு ஐந்து நாய் குட்டிகள் இருந்தது,அந்த நாயின் குட்டிகள் என நினைக்கிறேன். அது கவ்விக்கொண்டு வந்த உணவு பொட்டலத்தை குட்டிகள் சாப்பிட்டு கொண்டிருந்தன,அந்த நாயின் தாய்மை பாசத்தை நினைத்து கண்கள் கலங்கியது, நான் கொண்டுவந்த பிஸ்கட் பாக்கெட்டை பிரித்து அந்த நாயின் அருகில் சென்றேன், வலியில் அந்த நாயின் கண்களில் இருந்து கண்ணீர் வருவதை பார்த்ததும் என் மனம் வருந்தியது,அதோட கண்ணை பாருங்க உங்களுக்கு புரியும் அதோட வலி,அதுவும் ஒரு உயிர் ஜீவன் தானே,அதற்கு நம்மால் உதவ முடியலைனாலும் பரவாயில்லை இந்தமாதிரி செய்யாதீர்கள்,
இது ஏதோ சிறுவர்கள் செய்த தவறு தான் ஆனாலும் சில அறிவாளிகளும் இப்படி செய்கின்றனர்,அது தவறு என்பதை இனிமேலாவது உணருங்கள்,உங்களால் முடிந்தால் உங்கள் தெருவில் உள்ள நாய்க்கு ஒரு பாக்கெட் பிஸ்கட் பண்ணு பிரட் பழைய சோறு போன்றவைகளை போடுங்க அது உங்க வீட்டை பாதுகாத்து காலத்துக்கும் நன்றி உணர்வுடன் இருக்கும்,
படித்ததில் பகிர்ந்தது

( சகல செல்வங்களையும் சகல நன்மைகளும் தரும் பெரியார்களின் ஆசீர்வாதம் )

