Sunday, 28 March 2021

திருவொற்றியூர் காலடிபேட்டை சென்னை ஸ்ரீ குரு ராகவேந்திர சுவாமி அவர்களின் அவதார திருநாள் மற்றும் 7 ஆம் ஆண்டு குருபூஜை விழா

(    ஊ    ) 


 ஓம்   ஸ்ரீ   ராகவேந்திராய  நமஹ

ஓம்  ஸ்ரீ  ராகவேந்திரர் திருவடிகள்   போற்றி


திருவொற்றியூர் சென்னை காலடிபேட்டை  வா.உ.சி இரண்டாவது  தெரு  (  உப்பிரபாளையம்  ) 
 சென்னை  .  1  9   ல்   அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு   ஸ்ரீ  கண்ணபிரான்  திருக்கோயில்
ஸ்ரீ  காமகோடி மூலராம
ஸ்ரீ  ராகவேந்திர சுவாமி தேவஸ்தானத்தில்   ஸ்ரீ  குரு ராகவேந்திர சுவாமி அவர்களின் அவதார திருநாள் மற்றும்   7   ஆம் ஆண்டு குருபூஜை விழாவை முன்னிட்டு  உலக   நலம்  பெறவும்   எல்லா உயிர்களும்   இன்புற்று நலமுடன் வாழவும்  , 
 நல்லோர் நினைத்த நலம் பெறவும் 
சிறப்பு   பூஜைகள் வழிபாடுகள் பிரார்த்தனைகள் சார்வரி வருடம் பங்குனி மாதம்   1  5    ஆம் தேதி   2  8  /  3  / 2 0 2 1   மார்ச்  ஞாயிற்றுக்கிழமை அன்று சிறப்பாக நடைபெற்றது 
ஸ்ரீ  குரு ராகவேந்திர சுவாமி அவர்களின் அவதார திருநாள் மற்றும்   7   ஆம் ஆண்டு குருபூஜை   முன்னிட்டு   அன்று மாலை  6   மணி அளவில் மந்த்ராலய   மகான்  ஸ்ரீ   ஸ்ரீ   ஸ்ரீ ராகவேந்திர   சுவாமிகளின் திருவுருவச்   சிலை   திருவீதி உலா  அப்பண்ணாச்சாரியார் இயற்றிய   ஸ்ரீமத்   ராகவேந்திர ஸ்தோத்திர   பாராயணம் மற்றும் ராகவேந்திர சரிதம் 
 1  0  8   தாய்மார்கள் உடன் திருவிளக்கு ஏந்தி சென்னை 
 1  9   காலடிப்பேட்டை மேற்கு மாட வீதி  ,  வடக்கு மாடவீதி ,  செட்டி தெரு , கவரை தெரு  ,  சாத்தாங்காடு மெயின் ரோடு ,  வா .  உ  .  சி 
2 ஆவது தெரு வழியாக திருவீதி உலா வந்து சன்னிதானம் வந்தடைந்தது 
இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் 
ஆன்மீக அன்பர்கள் கலந்துகொண்டு மந்த்ராலய மகான் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ராகவேந்திர சுவாமியை மனதார போற்றி வழிபட்டனர்   இவ்விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு   அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது இவ்விழா  மிக  சிறப்பாக நடைபெற்றது , 
மேலும் இது போன்ற நிகழ்ச்சிகள் வீடியோக்கள் செய்திகளை கண்டு மகிழ 
 தமிழ் செய்தி சங்கமம் சேனலை யூட்டியூபில் சப்ஸ்கிரைப் லைக் கமெண்ட் மற்றும் ஷேர் செய்யுங்கள்   வாழ்க நலமுடன் , வாழ்க வளமுடன்  ,  
 வாழ்க மகிழ்வுடன்  எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க  ,  நல்லோர் நினைத்த நலம் பெறுக  ,
உலக நலம் பெறுக  , 
ஒளிப்பதிவு மற்றும் நிகழ்ச்சி தொகுப்பு 
டி . சூரியபிரசாத்
இந்த நிகழ்ச்சியை பார்த்து மகிழ்ந்த அனைவருக்கும் நன்றி வணக்கம் 

Friday, 16 October 2020

சித்தர்கள் அருள் குரு அருள் பெற சகல நன்மைகளும் பெற , சித்தர்கள் போற்றித் தொகுப்பு

(    ஊ   ) 


ஓம் முருகா போற்றி

சித்தர்கள் மகான்கள் ஞானிகளை போற்றிடுவோம் எண்ணிலா கோடி

சித்தரிஷி கணங்கள் திருவடிகள் போற்றி ,

இறை அருளால் சித்தர்கள் ஆசியால் நல்லதே நடக்கும் நல்லதே நிலைக்கும் , எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க , நல்லோர் நினைத்த நலம் பெறுக ,  உலக நலம் பெறுக

கீழே கொடுக்கப்பட்டுள்ள சித்தர்கள் போற்றி தொகுப்பை வியாழக்கிழமை  தோறும் போற்றி படித்து பாராயணம் செய்து மேலும் மாதம் ஒருவருக்கோ அல்லது இவருக்கோ பசித்த ஏழைகளுக்கு பசியாற்றியும் வந்தால் சகல நன்மைகளும் உண்டாகும் 

 🙏🏽 👇🏾

சகல நன்மைகள் தரும் 

சித்தர்கள் போற்றித் தொகுப்பு)



