Sunday 2 April 2017

அகத்தி

இது வெற்றுஇலை கொடி படர்வது போல 20 முதல் 30 அடிகள் வரை  வளரும்,கொடிகால்களில் பயிரிடப்படும் மரவகை தமிழ்நாடு எங்கும் வளர்க்கப்படுகின்றது கீரை பூ வேர்கள் பட்டைகள் ஆகியவை மருத்துவ குணங்கள் கொண்டவை சாரை அகத்தி சீமைஅகத்தி சிற்றகத்தி  என பல பெயரால் அலைக்கப்படுகின்றது .
பொதுவாக அகத்தி வெப்பம் அகற்றியாகவும் இதன் கீரை மலமிளக்கியாகவும் , வேர்கள் உடல் பலம் தரும் மருந்தாகவும் பயன்படுகின்றது.அகத்தி செவ்வகத்தி என இருவகை உண்டு இலைகள்  பூக்கள் பட்டைகள் வேர்கள் அனைத்துமே பயன்படும் கைப்புசுவையுடையது .
(1) அகத்திக்கீரையை வாரம் ஒருமுறை சமைத்து உண்ண வெயிலில் அலைவதால் ஏற்படும் வெற்பம் மலைச்சிக்கல் ( காப்பி, டீ , தேநீர் போன்றவைகளை குடிப்பதால் எற்படும் பித்தம் ஆகியவை நீங்கும் .
(2) அகத்தி இலைசாறும் நல்லெண்ணையும் வகைக்கு ஒரு லிட்டர் கலந்து பதமாககாய்ச்சி வடிப்பதற்கு முன் கஸ்தூரிமஞ்சள்,சாம்பிராணி,
கிச்சிலிக்கிழங்கு,விளாமிச்சம்வேர் வகைக்கு 20 கிராம் தூள் செய்து
போட்டுகலக்கி வாரம் ஒருமுரை தலையில் இட்டு குளித்துவர பித்தம் தணிந்து தலைவலிநீங்கும் கண்களும் குளிர்ச்சிபெறும் .
(3) அகத்திமரப்பட்டையையும் , வேர்பட்டையையும் குடிநீராக்கி குடித்து வர சுரம் தாகம் கைகால் எரிவு மார்பு எரிச்சல் உள்ளங்கால் உள்ளங்கை எரிச்சல் நீர்க்கடுப்பு நீர்த்தாரை எரிவு அம்மை ஆகியவைகள் தீரும் இக்கீரை இடுமருந்தை முறிப்பது போல் மற்ற மருந்துகளின் செய்கைகளையும் கெடுக்குமாதலால் நோயாளிகள் மருந்துண்ணும் காலங்களில் (பருவத்தில் ) தவிர்த்தல் நல்லது .
படித்ததில் பிடித்தது நன்றி .

( முன்னோர்கள் வாக்கியம் )