ஆசிர்வாதம் மூலம் அனைத்து
செல்வங்களும் பெறலாம் ..!!
நாம வீட்டில்  உள்ள பெரியவங்க காலில்  விழுந்து ஆசீர்வாதம் வாங்வது  உண்டா..?
சில வீடுகளில்  பிறந்த நாள், 
திருமண  நாள், வெளியூர் வெளிநாடு போகும்போதும் , தீபாவளி அன்றைக்கு  புது புடவை புது  ஆடை அணியும்  இது மாதிரி சந்தர்ப்பங்களில்  பெரியவங்க காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது  உண்டு.
பெரியவர்கள்  - வயதானவர்கள்  - காலில் விழுந்து ஆசி பெற்றால் நம்ம சக்தி அதிகப்படும்னு ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர் 
ஆசிர்வாதம் எனும் மிகப்பெரிய சக்தி நமக்கு பெரும் பலத்தை கொடுக்கிறது. 
அசிர்வாதம் பெறுவது மட்டுமல்ல- ஆசிர்வாதம் செய்வதும் கூட உங்களுக்கு சக்தியை கொடுக்கும்,
நல்ல வார்த்தைகளை தேர்ந்தெடுத்து சொல்வதில்தான் விஷயம் இருக்கிறது.
100 வயது பெரியவரிடம் ஆசி வாங்னேன்..அவர் தீர்க்காயுசா இருப்பா என்றார்,ரெம்பவே சந்தோஷமா இருந்துச்சு!!
ஐயா எவ்வளவு நாளா இந்த வார்த்தைகளை பயன்படுத்தி ஆசி பண்றீங்க என்றேன்.
அது ஒரு 30 - 40 வருசமா அப்படித்தான் ஆசி பண்றேன் என்றார்.
அவரது தீர்க்காயுளுக்கும் இதுவும் ஒரு காரணமாக இருக்கும்.!
சிலர் காலில் விழுந்தால் இருக்கட்டும் எந்திரிங்க என்பார்கள்.
அய்யோ என் காலில் போய் விழுந்துட்டு என பதறுவர். 
இதெல்லாம் தவறு. ஆசி வழங்காமல் புறக்கணித்தல் பாவம் என்கிறது சாஸ்திரம்.
புது மணமக்கள் காலில் விழுந்தால் தீர்க்காயுஸ்மான் பவ என ஆணுக்கும்,
தீர்க்க சுமங்கலிமான் பவ என பெண்ணுக்கும் ஆசி வழங்கலாம் ...
வயதானவர்கள், சகல தோசங்களும் நீங்கப்பெற்று சகல செல்வங்களும் பெற்று ,குடும்ப ஒற்றுமையுடன், 
நீண்ட ஆயுளுடன் வாழுங்க  -- "
வாழ்க வளமுடன்" -- என்று ஆசிர்வதிக்கலாம் ..
தமிழில் அழகான வார்த்தைகளுக்கு பஞ்சமில்லை உங்களுக்கு என்னென்ன தேவையோ அதை பிறருக்கு ஆசியாக கொடுங்கள். அவர்களுக்கும் அவை கிடைக்கும் உங்களுக்கும் 
அவை வந்து சேரும்..இது பிரபஞ்ச விதி .
"வாழ்க வளமுடன்" என்பது ஒரு மிகவும் சக்தி வாய்ந்த மந்திரச் சொல்லாகும்..!  
இப்படி வாழ்த்துவதால் பிரபஞ்சசக்தி 
அந்த வார்த்தைகளை உங்களுக்கும் உங்களை சார்ந்தோரையும் வளமாக வாழ வைக்கிறது என்பது பலரது அனுபவ உண்மை,
நாம் ஏன் காலில் விழுகிறோம் என்பதற்கு அறிவியல் ரீதியான காரணம் உண்டு. ஆய்வின்படி மனிதனின் காலில்தான் சக்தி ஓட்டம் அதிகமாக இருக்கிறது. 
ஒரு ஞானியையோ அல்லது மகானையோ பார்க்கும் போது -  வாய்ப்பு கிடைத்தால்  - அவர்களின் காலில்விழுந்து  ஆசி பெறும் போது அவர்களின் சக்தியும் ஆசியும்  நமக்கும் கிடைக்கிறது. 
காலில் விழுந்து வணங்குவதின்  மூலம் இந்த சக்தி பரிமாற்றம் நடக்கிறது.
மேலும் ஆசி வழங்குபவர்கள் 
சொல்லும் வார்த்தைகளில் அதிக சக்தி இருக்கிறது.
மனப்பூர்வமாக ஒருவர் ஆசி வழங்கும்போது அதன் சக்தி அளவிட முடியாதது.
பல பாவங்களையும், தோஷங்களையும் கூட அது போக்குகின்றதாம் 
பெரியோர் காலில் விழுந்து ஆசி பெறுவதை பழக்கப்படுத்தி் கொள்ளுங்கள் ..! 
உங்கள் சக்தியை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள்,
(எல்லாவளமும் பெற்று 
நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாகவும் இயற்கையோடு இணைந்து இயற்கையின் ஆசியோடு நலமுடன்
வாழுங்கள் நன்றி )

படித்ததில் பகிர்ந்தது

Sunday, 11 June 2017

ஆத்தி சூடியை உலகறியச் செய்வோம் Aathichoodi

( ஓம் ஔவையார் திருவடிகள் போற்றி )

ஆத்தி சூடியை உலகறியச் செய்வோம்.

( ஔவையார் )