ஓம்  முருகர் திருவடிகள் போற்றி

ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி
ஓம் அகப்பைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் அசுவினித்தேவர் திருவடிகள் போற்றி
ஓம் அத்திரிமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் அநுமான் திருவடிகள் போற்றி
ஓம் அம்பிகானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் அருணகிரிநாதர் திருவடிகள் போற்றி
ஓம் அருள்நந்தி சிவாச்சாரியார் திருவடிகள் போற்றி
ஓம் அல்லமாபிரபு திருவடிகள் போற்றி
ஓம் அழுகண்ணிச்சித்தர் திருவடிகள் போற்றி 
ஓம் இடைக்காடர் திருவடிகள் போற்றி
ஓம் இராமலிங்க சுவாமிகள் திருவடிகள் போற்றி
ஓம் இராமதேவர் திருவடிகள் போற்றி
ஓம் இராமானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் உமாபதி சிவாச்சாரியார் திருவடிகள் போற்றி
ஓம் ஒளவையார் திருவடிகள் போற்றி
ஓம் கஞ்சமலைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கடைப்பிள்ளைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கடுவெளிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கண்ணானந்தர் திருவடிகள் போற்றி 
ஓம் கண்ணிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கனநாதர் திருவடிகள் போற்றி
ஓம் கணபதிதாசர் திருவடிகள் போற்றி
ஓம் கதம்பமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் கபிலர் திருவடிகள் போற்றி
ஓம் கமலமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் கருவூர்தேவர் திருவடிகள் போற்றி
ஓம் கல்லுளிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கலைக்கோட்டு முனிவர் திருவடிகள் போற்றி
ஓம் கவுபாலச்சித்தர் திருவடிகள் போற்றி 
ஓம் கனராமர் திருவடிகள் போற்றி
ஓம் காகபுஜண்டர் திருவடிகள் போற்றி
ஓம் காசிபர் திருவடிகள் போற்றி
ஓம் காலாங்கிநாதர் திருவடிகள் போற்றி
ஓம் குகை நமச்சிவாயர் திருவடிகள் போற்றி
ஓம் குதம்பைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் குமரகுருபரர் திருவடிகள் போற்றி
ஓம் குருதட்சணாமூர்த்தி திருவடிகள் போற்றி
ஓம் குருராஜர் திருவடிகள் போற்றி
ஓம் குறும்பைச்சித்தர் திருவடிகள் போற்றி 
ஓம் கூர்மானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் கொங்கணேஸ்வரர் திருவடிகள் போற்றி
ஓம் கோரக்கர் திருவடிகள் போற்றி
ஓம் கௌசிகர் திருவடிகள் போற்றி  
ஓம் கௌதமர் திருவடிகள் போற்றி
ஓம் சங்கமுனிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் சங்கர மகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் சங்கிலிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் சச்சிதானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் சட்டநாதர் திருவடிகள் போற்றி 
ஓம் சண்டிகேசர் திருவடிகள் போற்றி
ஓம் சத்யானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் சிவயோகமாமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சிவவாக்கியர் திருவடிகள் போற்றி
ஓம் சிவானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் சுகபிரம்மர் திருவடிகள் போற்றி
ஓம் சுந்தரானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் சுந்தரமூர்த்தி திருவடிகள் போற்றி
ஓம் சூதமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சூரியானந்தர் திருவடிகள் போற்றி 
ஓம் சூலமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சேதுமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சொரூபானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் ஜம்புமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் ஜமதக்னி திருவடிகள் போற்றி
ஓம் ஜனகர் திருவடிகள் போற்றி
ஓம் ஜனந்தனர் திருவடிகள் போற்றி
ஓம் ஜனாதனர் திருவடிகள் போற்றி
ஓம் ஜனக்குமாரர் திருவடிகள் போற்றி
ஓம் ஜெகநாதர் திருவடிகள் போற்றி 
ஓம் ஜெயமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் ஞானச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் டமாரானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் தன்வந்திரி திருவடிகள் போற்றி
ஓம் தாயுமான சுவாமிகள் திருவடிகள் போற்றி
ஓம் தானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் திருகோணச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் திருஞானசம்பந்தர் திருவடிகள் போற்றி
ஓம் திருநாவுக்கரசர் திருவடிகள் போற்றி
ஓம் திருமாளிகைதேவர் திருவடிகள் போற்றி 
ஓம் திருமூலதேவர் திருவடிகள் போற்றி
ஓம் திருவள்ளுவர் திருவடிகள் போற்றி
ஓம் தூர்வாசமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் தேரையர் திருவடிகள் போற்றி
ஓம் நந்தனார் திருவடிகள் போற்றி
ஓம் நந்தீஸ்வரர் திருவடிகள் போற்றி
ஓம் நாதாந்தசித்தர் திருவடிகள் போற்றி
ஓம் நாரதர் திருவடிகள் போற்றி
ஓம் நொண்டிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் பட்டினத்தார் திருவடிகள் போற்றி 
ஓம் பத்ரகிரியார் திருவடிகள் போற்றி
ஓம் பதஞ்சலியார் திருவடிகள் போற்றி
ஓம் பரத்துவாசர் திருவடிகள் போற்றி
ஓம் பரமானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் பராசரிஷி திருவடிகள் போற்றி
ஓம் பாம்பாட்டிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் பிங்களமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் பிடிநாகீசர் திருவடிகள் போற்றி
ஓம் பிருகுமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் பிரும்மமுனிவர் திருவடிகள் போற்றி 
ஓம் பீர்முகமது திருவடிகள் போற்றி
ஓம் புண்ணாக்கீசர் திருவடிகள் போற்றி
ஓம் புலத்தீசர் திருவடிகள் போற்றி
ஓம் புலிப்பாணிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் பூனைக்கண்ணார் திருவடிகள் போற்றி
ஓம் போகமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் மச்சமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் மஸ்தான் திருவடிகள் போற்றி
ஓம் மயூரேசர் திருவடிகள் போற்றி
ஓம் மாணிக்கவாசகர் திருவடிகள் போற்றி 
ஓம் மார்க்கண்டேயர் திருவடிகள் போற்றி
ஓம் மாலாங்கன் திருவடிகள் போற்றி
ஓம் மிருகண்டரிஷி திருவடிகள் போற்றி
ஓம் முத்தானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் மெய்கண்டதேவர் திருவடிகள் போற்றி
ஓம் மௌனசித்தர் திருவடிகள் போற்றி
ஓம் யாகோபு திருவடிகள் போற்றி
ஓம் யூகிமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் யோகச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் யோகானந்தர் திருவடிகள் போற்றி 
ஓம் ரோமரிஷி திருவடிகள் போற்றி
ஓம் வசிஷ்டமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் வரதரிஷி திருவடிகள் போற்றி
ஓம் வரரிஷி திருவடிகள் போற்றி
ஓம் வராகிமிகி திருவடிகள் போற்றி
ஓம் வால்மீகி திருவடிகள் போற்றி
ஓம் விசுவாமித்திரர் திருவடிகள் போற்றி
ஓம் வியாக்ரமர் திருவடிகள் போற்றி
ஓம் வியாசமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் விளையாட்டுச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் வேதாந்தச்சித்தர் திருவடிகள் போற்றி 
ஓம் எண்ணிலா கோடி சித்தரிஷி கணங்கள் திருவடிகள் போற்றிபோற்றி

மேற்கண்ட சித்தர்கள் போற்றி தொகுப்பை சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை குடும்பத்தில்  உள்ள அனைவரும் தினசரி காலையும் மாலையும் படித்து பாராயணம் செய்து போற்றி பூஜை செய்பவர்களுக்கு குடும்ப ஒற்றுமை புத்திரபாக்கியம்  உடல்  ஆரோக்கியம் போன்ற நல்வினைகள் பெருகி மதுஅருந்துதல் புலால் உண்ணுதல் சூதாடுதல் போன்ற தீவினைகள் நீங்கிவிடும் மேலும் மாதம் ஒருவருக்கோ அல்லது இவருக்கோ பசித்த ஏழைகளுக்கு பசியாற்றியும் வந்தால் பாவம் புண்ணியம் பற்றி உணர்ந்து வாழலாம் . மேலும்   மாணவர்களுக்கு  கல்வியில் தேர்ச்சியும் வேலைவாய்ப்பும் அமையும் தீராத நோய்வாய்ப்பட்டவர்கள் இந்த தெய்வீகமானான நூலைத் தொட்டு வணங்கி நித்திய பாராயணம்  செய்தும் அன்னதானமும் செய்துவந்தால் தீராத நோய்களெல்லாம் தீர்ந்து 
நீண்ட ஆயுளும் பெறுவார்கள்,
படித்ததில் பகிர்ந்தது 
அனைவரும் பயன்பெற 
படித்துவிட்டு ஷேர் செய்யுங்கள் 
 வாழ்க நலமுடன்  , வாழ்க வளமுடன் , வாழ்க மகிழ்வுடன் , நன்றி















Wednesday, 18 July 2018

🙏 தேவாரம் பாடல் பெற்ற 274-சிவாலயங்கள் 🙏  Devaram paadalpetra 274 sivaalayam 🙏 

சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில், கடலூர்
திருவேட்களம் பாசுபதேஸ்வரர் திருக்கோயில், கடலூர்
சிவபுரி உச்சிநாதர் திருக்கோயில், கடலூர்
திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் திருக்கோயில், கடலூர்
ஆச்சாள்புரம் சிவலோகத்தியாகர் திருக்கோயில், நாகப்பட்டினம்
மகேந்திரப் பள்ளி திருமேனியழகர் திருக்கோயில், நாகப்பட்டினம்
திருமுல்லைவாசல் முல்லைவன நாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
அன்னப்பன்பேட்டை சுந்தரேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
சாயாவனம் சாயாவனேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
பூம்புகார் பல்லவனேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
திருக்காட்டுப்பள்ளி ஆரண்யேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
திருக்குருகாவூர் வெள்ளடைநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
சீர்காழி சட்டைநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
திருக்கோலக்கா சப்தபுரீஸ்வரர் திருக்கோயில், 
நாகப்பட்டினம்
வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
குறுமாணக்குடி கண்ணாயிரமுடையார் திருக்கோயில், நாகப்பட்டினம்
கீழையூர் கடைமுடிநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
திருநின்றியூர் மகாலட்சுமீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
திருப்புன்கூர் சிவலோகநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
நீடூர் சோமநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
பொன்னூர் ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
திருவேள்விக்குடி கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
மேலத்திருமணஞ்சேரி ஐராவதேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
திருமணஞ்சேரி உத்வாகநாதர் சுவாமி திருக்கோயில், நாகப்பட்டினம்
கொருக்கை வீரட்டேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
தலைஞாயிறு குற்றம் பொறுத்த நாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
திருக்குரக்கா குந்தளேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
திருவாளப்புத்தூர் மாணிக்கவண்ணர் திருக்கோயில், நாகப்பட்டினம்
இலுப்பைபட்டு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
ஓமாம்புலியூர் பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், கடலூர்
கானாட்டம்புலியூர் பதஞ்சலீஸ்வரர் திருக்கோயில், கடலூர்
திருநாரையூர் சவுந்தர்யேஸ்வரர் திருக்கோயில், கடலூர்
மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், கடலூர்
பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
கஞ்சனூர் அக்னீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
திருக்கோடிக்காவல் கோடீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
திருமங்கலக்குடி பிராணநாதேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
திருப்பனந்தாள் அருணஜடேசுவரர் திருக்கோயில், தஞ்சாவூர்
திருவாய்பாடி பாலுகந்தநாதர் திருக்கோயில், தஞ்சாவூர்
சேங்கனூர் சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
திருந்துதேவன்குடி கற்கடேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
திருவிசநல்லூர் யோகநந்தீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
கொட்டையூர் கோடீஸ்வரர், கைலாசநாதர் திருக்கோயில், தஞ்சாவூர்
இன்னம்பூர் எழுத்தறிநாதர் திருக்கோயில், தஞ்சாவூர்
திருப்புறம்பியம் சாட்சிநாதேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
திருவிஜயமங்கை விஜயநாதேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
திருவைகாவூர் வில்வவனேசுவரர் திருக்கோயில், தஞ்சாவூர்
வடகுரங்காடுதுறை தயாநிதீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
திருப்பழனம் ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்,
தஞ்சாவூர்திருவையாறு ஐயாறப்பன் திருக்கோயில், தஞ்சாவூர்
தில்லைஸ்தானம் நெய்யாடியப்பர் திருக்கோயில், தஞ்சாவூர்
திருப்பெரும்புலியூர் வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
திருமழபாடி வைத்தியநாதர் திருக்கோயில், அரியலூர்
கீழப்பழுவூர் ஆலந்துறையார் திருக்கோயில், அரியலூர்
திருக்கானூர் செம்மேனிநாதர் திருக்கோயில், தஞ்சாவூர்
அன்பில் சத்தியவாகீஸ்வரர் திருக்கோயில், திருச்சி
மாந்துறை ஆம்ரவனேஸ்வரர் திருக்கோயில், திருச்சி
திருப்பாற்றுறை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில், திருச்சி
திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் திருக்கோயில், திருச்சி
திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில், திருச்சி
திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் திருக்கோயில், திருச்சி
ஈங்கோய்மலை மரகதாசலேஸ்வரர் திருக்கோயில், திருச்சி
அய்யர் மலை ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில், கரூர்
குளித்தலை கடம்பவனேஸ்வரர் திருக்கோயில், கரூர்
திருப்பராய்த்துறை பராய்த்துறைநாதர் திருக்கோயில், திருச்சி
உய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் திருக்கோயில், திருச்சி
உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில், திருச்சி
திருச்சி தாயுமானவர் திருக்கோயில், திருச்சி
திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் திருக்கோயில், திருச்சி
திருநெடுங்குளம் நெடுங்களநாதர் திருக்கோயில், திருச்சி
திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் திருக்கோயில், 
தஞ்சாவூர்
திருவாலம் பொழில் ஆத்மநாதேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
மேலைத்திருப்பூந்துருத்தி புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்