1. அறம் செய விரும்பு / 1. Learn to love virtue.
2. ஆறுவது சினம் / 2. Control anger.
3. இயல்வது கரவேல் / 3. Don't forget Charity.
4. ஈவது விலக்கேல் / 4. Don't prevent philanthropy.
5. உடையது விளம்பேல் / 5. Don't betray confidence.
6. ஊக்கமது கைவிடேல் / 6. Don't forsake motivation.
7. எண் எழுத்து இகழேல் / 7. Don't despise learning.
8. ஏற்பது இகழ்ச்சி / 8. Don't freeload.
9. ஐயம் இட்டு உண் / 9. Feed the hungry and then feast.
10. ஒப்புரவு ஒழுகு / 10. Emulate the great.
11. ஓதுவது ஒழியேல் / 11. Discern the good and learn.
12. ஒளவியம் பேசேல் / 12. Speak no envy.
13. அகம் சுருக்கேல் / 13. Don't shortchange.
14. கண்டொன்று சொல்லேல் / 14. Don't flip-flop.
15. ஙப் போல் வளை / 15. Bend to befriend.
16. சனி நீராடு / 16. Shower regularly.
17. ஞயம்பட உரை / 17. Sweeten your speech.
18. இடம்பட வீடு எடேல் / 18. Judiciously space your home.
19. இணக்கம் அறிந்து இணங்கு / 19. Befriend the best.
20. தந்தை தாய்ப் பேண் / 20. Protect your parents.
21. நன்றி மறவேல் / 21. Don't forget gratitude.
22. பருவத்தே பயிர் செய் / 22. Husbandry has its season.
23. மண் பறித்து உண்ணேல் / 23. Don't land-grab.
24. இயல்பு அலாதன செய்யேல் / 24. Desist demeaning deeds.
25. அரவம் ஆட்டேல் / 25. Don't play with snakes.
26. இலவம் பஞ்சில் துயில் / 26. Cotton bed better for comfort.
27. வஞ்சகம் பேசேல் / 27. Don't sugar-coat words.
28. அழகு அலாதன செய்யேல் / 28. Detest the disorderly.
29. இளமையில் கல் / 29. Learn when young.
30. அரனை மறவேல் / 30. Cherish charity.
31. அனந்தல் ஆடேல் / 31. Over sleeping is obnoxious.
32. கடிவது மற / 32. Constant anger is corrosive.
33. காப்பது விரதம் / 33. Saving lives superior to fasting.
34. கிழமைப்பட வாழ் / 34. Make wealth beneficial.
35. கீழ்மை அகற்று / 35. Distance from the wicked.
36. குணமது கைவிடேல் / 36. Keep all that are useful.
37. கூடிப் பிரியேல் / 37. Don't forsake friends.
38. கெடுப்பது ஒழி / 38. Abandon animosity.
39. கேள்வி முயல் / 39. Learn from the learned.
40. கைவினை கரவேல் / 40. Don't hide knowledge.
41. கொள்ளை விரும்பேல் / 41. Don't swindle.
42. கோதாட்டு ஒழி / 42. Ban all illegal games.
43. கெளவை அகற்று / 43. Don't vilify.
44. சக்கர நெறி நில் / 44. Honor your Lands Constitution.
45. சான்றோர் இனத்து இரு / 45. Associate with the noble.
46. சித்திரம் பேசேல் / 46. Stop being paradoxical.
47. சீர்மை மறவேல் / 47. Remember to be righteous.
48. சுளிக்கச் சொல்லேல் / 48. Don't hurt others feelings.
49. சூது விரும்பேல் / 49. Don't gamble.
50. செய்வன திருந்தச் செய் / 50. Action with perfection.
51. சேரிடம் அறிந்து சேர் / 51. Seek out good friends.
52. சையெனத் திரியேல் / 52. Avoid being insulted.
53. சொற் சோர்வு படேல் / 53. Don't show fatigue in conversation.
54. சோம்பித் திரியேல் / 54. Don't be a lazybones.
55. தக்கோன் எனத் திரி / 55. Be trustworthy.
56. தானமது விரும்பு / 56. Be kind to the unfortunate.
57. திருமாலுக்கு அடிமை செய் / 57. Serve the protector.
58. தீவினை அகற்று / 58. Don't sin.
59. துன்பத்திற்கு இடம் கொடேல் / 59. Don't attract suffering.
60. தூக்கி வினை செய் / 60. Deliberate every action.
61. தெய்வம் இகழேல் / 61. Don't defame the divine.
62. தேசத்தோடு ஒட்டி வாழ் / 62. Live in unison with your countrymen.
63. தையல் சொல் கேளேல் / 63. Don't listen to the designing.
64. தொன்மை மறவேல் / 64. Don't forget your past glory.
65. தோற்பன தொடரேல் / 65. Don't compete if sure of defeat.
66. நன்மை கடைப்பிடி / 66. Adhere to the beneficial.
67. நாடு ஒப்பன செய் / 67. Do nationally agreeables.
68. நிலையில் பிரியேல் / 68. Don't depart from good standing.
69. நீர் விளையாடேல் / 69. Don't jump into a watery grave.
70. நுண்மை நுகரேல் / 70. Don't over snack.
71. நூல் பல கல் / 71. Read variety of materials.
72. நெற்பயிர் விளைவு செய் / 72. Grow your own staple.
73. நேர்பட ஒழுகு / 73. Exhibit good manners always.
74. நைவினை நணுகேல் / 74. Don't involve in destruction.
75. நொய்ய உரையேல் / 75. Don't dabble in sleaze.
76. நோய்க்கு இடம் கொடேல் / 76. Avoid unhealthy lifestyle.
77. பழிப்பன பகரேல் / 77. Speak no vulgarity.
78. பாம்பொடு பழகேல் / 78. Keep away from the vicious.
79. பிழைபடச் சொல்லேல் / 79. Watch out for self incrimination.
80. பீடு பெற நில் / 80. Follow path of honor.
81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ் / 81. Protect your benefactor.
82. பூமி திருத்தி உண் / 82. Cultivate the land and feed.
83. பெரியாரைத் துணைக் கொள் / 83. Seek help from the old and wise.
84. பேதைமை அகற்று / 84. Eradicate ignorance.
85. பையலோடு இணங்கேல் / 85. Don't comply with idiots.
86. பொருள்தனைப் போற்றி வாழ் / 86. Protect and enhance your wealth.
87. போர்த் தொழில் புரியேல் / 87. Don't encourage war.
88. மனம் தடுமாறேல் / 88. Don't vacillate.
89. மாற்றானுக்கு இடம் கொடேல் / 89. Don't accommodate your enemy.
90. மிகைபடச் சொல்லேல் / 90. Don't over dramatize.
91. மீதூண் விரும்பேல் / 91. Don't be a glutton.
92. முனைமுகத்து நில்லேல் / 92. Don't join an unjust fight.
93. மூர்க்கரோடு இணங்கேல் / 93. Don't agree with the stubborn.
94. மெல்லி நல்லாள் தோள்சேர் / 94. Stick with your exemplary wife.
95. மேன்மக்கள் சொல் கேள் / 95. Listen to men of quality.
96. மை விழியார் மனை அகல் / 96. Dissociate from the jealous.
97. மொழிவது அற மொழி / 97. Speak with clarity.
98. மோகத்தை முனி / 98. Hate any desire for lust.
99. வல்லமை பேசேல் / 99. Don't self praise.
100. வாது முற்கூறேல் / 100. Don't gossip or spread rumor.
101. வித்தை விரும்பு / 101. Long to learn.
102. வீடு பெற நில் / 102. Work for a peaceful life.
103. உத்தமனாய் இரு / 103. Lead exemplary life.
104. ஊருடன் கூடி வாழ் / 104. Live amicably.
105. வெட்டெனப் பேசேல் / 105. Don't be harsh with words and deeds.
106. வேண்டி வினை செயேல் / 106. Don't premeditate harm.
107. வைகறைத் துயில் எழு / 107. Be an early-riser.
108. ஒன்னாரைத் தேறேல் / 108. Never join your enemy.
109. ஓரம் சொல்லேல் / 109. Be impartial in judgement.