கண்டியூர், பிரம்மசிரகண்டீஸ்வர் திருக்கோயில், தஞ்சாவூர்
திருச்சோற்றுத்துறை சோற்றுத்துறை நாதர் திருக்கோயில், தஞ்சாவூர்
திருவேதிகுடி வேதபுரீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
தென்குடித்திட்டை வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
பசுபதிகோயில் பசுபதீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
சக்கரப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
திருக்கருகாவூர் முல்லைவனநாதர் திருக்கோயில், தஞ்சாவூர்
பாபநாசம் பாலைவனேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
நல்லூர் பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
ஆவூர் (கோவந்தகுடி) பசுபதீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
திருச்சத்தி முற்றம் சிவக்கொழுந்தீசர் திருக்கோயில், தஞ்சாவூர்
பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
கீழபழையாறை வடதளி சோமேசர் திருக்கோயில், தஞ்சாவூர்
திருவலஞ்சுழி திருவலஞ்சுழிநாதர் திருக்கோயில், தஞ்சாவூர்
கும்பகோணம் கும்பேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
கும்பகோணம் நாகேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
கும்பகோணம் சோமேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
திருநாகேஸ்வரம் நாகேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
திருவிடைமருதூர் மகாலிங்கம் திருக்கோயில், தஞ்சாவூர்
ஆடுதுறை ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
திருநீலக்குடி நீலகண்டேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
திருவைகல் வைகல்நாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
கோனேரிராஜபுரம் உமாமகேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
திருக்கோழம்பியம் கோகிலேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
குத்தாலம் உத்தவேதீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
தேரழுந்தூர் வேதபுரீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
மயிலாடுதுறை மாயூரநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
திருவிளநகர் உச்சிரவனேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
கீழப்பரசலூர் வீரட்டேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
செம்பொனார்கோவில் சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
புஞ்சை நற்றுணையப்பர் திருக்கோயில், நாகப்பட்டினம்
மேலப்பெரும்பள்ளம் வலம்புரநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
தலைச்சங்காடு சங்காரண்யேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
திருமயானம் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
திருவேட்டக்குடி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், புதுச்சேரி
திருத்தெளிச்சேரி பார்வதீஸ்வரர் திருக்கோயில், புதுச்சேரி
தருமபுரம் யாழ்மூரிநாதர் திருக்கோயில், புதுச்சேரி
திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில், காரைக்கால்
திருக்கொட்டாரம் ஐராவதீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
அம்பர், அம்பல் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
திருமாகாளம் மகாகாளநாதர் திருக்கோயில், திருவாரூர்
திருமீயச்சூர் மேகநாதர் திருக்கோயில், திருவாரூர்
திருமீயச்சூர் இளங்கோயில் சகலபுவனேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
சிதலப்பதி முக்தீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
செருகுடி சூஷ்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
அன்னியூர் அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
கருவேலி சற்குணேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
திருப்பந்துறை சிவானந்தேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
திருநறையூர் சித்தநாதேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
அழகாபுத்தூர் படிக்காசுநாதர் திருக்கோயில், தஞ்சாவூர்
சிவபுரம் சிவகுருநாதர் திருக்கோயில், தஞ்சாவூர்
சாக்கோட்டை அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
கருக்குடி சற்குணலிங்கேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
ஸ்ரீ வாஞ்சியம் வாஞ்சிநாதர் திருக்கோயில், திருவாரூர்
நன்னிலம் மதுவனேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
திருக்கொண்டீஸ்வரம் பசுபதீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
திருப்பனையூர் சவுந்தரேஸ்வர் திருக்கோயில், திருவாரூர்
திருவிற்குடி வீரட்டானேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
திருப்புகலூர் அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
திருப்புகலூர் வர்த்தமானீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
திருக்கண்ணபுரம் ராமநாதர் திருக்கோயில், திருவாரூர்
திருப்பயத்தங்குடி திருப்பயற்றுநாதர் திருக்கோயில், 
நாகப்பட்டினம்
திருச்செங்காட்டங்குடி உத்திராபசுபதீஸ்வரர் திருக்கோயில், 
திருவாரூர்
திருமருகல் ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
சீயாத்தமங்கை அயவந்தீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
நாகப்பட்டினம் காயாரோகணேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
சிக்கல் நவநீதேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
கீழ்வேளூர் கேடிலியப்பர் திருக்கோயில், திருவாரூர்
தேவூர் தேவபுரீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்

திருப்பள்ளி முக்கூடல் திருநேத்திரநாதர் திருக்கோயில், திருவாரூர்
திருவாரூர் தியாகராஜர் திருக்கோயில், திருவாரூர்
ஆருர் அரநெறி அசலேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
தூவாநாயனார் கோயில் தூவாய் நாதர் திருக்கோயில், திருவாரூர்
விளமல் பதஞ்சலி மனோகரர் திருக்கோயில், திருவாரூர்
கரைவீரம் கரவீரநாதர் (பிரம்மபுரீஸ்வரர்) திருக்கோயில், திருவாரூர்
மணக்கால்ஐயம்பேட்டை அபிமுக்தீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
திருத்தலையாலங்காடு நர்த்தனபுரீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
குடவாசல் கோணேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
திருச்சேறை சாரபரமேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
திருமெய்ஞானம் ஞானபரமேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
ஆண்டான்கோவில் சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
அரித்துவாரமங்கலம் பாதாளேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
அவளிவணல்லூர் சாட்சிநாதர் திருக்கோயில், திருவாரூர்
பரிதியப்பர்கோவில் பாஸ்கரேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
கோயில்வெண்ணி வெண்ணிகரும்பேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
பூவனூர் சதுரங்க வல்லபநாதர் திருக்கோயில், திருவாரூர்
பாமணி நாகநாதர் திருக்கோயில், திருவாரூர்
திருக்களர் பாரிஜாதவனேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
சித்தாய்மூர் பொன்வைத்தநாதர் திருக்கோயில், திருவாரூர்
கோவிலூர் மந்திரபுரீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
இடும்பாவனம் சற்குணநாதர் திருக்கோயில், திருவாரூர்
கற்பகநாதர்குளம் கற்பகநாதர் திருக்கோயில், திருவாரூர்
தண்டலச்சேரி நீள்நெறிநாதர் திருக்கோயில், திருவாரூர்
கோட்டூர் கொழுந்தீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
திருவண்டுதுறை வண்டுறைநாதர் திருக்கோயில், திருவாரூர்
திருக்கொள்ளம்புதூர் வில்வாரண்யேஸ்வரர் திருக்கோயில், 
திருவாரூர்
ஓகைப்பேரையூர் ஜகதீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
திருத்தங்கூர் வெள்ளிமலைநாதர் திருக்கோயில், திருவாரூர்
திருநெல்லிக்கா நெல்லிவனநாதர் திருக்கோயில், திருவாரூர்
திருநாட்டியத்தான்குடி ரத்தினபுரீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
திருக்காரவாசல் கண்ணாயிரநாதர் திருக்கோயில், திருவாரூர்
கோயில் கண்ணாப்பூர் நடுதறியப்பர் திருக்கோயில், திருவாரூர்
வலிவலம் மனத்துணைநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
கச்சனம் கைச்சின்னேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
திருக்குவளை பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
திருவாய்மூர் வாய்மூர்நாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
வேதாரண்யம் திருமறைக்காடர் திருக்கோயில், நாகப்பட்டினம்
அகஸ்தியன் பள்ளி அகத்தீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
கோடியக்காடு கோடிக்குழகர் திருக்கோயில், நாகப்பட்டினம்
மதுரை சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோயில், மதுரை
செல்லூர், மதுரை திருவாப்புடையார் திருக்கோயில், மதுரை
திருப்பரங்குன்றம் சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில், மதுரை
திருவேடகம் ஏடகநாதர் திருக்கோயில், மதுரை
பிரான்மலை கொடுங்குன்றநாதர் திருக்கோயில், சிவகங்கை
திருப்புத்தூர் திருத்தளிநாதர் திருக்கோயில், சிவகங்கை
திருப்புனவாசல் விருத்தபுரீஸ்வரர் திருக்கோயில், புதுக்கோட்டை
ராமேஸ்வரம் ராமநாதர் திருக்கோயில், ராமநாதபுரம்
திருவாடானை ஆதிரத்தினேஸ்வரர் திருக்கோயில், ராமநாதபுரம்
காளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரர் திருக்கோயில், சிவகங்கை
திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில், சிவகங்கை
திருச்சுழி திருமேனிநாதர் திருக்கோயில், விருதுநகர்
குற்றாலம் குற்றாலநாதர் திருக்கோயில், திருநெல்வேலி
திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோயில், திருநெல்வேலி
அவிநாசி அவிநாசியப்பர் திருக்கோயில், திருப்பூர்
திருமுருகன்பூண்டி திருமுருகநாதர் திருக்கோயில், திருப்பூர்
பவானி சங்கமேஸ்வரர் திருக்கோயில், ஈரோடு
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில், நாமக்கல்
வெஞ்சமாங்கூடலூர் கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோயில், 
கரூர்
கொடுமுடி மகுடேஸ்வரர் திருக்கோயில், ஈரோடு
கரூர் கல்யாணபசுபதீஸ்வரர் திருக்கோயில், கரூர்
திருவட்டத்துறை தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில், கடலூர்
பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் திருக்கோயில், கடலூர்
திருக்கூடலையாற்றூர். வல்லபேஸ்வரர் திருக்கோயில், கடலூர்
இராஜேந்திர பட்டினம் சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில், கடலூர்
தீர்த்தனகிரி சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில், கடலூர்
திருச்சோபுரம் மங்களபுரீஸ்வரர் திருக்கோயில், கடலூர்
திருவதிகை வீரட்டானேஸ்வரர் திருக்கோயில், கடலூர்
திருநாவலூர் பக்தஜனேஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்
விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில், கடலூர்
நெய்வணை சொர்ணகடேஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்
திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்
அறகண்டநல்லூர் அதுல்யநாதேஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்
டி. இடையாறு மருந்தீசர் திருக்கோயில், விழுப்புரம்
திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்
திருத்தளூர் சிஷ்டகுருநாதேஸ்வரர் திருக்கோயில், கடலூர்
திருவண்டார்கோயில் பஞ்சனதீஸ்வரர் திருக்கோயில், புதுச்சேரி
திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் திருக்கோயில், கடலூர்
திருப்பாதிரிபுலியூர் பாடலீஸ்வரர் திருக்கோயில், கடலூர்
கிராமம் சிவலோகநாதர் திருக்கோயில், விழுப்புரம்
பனையபுரம் பனங்காட்டீஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்
திருவாமத்தூர் அபிராமேஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில், 
திருவண்ணாமலை
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் (ஏகாம்பரேஸ்வரர்) திருக்கோயில், காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் திருமேற்றளீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்
ஓணகாந்தன்தளி ஓணகாந்தேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் கச்சிஅனேகதங்காவதேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் சத்யநாதர் திருக்கோயில், காஞ்சிபுரம்
குரங்கணில்முட்டம் வாலீஸ்வரர் திருக்கோயில், 
திருவண்ணாமலை
திருமாகறல் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்
செய்யாறு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை
திருப்பனங்காடு தாளபுரீஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை
திருவல்லம் வில்வநாதேஸ்வரர் திருக்கோயில், வேலூர்
திருமால்பூர் மணிகண்டீஸ்வரர் திருக்கோயில், வேலூர்
தக்கோலம் ஜலநாதீஸ்வரர் திருக்கோயில், வேலூர்
எலுமியன்கோட்டூர் தெய்வநாயகேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்
கூவம் திரிபுராந்தகர் திருக்கோயில், திருவள்ளூர்
திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருவள்ளூர்
திருப்பாசூர் வாசீஸ்வரர் திருக்கோயில், திருவள்ளூர்
பூண்டி ஊன்றீஸ்வரர் திருக்கோயில், திருவள்ளூர்
திருக்கண்டலம் சிவாநந்தீஸ்வரர் திருக்கோயில், திருவள்ளூர்
காளஹஸ்தி காளத்தியப்பர் திருக்கோயில், சித்தூர்
திருவொற்றியூர் படம்பக்கநாதர் திருக்கோயில், திருவள்ளூர்
பாடி, திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் திருக்கோயில், சென்னை
வடதிருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில், சென்னை
திருவேற்காடு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயில், சென்னை
திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோயில், சென்னை
திருக்கச்சூர் கச்சபேஸ்வரர், மருந்தீஸ்வரர், திருக்கோயில், காஞ்சிபுரம்
திருவடிசூலம் ஞானபுரீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்
திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்
அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்
திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்
ஒழிந்தியாம்பட்டு அரசலீஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்
இரும்பை மகாகாளேஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்
கிளியனூர் அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்
திருவஞ்சிக்குளம் மகாதேவர் திருக்கோயில், திருச்சூர்
திருக்கோகர்ணம் மகாபலேஸ்வரர் திருக்கோயில், உத்தர் கன்னடா
ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் திருக்கோயில், கர்நூல்
மன்னார் மாவட்டம் திருக்கேதீச்வரர் திருக்கோயில், இலங்கை
திருவிடைவாசல் புண்ணியகோடியப்பர் திருக்கோயில், திருவாரூர்
திருகோணமலை கோணேஸ்வரர் திருக்கோயில், இலங்கை.
அப்பர்  சிவனடிமை உழவாரம் மற்றும் சிவபூதகண வாத்தியகுழு வானவன் மாதேவிபுரம்.5 திருச்சிற்றம்பலம்