Thursday, 8 June 2017

நீர் நிலைகள் neer nilaigal ( Water levels )

நீர் நிலைகளில் இத்தனை வகையா?

(1) அகழி (Moat) - கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்.

(2) அருவி (Water Falls) - மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது.

(3) ஆழிக்கிணறு (Well in Sea-shore) - கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு.

(4) ஆறு (River) - பெருகி ஓடும் நதி.

(5) இலஞ்சி (Reservoir for drinking and other purposes) - பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம்.

(6) உறை கிணறு (Ring Well) - மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு.

(7) ஊருணி (Drinking water tank) - மக்கள் பருகும் நீர் நிலை.

(8) ஊற்று (Spring) - பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது.

(9) ஏரி (Irrigation Tank) - வேளாண்மை பாசன நீர் தேக்கம்.

(10) ஓடை (Brook) - அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் - எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர்.

(11) கட்டுங்கிணக் கிணறு (Built-in -well) - சரளை நிலத்தில் வெட்டி, கல், செங்கல் இவைகளால் சுவர்கட்டிய கிணறு.

(12) கடல் (Sea) - சமுத்திரம்.

(13) கண்மாய் (கம்மாய்) (Irrigation Tank) - பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர்.

(14) கலிங்கு (Sluice with many Venturis) - ஏரி முதலிய பாசன நீர் தேக்கம் உடைப்பெடுக்காமல் இருப்பதற்கு முன் எச்சரிக்கையாக கற்களால் உறுதியாக்கப்பட்டு பலகைகளால் அடைத்து திறக்கக்கூடியதாய் உள்ள நீர் செல்லும் அமைப்பு.

(15) கால் (Channel) - நீரோடும் வழி.

(16) கால்வாய் (Suppy channel to a tank) - ஏரி, குளம் ஊருணி இவற்றிக்கு நீர் ஊட்டும் வழி.