       சர்வம்சிவார்ப்பணம்

படித்ததில் பகிர்ந்தது 

Friday, 13 July 2018

வாட்ஸ் ஆப்பில் வலம்வந்தவை படித்ததில் பகிர்ந்தது

வாட்ஸ் ஆப்பில் வலம்வந்தவை படித்ததில் பகிர்ந்தது

🌞ஐயனே உன்னை வேடன்
         என்பான்   ஒருவன்!
🌞ஐயனே உன்னை வேண்டும்
           என்பான் ஒருவன்!
🌞ஐயனே உன்னை பித்தன்
            என்பான் ஒருவன்!
🌞ஐயனே உன்னை பிறை
              என்பான் ஒருவன்!
🌞ஐயனே உன்னை அன்பு
             என்பான் ஒருவன்!
🌞ஐயனே உன்னை அழிப்பவன்   
             என்பான் ஒருவன்!
🌞ஐயனே உன்னை உயிர்
              என்பான் ஒருவன்!
🌞ஐயனே உன்னை உதவாதவன்
             என்பான் ஒருவன்!
🌞ஐயனே உன்னை மனிதன்
             என்பான் ஒருவன்!
🌞ஐயனே உன்னைமடையன்
             என்பான் ஒருவன்!
🌞ஐயனே உன்னை தியானம்
            என்பான் ஒருவன்!
🌞ஐயனே உன்னை திமிராணவன்
             என்பான் ஒருவன்!
🌞ஐயனே உன்னை சுடுகாடு
             என்பான் ஒருவன்!
🌞ஐயனே உன்னை சுகமே
             என்பான் ஒருவன்!
🌞ஐயனே உம்மை யார் என்ன.     
              நினைத்தாலும்
      ஐயனே உன்னை யார் என்ன
             சொ ன்னாலும்
    ஐயனே நான் அறிவேன் நீ
              யார் என்பதை
     ஐயனே நீ அறிவாய் .நான்
               யார் என்பதை

தென்னாடுடைய சிவனே  போற்றி எந்நாட்டவர்க்கும் 

இறைவா போற்றி போற்றி
#சிவாயநம

ஓம் எண்ணிலா கோடி சித்தரிஷிகணங்கள் 
திருவடிகள் போற்றி      

Monday, 2 July 2018

சென்னையில் காரைக்கால் அம்மையாரின் மாங்கனி திருவிழா முதன்முறையாக நடைப்பெற்றது 28,6,2018 karaikal ammaiyar mangani mango festival chennai

சிவ பெருமானால் அம்மையே என அழைக்கப்பெற்றவரும்,63 நாயன்மார்களில் மூத்தவரும் நாயன்மார்களில் அமர்ந்த நிலையில் அருள்பவருமான எம்பிராட்டி காரைக்கால் அம்மையாரின்(குருபூஜை) மற்றும் மாங்கனி திருவிழா சென்னையில் முதன்முறையாக   நடைப்பெற்றது 
சென்ணை 
புதியவண்ணாரப்பேட்டை டாக்டர் அம்பேத்கர் நகர் ஜீவநகர் மெயின் ரோடில் அமைத்துள்ள மிகவும் 
பிரசித்தி பெற்ற 
அருள் நிறை பார்வதியம்மை உடனாய 
கைலாயநாதர் திருகோயிலில்  
ஒற்றியூர் கலியநாயனார் தொண்டர் அடியார் திருக்கூட்டம்
நடத்தும் காரைக்கால் அம்மையார்  குருபூஜை  மற்றும் மாங்கனி திருவிழா
அருள்நிறை பார்வதியம்மை உடனாய கைலாசநாதர் திருக்கோயில் ஆலயத்திலிருந்து புறப்பட்டு ஆதிமூலவிநாயகர் ஆலயத்தில் நிறைவுபெற்றது இவ்விழாவில் எராளமான சிவ அன்பர்கள் அடியார்கள் பக்தர்கள் கலந்து கொண்டு மாங்கனி திருவிழாவில் இறைவனுக்கு மாங்கனிகளை படைத்தும்  இறைவனுக்கு படைக்கப்பட்ட மாங்கனி பிரசாதத்தை மாங்கனிகளை வீசி இறைவனை வழிபட்டு அம்மையாரின் குருவருளையும் சிலபெருமானின் திருவருளையும் இறையருளும் பெற்றனர் இவ்விழாவை முன்ணிட்டு சிறப்பு  வழிபாடுகள் பூஜைககள் திருக்கைலாய வாத்தியங்கள் சங்கநாதம் முழங்க சிறப்பாக நடைபெற்றது விழாவில் கலந்துகொண்ட அடியார்கள் மற்றும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது  அன்னம்பாளிப்பும் நடைபெற்றது இவ்விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது

முருகர் அறுபடை வீடுகள் murugar Arupadai veedugal ( ஓம் முருகர் திருவடிகள் போற்றி  )

அறுபடை வீடுகள்

01.திருப்பரங்குன்றம்

ஆறுபடை வீடுகளில்'' முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், முருகன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார். அசுரனை வென்ற அவர் இந்த தலத்தில் இந்திரனின் மகளான தெய்வானையை திருமணம் செய்து கொண்டார். முருகன் அமர்ந்த கோலத்தில் இருப்பது சிறப்பு. இத்தலத்தில் மலை வடிவில் சிவபெருமான் அருள்புரிகிறார். சிவனின் பெயரால் இத்தலம் "திருப்பரங்குன்றம்' எனப்படுகிறது. முருகனின் அருகில் நாரதர் தாடியுடன் இருப்பது குறிப்பிடத்தக்கது.

02. திருச்செந்தூர்

முருகனின் இரண்டாம் படைவீடு திருச்செந்தூர். இது கடலோரத்தில் அலைகள் வீச அமைந்துள்ளதால் அலைவாய் என்ற பெயரும் உண்டு. இந்ததலம் கைலாயத்திற்கு சமமானது. முருகப்பெருமான் சூரர்களை வெல்வதற்கு முன்னும் பின்னும் தங்கிய இடம். இவரது திருவடிகளை படகிற்கு சமமாக சொல்கிறார்கள். அதனால் தான் கடலின் முன்புள்ள இத்தலத்திலுள்ள முருகனின் திருவடிகளை வணங்கி பிறவிப் பெருங்கடலை கடப்பதாக நம்பிக்கையுள்ளது.

03. பழநி

சித்தர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி பழநி. மருந்தே மலையாக அமைந்த தலம். பழநியில் கால்வைத்தாலே பாதி நோய் தீரும். மலை ஏறிவிட்டால் முழு நோயும் நீங்கும். 12 ஆண்டுகளுக்கு தொடர்ந்து காலை 4 மணிக்கு எழுந்து நீராடி, கிரிவலம் வந்து, மலை மீது ஏறி, முருகன் திருவடி நாடி, தியானத்தில் அமர்ந்தால் அனைத்தும் ஒன்றே என்ற அற்புத தத்துவ விளக்கம் பெறுவதுடன், வாழ்க்கை என்றால் இன்னதென்று உணரும் ஞானஒளியையும் பெறலாம். அபிஷேகம் செய்யப்பட்ட பஞ்சாமிர்தம், பால், தீர்த்தம் சாப்பிட்டால் நோய் தீரும். ஒரு கோயிலுக்கு அபூர்வ சக்தி அளிப்பவை அங்குள்ள மூர்த்தி (சிலை), தீர்த்தம், தலம் (அமைவிடம்) ஆகியவை. பழநி கோயிலுக்கு அபூர்வ சக்தி அளிப்பது சிலை. போகர் சித்தரால் நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது.

04. சுவாமிமலை சிவகுருநாதன்

சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்தை உபதேசித்து சுவாமி மலையில் சுவாமிநாதனாக முருகப்பெருமான் வீற்றிருக்கின்றார். "தன்னைவிட தன் பிள்ளைகள் அறிவுடையவர்களாக இருப்பது இப்பரந்த உலகத்தில் வாழும் உயிர்களுக்கெல்லாம் நன்மையைத் தரும்' என்கிறார் வள்ளுவர். அந்த வழியில் தன் பிள்ளையின் வாயால் மந்திரத்தின் பொருளை கேட்டு மகிழ்ந்தார் சிவன். அதுவும் தன் பிள்ளை குருவாக வீற்றிருக்க, தானே சீடனைப் போல் அமர்ந்து கேட்டார். அதனால் ""சிவகுருநாதன்'' என்ற பெயரை முருகப்பெருமான் பெற்றார்.

05. திருத்தணி முருகன்

அழகே உருவாக பொலிவுடன் காட்சி தரும் முருகன், திருத்தணியில் மார்பில் காயம்பட்ட தடத்துடன் இருக்கிறார். இதனை சூரனுடன் போரிட்ட போது ஏற்பட்ட காயம் என்கிறார்கள். திருச்செந்தூரில் சூரனை வதம் செய்த முருகன் இங்கு வந்து கோபம் தணிந்து சாந்தமாக அமர்ந்தார். கோபம் தணித்த இடம் என்பதால் "தணிகை' என இவ்வூர் பெயர் பெற்றது. அபிஷேக சந்தனம் இத்தலத்தில் பிரசாதமாக தரப்படுகிறது. இ தனை பக்தர்கள் நீரில் கரைத்து குடிக்கின்றனர். இதனால், நோய் நீங்கும் என்பது நம்பிக்கை.

06. சோலைமலை

அறுபடைவீடுகளில் ஆறாவது வீடாக விளங்குவது சோலைமலை. மதுரையிலிருந்து 20 கி.மீ., தொலைவில் உள்ளது. அவ்வைக்கிழவியிடம்,"" சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?,'' என்று சாதுர்யத்துடன் உரையாடிய முருகன், இங்கு கோயில் கொண்டிருக்கிறார். உலக உயிர்கள் அனைத்தும் பழங்கள். அவற்றின் மீது பாசபந்தம் என்னும் மண் ஒட்டியிருக்கிறது. அதனைப்போக்க கல்வியறிவு மட்டும் போதாது. இறையருள் என்னும் மெய்யறிவும் வேண்டும் என்பதை உணர்த்த சுட்டிப்பையனாக வந்து திருவிளையாடல் புரிந்தவர் இவர். தன்னை வழிபட்டவர்க்கு கல்வியறிவும், ஞானமும் தருபவராக அருள்கிறார். ""அறிவால் அறிந்து உன் இருதாள் இறைஞ்சும் அடியார் இடைஞ்சல் களைவோனே'' என்று அருணகிரிநாதர் இவரைப் போற்றியுள்ளார்.

ஓம் முருகர் திருவடிகள் போற்றி
ஓம் எண்ணிலா கோடி சித்தரிஷிகணங்கள் திருவடிகள் போற்றி போற்றி