(17) குட்டம் (Large Pond) - பெருங் குட்டை.

(18) குட்டை (Small Pond) - சிறிய குட்டம். மாடு முதலியன் குளிப்பாட்டும் நீர் நிலை.

(19) குண்டம் (Small Pool) - சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை.

(20) குண்டு (Pool) - குளிப்பதற்கேற்ற ஒரு சிறு குளம்.

(21) குமிழி (Rock cut Well) - நிலத்தின் பாறையை குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த குடை கிணறு.

(22) குமிழி ஊற்று (Artesian fountain) -அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்று.

(23) குளம் (Bathing tank) - ஊர் அருகே உள்ள மக்கள் குளிக்கப் பயன்படும் நீர் நிலை.

(24) கூவம் (Abnormal well) - ஒரு ஒழுங்கில் அமையாத கிணறு.

(25) கூவல் (Hollow) - ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம்.

(26) வாளி (stream) - ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரப்பி மறுகால்வழி அதிக நீர் வெளிச் செல்லுமாறு அமைந்த அல்லது அமைக்கப்பட்ட நீர்நிலை.

(27) கேணி (Large Well) - அகலமும், ஆழமும் உள்ள ஒரு பெருங்கிணறு.

(28) சிறை (Reservoir) - தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை.

(29) சுனை (Mountain Pool) - மலையிடத்து இயல்பாயமைந்த நீர் நிலை.

(30) சேங்கை (Tank with Duck Weed) - பாசிக்கொடி மண்டிய குளம்.

(31) தடம் (Beautifully Constructed Bathing Tank) - அழகாக் நாற்பபுறமும் கட்டப்பட்ட குளம்.

(32) தளிக்குளம் (Tank Surrounding a Temple) - கோயிலின் நாற்புறமும் சூழ்ந்தமைந்த அகழி போன்ற நீர் நிலை.

(33) தாங்கல் (Irrigation tank) - இப்பெயர் தொண்ட மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியை குறிக்கும்.

(34) திருக்குளம் (Temple tank) - கோயிலின் அருகே அமைந்த நீராடும் குளம்.

(35) தெப்பக்குளம் (Temple tank with inside pathway along parapet wall) - ஆளோடியுடன் கூடிய, தெப்பம் சுற்றி வரும் குளம்.

(36) தொடு கிணறு (Dig well) - ஆற்றில் அவ்வப்பொழுது மணலைத்தோண்டி நீர் கொள்ளும் இடம்.

(37) நடை கேணி (Large well with steps on one side) - இறங்கிச் செல்லும் படிக்கட்டமைந்த பெருங்கிணறு.

(38) நீராவி (Bigger tank with center Mantapam) - மைய மண்டபத்துடன் கூடிய பெருங்குளம். ஆவி என்றும் கூறப்படும்.

(39) பிள்ளைக்கிணறு (Well in middle of a tank) - குளம் ஏரியின் நடுவே அமைந்த கிணறு.

(40) பொங்கு கிணறு (Well with bubbling spring) - ஊற்றுக்கால் கொப்பளித்துக் கொண்டே இருக்கும் கிணறு.

(41) பொய்கை(Lake) - தாமரை முதலியன மண்டிக்கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்டதொரு நீர் நிலை.

(42) மடு (Deep place in a river) - ஆற்றிடையுடைய அபாயமான பள்ளம்.

(43) மடை (Small sluice with single venturi) - ஒரு கண்ணே உள்ள சிறு மதகு.

(44) மதகு (Sluice with many venturis) - பெரிய மடை அடைப்பும் திறப்பும் உள்ள, பல கண்ணுள்ள ஏரி நீர் வெளிப்படும் மடை.

(45) மறு கால் (Surplus water channel) - அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால்.

(46) வலயம் (Round tank) - வட்டமாய் அமைந்த குளம்.

(47) வாய்க்கால் (Small water course) - ஏரி முதலிய நீர் நிலைகள்.

முடித்தவரை நீர்நிலைகளை அசுத்தம்
செய்யாமல் தூய்மையாக வைத்துக்கொள்வோம் நாம் அன்றாடம்
பயன்படுத்தும் நீரை அளவோடு பயன்படுத்துவோம் மழைநீரை சேமிப்போம் நீராதாரங்களை போற்றி   பாதுகாப்போம் வாழ்க இயற்கைவளங்களுடன் நன்றி