படித்ததில் பகிர்ந்தது

Friday, 29 June 2018

# Perumal potri , 108 perumal potri , 108 பெருமாள் போற்றி 108 Perumal names

1ஓம் ஹரி ஹரி போற்றி
2. ஓம் ஸ்ரீஹரி போற்றி
3. ஓம் நர ஹரி போற்றி
4. ஓம் முர ஹரி போற்றி
5. ஓம் கிருஷ்ணா ஹரி போற்றி
6. ஓம் அம்புஜாஷா போற்றி
7. ஓம் அச்சுதா போற்றி
8. ஓம் உச்சிதா போற்றி
9. ஓம் பஞ்சாயுதா போற்றி
10. ஓம் பாண்டவர் தூதா போற்றி
11. ஓம் லட்சுமி சமேதா போற்றி
12. ஓம் லீலா விநோதா போற்றி
13. ஓம் கமல பாதா போற்றி
14. ஓம் ஆதி மத்தியாந்த ரகிதா போற்றி
15. ஓம் அநாத ரக்ஷகா போற்றி
16. ஓம் அகிலாண்டகோடி போற்றி
17. ஓம் பரமானந்தா போற்றி
18. ஓம் முகுந்தா போற்றி
19. ஓம் வைகுந்தா போற்றி
20. ஓம் கோவிந்தா போற்றி
21. ஓம் பச்சை வண்ணா போற்றி
22. ஓம் கார்வண்ணா போற்றி
23. ஓம் பன்னகசயனா போற்றி
24. ஓம் கமலக்கண்ணா போற்றி
25. ஓம் ஜனார்த்தனா போற்றி
26. ஓம் கருடவாகனா போற்றி
27. ஓம் ராட்சஷ மர்த்தனா போற்றி
28. ஓம் காளிங்க நர்த்தனா போற்றி
29. ஓம் சேஷசயனா போற்றி
30. ஓம் நாராயணா போற்றி
31. ஓம் பிரம்ம பாராயணா போற்றி
32. ஓம் வாமனா போற்றி
33. ஓம் நந்த நந்தனா போற்றி
34. ஓம் மதுசூதனா போற்றி
35. ஓம் பரிபூரணா போற்றி
36. ஓம் சர்வ காரணா போற்றி
37. ஓம் வெங்கட ரமணா போற்றி
38. ஓம் சங்கட ஹரனா போற்றி
39. ஓம் ஸ்ரீதரா போற்றி
40. ஓம் துளசிதரா போற்றி
41. ஓம் தாமோதரா போற்றி
42. ஓம் பீதாம்பரா போற்றி
43. ஓம் பலபத்ரா போற்றி
44. ஓம் பரமதயா பரா போற்றி
45. ஓம் சீதா மனோகரா போற்றி
46. ஓம் மச்ச கூர்ம அவதாரா போற்றி
47. ஓம் பரமேஸ்வரா போற்றி
48. ஓம் சங்கு சக்கரா போற்றி
49. ஓம் சர்வேஸ்வரா போற்றி
50. ஓம் கருணாகரா போற்றி
51. ஓம் ராதா மனோகரா போற்றி
52. ஓம் ஸ்ரீரங்கா போற்றி
53. ஓம் ஹரிரங்கா போற்றி
54. ஓம் பாண்டுரங்கா போற்றி
55. ஓம் லோகநாயகா போற்றி
56. ஓம் பத்மநாபா போற்றி
57. ஓம் திவ்ய சொரூபா போற்றி
58. ஓம் புண்ய புருஷா போற்றி
59. ஓம் புருஷாத்தமா போற்றி
60. ஓம் ஸ்ரீ ராமா போற்றி
61. ஓம் ஹரிராமா போற்றி
62. ஓம் பலராமா போற்றி
63. ஓம் பரந்தாமா போற்றி
64. ஓம் நரஸிம்ஹா போற்றி
65. ஓம் திரிவிக்ரமா போற்றி
66. ஓம் பரசுராமா போற்றி
67. ஓம் சகஸ்ரநாமா போற்றி
68. ஓம் பக்தவத்சலா போற்றி
69. ஓம் பரமதயாளா போற்றி
70. ஓம் தேவானுகூலா போற்றி
71. ஓம் ஆதிமூலா போற்றி
72. ஓம் ஸ்ரீ லோலா போற்றி
73. ஓம் வேணுகோபாலா போற்றி
74. ஓம் மாதவா போற்றி
75. ஓம் யாதவா போற்றி
76. ஓம் ராகவா போற்றி
77. ஓம் கேசவா போற்றி
78. ஓம் வாசுதேவா போற்றி
79. ஓம் தேவதேவா போற்றி
80. ஓம் ஆதிதேவா போற்றி
81. ஓம் ஆபத் பாந்தவா போற்றி
82. ஓம் மகானுபாவா போற்றி
83. ஓம் வசுதேவ தனயா போற்றி
84. ஓம் தசரத தனயா போற்றி
85. ஓம் மாயாவிலாசா போற்றி
86. ஓம் வைகுண்டவாசா போற்றி
87. ஓம் சுயம்பிரகாசா போற்றி
88. ஓம் வெங்கடேசா போற்றி
89. ஓம் ஹ்ருஷி கேசா போற்றி
90. ஓம் சித்தி விலாசா போற்றி
91. ஓம் கஜபதி போற்றி
92. ஓம் ரகுபதி போற்றி
93. ஓம் சீதாபதி போற்றி
94. ஓம் வெங்கடாசலபதி போற்றி
95. ஓம் ஆயாமாயா போற்றி
96. ஓம் வெண்ணெயுண்ட நேயா போற்றி
97. ஓம் அண்டர்களேத்தும் தூயா போற்றி
98. ஓம் உலகமுண்டவாயா போற்றி
99. ஓம் நானாஉபாயா போற்றி
100. ஓம் பக்தர்கள் சகாயா போற்றி
101. ஓம் சதுர்புஜா போற்றி
102. ஓம் கருடத்துவஜா போற்றி
103. ஓம் கோதண்டஹஸ்தா போற்றி
104. ஓம் புண்டரீகவரதா போற்றி
105. ஓம் விஷ்ணு போற்றி
106. ஓம் பகவானே போற்றி
107. ஓம் பரமதயாளா போற்றி
108. ஓம் நமோ நாராயணா போற்றி! போற்றி!!

மேற்கண்ட போற்றி தொகுப்பை வீட்டில் திருவிளக்கேற்றி இதைப்படிப்பவர்களுக்கு  திருமாலின் திருவருளும், மகாலட்சுமியின் பேரருளும் பெற்று சகலசெல்வங்களும் 
எற்படும்  சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை குடும்பத்தில்  உள்ள அனைவரும் தினசரி காலையும் மாலையும் படித்து பாராயணம் செய்து போற்றி பூஜை செய்துவந்தால்  செல்வச்செழிப்புடன் குடும்ப ஒற்றுமை  உடல்  ஆரோக்கியம் போன்ற நல்வினைகள் பெருகிடும் மேலும் மாதம் ஒருவருக்கோ அல்லது இவருக்கோ பசித்த ஏழைகளுக்கு பசியாற்றியும் வந்தால் சகலநன்மைகளும் பெருகிடும்  தெய்வீகமானான 108 பெருமாள் போற்றியை  நித்திய பாராயணம்  செய்தும் அன்னதானமும் செய்துவந்தால் தீராத நோய்களெல்லாம் தீர்ந்து 
நீண்ட ஆயுள் எற்படும் .
அனைவரும் பயன்பெற 
படித்துவிட்டு ஷேர் செய்யுங்கள் 
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் 
படித்ததில் பகிர்ந்தது 

நன்றி.